Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்- 44 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்- 44 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி!

1 minutes read

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மத்யூஸ் 30 ஓட்டங்களுடனும் தினேஷ் சண்டிமல் 20 ஓட்டங்களுடனும் அட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதனை அடுத்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதத்தின் உதவியுடன் அனைத்து விக்கெட்களையும் இழந்து 421 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து 286 ஓட்டங்கள் பின்னிலையுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 ஆவது நாளின் மதிய இடைவேளை வரை 4 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக லஹிரு திரிமன்னே 111 ஓட்டங்களையும் குசல் பெரேரா 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக சாம் கர்ரன் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More