Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக்: பிரான்ஸ் | போர்துகல் அணிகள் வெற்றி!

யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக்: பிரான்ஸ் | போர்துகல் அணிகள் வெற்றி!

1 minutes read

யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நான்காவது கட்ட போட்டிகளில், பிரான்ஸ், போர்துகல், பெல்ஜியம், டென்மார்க் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

இதில் குழு சி பிரிவில் குரேஷியா அணியும் பிரான்ஸ் அணியும் மோதிய போட்டியில், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதேபோல குழு சி பிரிவில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், போர்துகல் அணியும், சுவீடன் அணியும் மோதின. இப்போட்டியில் போர்துகல் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

குழு பி பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், பெல்ஜியம் அணியும், ஐஸ்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

குழு பி பிரிவில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், டென்மார்க் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More