சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி.) கடந்த 10 வருடத்தில் மூன்று வடிவிலான போட்டியிலும் சிறந்த வீரர்கள் யார் என்பதை வெளியிட்டுள்ளது.
ஐ.சி.சி. நேற்யை தினம் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது.
இந்த நிலையிலேயே கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார், ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார் என்பதை இன்று அறிவித்துள்ளது.
சிறந்த டெஸ்ட் வீரர் – ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
சிறந்த ஒருநாள் வீரர் – விராட் கோலி (இந்தியா)
சிறந்த டி – 20 வீரர் – ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் – விராட் கோலி (இந்தியா)
ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டர் – மகேந்திர சிங் தோனி (இந்தியா)
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரங்கனை – எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
சிறந்த டி – 20 வீரங்கனை – எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
சிறந்த ஒருநாள் வீரங்கனை – எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)