Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி வீரருக்கு கொரோனா

நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி வீரருக்கு கொரோனா

1 minutes read
NZ சென்ற Pak அணி வீரருக்கு கொரோனா

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2 – 0 என நியூசிலாந்து வென்றுள்ளது.

இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3 ம் திகதி ஹாமில்டனிலும், 2 வது ஆட்டம் டிசம்பா் 11 ம் திகதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

இதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் மூன்று டி20, இரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டிசம்பர் 18 இல் டி20 தொடரும் டிசம்பர் 26 இல் டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளன.

லாகூரிலிருந்து நியூசிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதியானது. கரோனா அறிகுறிகள் தென்பட்ட ஃபகார் ஸமான், அணியிலிருந்து விலகினார். எனினும் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய பாகிஸ்தான் அணியினருக்கு முதலில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதன்பிறகு மற்றொரு நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

நவம்பர் 24 அன்று நியூசிலாந்துக்கு வந்த பாகிஸ்தான் வீரர்கள், 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் வீரர், பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 46 பேருக்கும் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இத்தகவலை நியூசிலாந்தின் சுகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இருவருடைய பரிசோதனைகளின் முடிவுகள் குறித்து விசாரணை செய்து வருவதாகவும் கூறியுள்ளது. இதனால் நியூசிலாந்து வந்துள்ள பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More