Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் LPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல | மாலிங்க

LPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல | மாலிங்க

4 minutes read
லசித் மாலிங்க தரப்படுத்தலில் முன்னேற்றம் - Thamilan - Sri Lanka News

சர்வதேச லீக் தொடரொன்றில் விளையாடுவதென்பது கடைக்குப் போய் பாண் வாங்குவது போன்ற இலகுவான விடயமல்ல எனவும், பல மாதங்களாக விளையாடாமல் இருந்துவிட்டு உடனே போட்டிகளில் களமிறங்குவது கடினமான விடயம் எனவும் இலங்கை T20 அணியின் தவைரும், நட்சத்திர வேகப் பந்துவீச்சாளருமான லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஹம்பாந்தோட்டையை சென்றடைந்து தத்தமது பயிற்சிகளை இன்று (23) முதல் ஆரம்பித்தன.

இந்த நிலையில், காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் உள்ளூர் நட்சத்திர வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட லசித் மாலிங்க, போதியளவு பயிற்சியின்மை காரணமாக இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து சொந்த நாட்டில் நடைபெறுகின்ற சர்வதேச T20 தொடரொன்றில் மாலிங்கவுக்கு ஏன் விளையாட முடியவில்லை என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையின் சிங்கள பத்திரிகையான அருண பத்திரிகைக்கு மாலிங்க வழங்கிய பேட்டியொன்றில், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியமைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டியில்,

”எல்.பி.எல் தொடரில் விளையாடுவது மிகப் பெரிய விடயமா என்று சிலர் சொல்வார்கள்அதேபோலஉலகம் முழுவதும் நடைபெறுகின்ற T20 லீக்கில் விளையாடிய எனக்கு இந்த தொடருக்காக மட்டும் விசேடமாக ஆயத்தமாக வேண்டுமா என்றும் கேட்பார்கள்.

அவ்வாறு சொல்கின்றவர்களுக்கு இது கடைக்குச் சென்று பாண் ஒன்றை வாங்கிக் கொண்டு வருகின்ற சிறிய வேலையாக இருக்கலாம்ஆனால், பல மாதங்களாக பயிற்சிகள் இல்லாமல் திடீரென்று எவ்வாறு போட்டித் தொடரொன்றில் விளையாட முடியும்வீட்டில் உள்ள ஜிம்மில் பயிற்சிகளை எடுத்துக் கொண்டதற்காக மைதானத்துக்கு வந்து உடனே பந்துவீச முடியாது.    

நான் போட்டியொன்றில் யோக்கர் பந்தொன்றை வீசுவதற்கு முன் 1000 யோக்கர் பந்துகளை வலைப்பயிற்சிகளில் வீசுவேன். அவ்வாறு பயிற்சி இல்லாமல் யோக்கர் வீசுவது மிகவும் சுலபமான விடயமல்ல.

எனவே, உரிய பயிற்சிகள் இல்லாமல் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் யோக்கர் பந்தொன்றை வீச முடியாமல் போனால் .பி.எல் தொடரில் நன்றாக யோக்கர் வீசுகின்ற லசித் மாலிங்கவுக்கு எல்.பி.எல் தொடரில் யோக்கர் ஒன்றை வீச முடியாதா என்று எமது நாட்டு ரசிகர்கள் கேட்பார்கள்ஆகையால்எம்மைச் சுற்றியுள்ள இவ்வாறான விடயங்களை நிறைய பேர் புரிந்துகொள்வதில்லை.

கடந்த வருடம் .பி.எல் போட்டியில் விளையாடிவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் இருந்து புறப்பட்டு வந்து மறுநாள் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் விளையாடினேன்அப்போது என்னிடம் அவ்வாறானதொரு உடற்தகுதி இருந்ததால் தான் நான் இங்கு வந்து களைப்பையும் பொருட்படுத்தாமல் விளையாடினேன்.

நான் சுமார் 8 மாதங்களாக பந்தை கையில் எடுக்கவே இல்லை. ஆகவே எவ்வாறு என்னால் எல்.பி.எல் தொடரில் பந்துவீச முடியும்? எமது வாயால் இலகுவாக நிறைய விடயங்களை சொல்ல முடியும். ஆனால் அதில் உள்ள கஷ்ட, நஷ்டம் என்ன என்பதை அதைச் செய்கின்றவருக்கு தான் நன்கு தெரியும்” என லசித் மாலிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் மற்றுமொரு தேசிய பத்திரிகையான தினமின பத்திரிகைக்கு எல்.பி.எல் தொடரின் பணிப்பாளர் ரவீன் விக்ரமரட்ன அளித்த பேட்டியில்,

லசித் மாலிங்க லங்கா ப்ரீமியர் லீக்கில் இருந்து விலகியது அவரது தனிப்பட்ட முடிவும் எனவும், அதற்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More