Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி!

1 minutes read

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36 ஓட்டங்களினால் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ரஷீத் கான் 48 ஓட்டங்களையும் அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக கிரேக் யங் மற்றும் சிமி சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 47.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பௌல் ஸ்டிர்லிங் 118 ஓட்டங்களை அடிக்க பந்துவீச்சில் ரஷீத் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

குறித்த போட்டியின் ஆட்டநாயகனாக ரஷீத் கானும் தொடரின் நாயகனாக சிறப்பாக விளையாடிய பௌல் ஸ்டிர்லிங் தேர்வு செய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More