0
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் அணி குறித்த ஒரு பதிவை நேற்று வெளியிட்டு இருந்தது. இதற்கு கமெண்ட் செய்த ஒருவர், “பெண்கள் கிரிக்கெட் பற்றி யார் யோசிப்பார்கள்” என்று கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இதனை குறிப்பிட்டு இங்கிலாந்து வீராங்கனை அலெக்ஸான்ட்ரா ஹார்ட்லே பெண்கள் கிரிக்கெட்டை பார்க்க குவிந்த கூட்டம் குறித்து 3 புகைப்படங்களை பதிவிட்டு பதிலடி கொடுத்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.