Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முதன்முறையாக டீம் இந்தியாவிற்காக பந்து வீசிய நடராஜன்

முதன்முறையாக டீம் இந்தியாவிற்காக பந்து வீசிய நடராஜன்

1 minutes read

ஐபிஎல் 13-வது சீசன் கடந்த 10-ந் திகதி முடிவடைந்தது. இந்தத் தொடரில் மிகவும் உற்று கவனிக்கப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜனும் ஒருவர். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர்பெற்ற நடராஜன், இந்த சீசனில் டெத் ஓவர்களில் அசத்தினார். துல்லியமான யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

எலிமினேட்டர் சுற்றில் டி வில்லியர்ஸை துல்லியமான யார்க்கர்களால் வீழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனால் டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டி20 அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் நேற்று பயிற்சியை ஆரம்பித்தனர். இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More