தென்னாபிரிக்காவின் கிராண்ட் லூடெனை இலங்கை கிரிக்கெட்டின் பயிற்சிப் பிரிவின் உடற்பயிற்சி செயல்திறனை மேலாளராக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது.

இந்த நியமனமானது நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்த நியமனத்துக்கு அமைவாக இலங்கை கிரிக்கெட்டின் கீழ் உள்ள அனைத்து அணிகளின் உடற்பயிற்சி செயல்திறனை மேற்பார்வையிடும் அதே நேரத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களின் பலத்தை வளர்ப்பதில் லுடென் கவனம் செலுத்துவார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடனான ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பு, லுடென் 2014 முதல் 2019 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது, அணியின் களத்தடுப்பை மேம்படுத்துவதில் லுடென் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பங்களாதேஷ் கிரிக்கெட்டின் பலம் மற்றும் தரப்படுத்தல் குறித்து பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.
தனது சர்வதேச அனுபவத்திற்கு மேலதிகமாக, லுடென் தென்னாபிரிக்காவின் முதல்தர கிரிக்கெட் போட்டியில் நாஷுவா டைட்டன்ஸ் மற்றும் பி.பி.எல் அணி ஆகியவற்றையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் டாக்கா கிளாடியேட்டர் அணிக்கு பலம் மற்றும் நிலைப்படுத்தல் குறித்து பயிற்சியளித்துள்ளார்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற ல லூடென் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தில் மூன்றாம் நிலை கிரிக்கெட் பயிற்சியில் சான்றிதழையும் பெற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்திற்கு லுடென் சேவை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா,
எங்கள் கிரிக்கெட் முறைக்கு லுடெனை நாங்கள் வரவேற்கிறோம். அவரது வருகை தேசிய அணியின் பலம் மற்றும் தரம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நாங்கள் நம்புவதாக கூறினார்.