Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

1 minutes read

கொவிட்-19 பரவல் காரணமாக அவுஸ்திரேலிய பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரானது ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரை எதிர்வரும் ஜனவரி 18-31 வரை மெல்போர்னில் நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தொடரை 2021 பெப்ரவரி 08 – 28 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா நெருக்கடி காரணமாக தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், அவுஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். 

இதனிடையே அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜனவரி 10 – 13 ஆம் திகதி வரை கட்டார் தலைநகர் தோஹாவில் நடைபெறும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More