Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் LPLஇல் விளையாடும் யாழ், கிளிநொச்சி மட்டக்களப்பு இளைஞர்கள்

LPLஇல் விளையாடும் யாழ், கிளிநொச்சி மட்டக்களப்பு இளைஞர்கள்

2 minutes read

எல்பிஎல் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் யழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர்கள் பற்றிய அறிவிப்பை Jaffna Stallions அறிவித்துள்ளது. Jaffna Stallions வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு…

Jaffna Stallions அணியின் 20 பேர் கொண்டவீரர்கள் குழாமில் இடம் பிடித்திருந்த யாழ் மத்தியகல்லூரி U19 கிரிக்கெட் அணியின் தலைவரான விஜயகாந் வியாஸ்காந், Lanka Premier League (LPL) சுற்றுப் போட்டிகளில் ஆடப்போகும் Jaffna Stallions அணியின், விளையாடும் சாத்தியமான அணிக்கு (probable squad) தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

Jaffna Stallionsன் இந்த முடிவு, பின்தங்கிய பிரதேச வீரர்களிற்கு போட்டிகளில் விளையாடுவதற்கு சந்தர்ப்பங்கள் அளிப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

வடக்குமாகாண U19 அணி, யாழ்ப்பாணமாவட்ட U19 அணி, யாழ் மத்திய கல்லூரி U19 அணி என்பவற்றுக்குத் தலைமை தாங்கிய அனுபவமுள்ள வியாஸ்காந், இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இலங்கைத் தேசியU19 அணியிற்கும் விளையாடிய அனுபவமுடையவர்.

Leg break பந்துவீச்சாளராக Jaffna Stallions அணியில் இடம்பிடித்திருக்கும் வியாஸ்காந்த், துடுப்பாட்டத்திலும் விக்கட் காப்பிலும் திறமைகளை வெளிப்படுத்தி, ஒரு சகலதுறை ஆட்டக்காரராக பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.

LPL போட்டிகளில் ஆடச்சாத்தியமுள்ள குழாமிற்கு (probable squad) தெரிவானதையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வியாஸ்காந்“ எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். எனக்குபோட்டியில் விளையாடச் சந்தர்ப்பம் கிடைத்தால், நிச்சயமாக அணியின் வெற்றிக்காக எனது முழுமையான பங்களிப்பை வழங்குவேன்”என்றார்.

Jaffna Stallions குழாமில், வடக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களான கனகரத்தினம் கபில்ராஜும் தெய்வேந்திரம் தினோஷனும், உபரி (stand by) வீரர்களாக தொடர்ந்தும் இடம்பெறுவார்கள். இவர்கள் இருவரும் பல்லேகலவில் இடம்பெற்ற பயிற்சிப் பாசறையில் பங்குபற்றியதுடன், Jaffna Stallions அணியுடன் LPL ஆட்டங்கள் இடம்பெறும் அம்பாந்தோட்டையில் தங்கியிருப்பார்கள்

வடக்குகிழக்கு மாகாணத்தில் இருந்து மேலும் இரண்டு திறமையான கிரிக்கெட் வீரர்களிற்கு Jaffna Stallions அணியின் பயிற்சிப் பந்து வீச்சாளர்களாக (Net Bowlers) பயிற்சிகளில் ஈடுபட ஒரு அரியவாய்ப்பையும், Jaffna Stallions அணியினர் வழங்கியுள்ளார்கள்.

மட்டக்களப்பைச் சேர்ந்தS.தேனுரதன், கிளிநொச்சியைச் சேர்ந்தS. விஜயராஜ், மற்றும் கொழும்பில் இருந்து C.T.A.ஷாஃப்டர் ஆகியோருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வியாஸ்காந்தை விளையாடச் சாத்தியமான அணிக்கு (probable squad) தெரிவு செய்யும் தைரியமான முடிவை எடுத்த Jaffna Stallions அணியின் தலைவரான திஸரபெரேரா, தனக்கு இளம் கிரிக்கெட்வீரர்களின் திறமையில் அபார நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.

“இலங்கை கிரிக்கெட் அணிக்கு திறமையான வீரர்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் நோக்கத்துடன், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த, திறமையான கிரிக்கெட் வீரர்களிற்கு Jaffna Stallions அணி தொடர்ந்தும் விளையாடும் வாய்ப்புக்களை வழங்கும்” என்றும் திஸரபெரேரா தெரிவித்தார்.

Jaffna Stallions அணியின் முதன்மை பயிற்றுவிப்பாளராக Thilina Kandamby யும், அணியின் தலைவராக Thisara Perera கடமையாற்றுவார்கள்; இவர்கள் இருவரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேசப்போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள கிரிக்கெட் வீரர்கள் ஆவார்கள்.

Jaffna Stallions அணியில்அங்கம் வகிக்கும் 20 கிரிக்கெட் வீரர்களில் பதினான்கு உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஆறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More