Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் IPL பிளே | ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் | திகதி மற்றும் இடங்கள் அறிவிப்பு!

IPL பிளே | ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் | திகதி மற்றும் இடங்கள் அறிவிப்பு!

1 minutes read
IPL பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் - திகதி மற்றும் இடங்கள் அறிவிப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 19 ஆம் திகதி தொடங்கியது. 8 அணிகள் மோதும் 56 லீக் ஆட்டங்கள் ஷார்ஜா, டுபாய், அபு தாபி நகரங்களில் நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் நவம்பர் 3 ஆம் திகதி முடிவடைகிறது.

10 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் எங்கே? இறுதிப் போட்டி எங்கே? என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

நவம்பர் 5 ஆம் திகதி குவாலிபையர்-1 (பாயின்ட் டேபிளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்) டுபாயில் நடைபெறுகிறது.

நவம்பர் 6 ஆம் திகதி எலிமினேட்டர் (3 வது மற்றும் 4 வது இடம் பெறும் அணிகள்) அபு தாபியில் நடக்கிறது.

நவம்பர் 8 ஆம் திகதி குவாலிபையர் 2 (குவாலிபையர் 1 தோல்வி – எலிமினேட்டர் வெற்றி) அபு தாபியில் நடக்கிறது.

நவம்பர் 10 ஆம் திகதி (குவாலிபையர் 1 வெற்றி – குவாலிபையர் 2 வெற்றி) இறுதிப் போட்டி நடக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More