Saturday, February 27, 2021

இதையும் படிங்க

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் | அமெரிக்கா

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி,...

இலங்கைக்கு நெருக்கடி; இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது | சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20...

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க உயிரிழப்பு

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க  இன்று பிற்பகல் தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர்களான வினய் குமார்- யூசப் பதான் ஓய்வு!

இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களான வினய் குமார் மற்றும் யூசப் பதான் ஆகியோர் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதில் வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் சர்வதேச...

ஈரான் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்!

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் கிளச்சியாளர்களின் ராணுவத் தளங்கள் மீது நேற்று அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வடக்கு ஈராக்கிலுள்ள...

ஆசிரியர்

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

அதன்படி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளையும், இலங்கை பந்து வீச்சாளர்கள் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற, பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றள்ளது.

அதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை கடக்க இங்கிலாந்து அணிக்கு இன்னும் எட்டு ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இலங்கை அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

தொடரின் முதல் போட்டியானது நேற்றைய தினம் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அணியின் தலைமைப் பொறுப்பு தினேஷ் சந்திமாலிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியது.

ஆரம்ப வீரர்களாக லஹிரு திரமான்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர 7 ஆவது ஓவருக்காக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் திரிமான்ன 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, குசல் மெண்டீஸ் களமிறங்கினார்.

தென்னாபிரிக்காவுடனான மூன்று இன்னிங்ஸுகளிலும் டக்கவுட்டுடன் ஆட்டமிழந்த அவர் இந்த இன்னிங்ஸில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏற்பட்ட கலங்கத்தை துடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அவர் அதே ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரான ஜோஸ் பட்லரின் பிடிகொடுத்து, தொடர்ந்து நான்காவது முறையாகவும் டக்கவுட்டுடன் வெளியேறினார்.

அடுத்தபடியாக குசல் பெரேரா 20 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 25 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் இடைக்கால அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் சரிவிலிருந்த இலங்கை அணியை மீட்க பெரிதும் போரடி வந்தனர்.

மதிய உணவு வரை தங்கள் விக்கெட்டுகளை இவர்கள் பாதுகாத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 65 ஆக உயர்த்தினர். எனினும் அணிக்கு அவர்கள் வழங்கிய பாதுகாப்பு எல்லாம் மதிய உணவு இடைவேளையின் பின்னர் உடைத்தெறியப்பட்டது.

அதன்படி இந்த போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட்டின் மூன்றாவது விக்கெட்டாக மெத்யூஸ் 27 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற தினேஷ் சந்திமாலும் 28 ஓட்டங்களுடன் சாம் குர்ரனின் பந்து வீச்சில் ஜாக் லீச்சிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அதனால் இலங்கை அணி 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது. தொடர்ந்து இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய 46.1 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ஓட்டத்துடன் இலங்கை அணி ஆட்டமிழந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் டோம் பெஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் மற்றும் ஜாக் லீச் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டொமினிக் சிபிலி மற்றும் ஜாக் கிராலி ஆகியோரை குறைந்த ஓட்டத்துடன் லசித் எம்புலுதெனிய ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார்.

டொமினிக் சிபிலி 5 ஆவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் நான்கு ஓட்டத்துடன் திரிமான்னவிடம் பிடிகொடுத்து வெளியேற, ஜாக் கிராலி 9 ஆவது ஓவரின் நான்காவது பந்து வீச்சில் வனிந்து ஹசரங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியின் முதல் இரு விக்கெட்டுகளும் 17 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் ஜோ ரூட் மற்றிம் ஜோனி பெயர்ஸ்டோ ஆகியோர் ஜோடி சேர்ந்து வலுவான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதனால் இங்கிலாந்து அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஜோ ரூட் 5 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களுடனும், பெயர்ஸ்டோ 2 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

இதையும் படிங்க

டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை!

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...

மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!

மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்

மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...

அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு!

சங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் | அமெரிக்கா

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி,...

இலங்கைக்கு நெருக்கடி; இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது | சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20...

மேலும் பதிவுகள்

மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகிறது மேஜர் டி 20 தொடர்!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்படவுள்ள மேஜர் கிளப் இருபதுக்கு இருபது தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கையின் முன்னணி 26...

சஹ்ரானின் போதனைகளில் 15 பெண்கள் கலந்து கொண்டதாக அம்பலம்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய தாக்குதல் குறித்த போதனை நடவடிக்கையில் தான் உட்பட மொத்தம் 15...

கொரோனா லாக்-டவுன் | வர்த்தகர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள  Holiday Inn ஹோட்டலில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 12 முதல் 5 நாட்கள் முழு...

ஆப்கான் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை

கடந்த ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பின்னர் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழப்புக்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் | தமிழ் அகதியின் கவலை

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு...

ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகிவரும் 'எண்ணித் துணிக' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. 'ஜிந்தா', பிரஷாந்த் நடிப்பில் வெளியான 'ஜானி' ஆகிய படங்களை இயக்கிய...

பிந்திய செய்திகள்

டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை | மன்னிப்புச் சபை அறிக்கை!

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை...

மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை | மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!

மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்

மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக...

அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு!

சங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...

பொலிசாக நடிக்கும் அருள்நிதி

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...

துயர் பகிர்வு