Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து!

இலங்கையினை 7 விக்கட்டுகளினால் வீழ்த்தியது இங்கிலாந்து!

1 minutes read

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, அணித் தலைவர் ஜோ ரூட்டின் 228 ஓட்டங்களின் உதவியுடன் 421 ஓட்டங்களை பெற்றது.

அதனால் 286 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி லஹிரு திரிமான்னவின் சதத்தின் உதவியுடன் 359 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 24.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 76 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்கை கடந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவானார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி அதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More