Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட் | உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு!

இந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட் | உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு!

1 minutes read

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான, உத்தேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், மூன்று ரி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவுஸ்ரேலியாவுக்கு புறப்படும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடைமுறையாக சிட்னியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவுஸ்ரேலிய வீரர்களும் அங்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அச்சமயம் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சம்மதம் தெரிவித்ததும் அதிகாரபூர்வ போட்டி அட்டவணை வெளியாகும்.

உத்தேச பட்டியலின்படி இந்திய அணி நவம்பர் 27ஆம், 29ஆம் திகதிகளில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை சிட்னியிலும், டிசம்பர் 1ஆம் திகதி மூன்றாவது போட்டியில் கான்பெர்ராவிலும் விளையாடுகிறது.

இவ்விரு நகரங்களிலேயே டிசம்பர் 4ஆம் 6ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் ரி-20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 17ஆம் திகதி அடிலெய்டில் நடைபெறுகின்றது.

இதனைத்தொடர்ந்து மெல்பேர்னில் டிசம்பர் 26ஆம் திகதியும், ஜனவரி 7ஆம் திகதி சிட்னியிலும், பிரிஸ்பேனில் ஜனவரி 15ஆம் திகதியும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More