Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிக் பேஷ் | மெக்டர்மோட்டின் அதிரடியால் ஹோபர்ட் அணி மகத்தான வெற்றி!

பிக் பேஷ் | மெக்டர்மோட்டின் அதிரடியால் ஹோபர்ட் அணி மகத்தான வெற்றி!

1 minutes read

பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கன்பெர்ரா மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் சிட்னி தண்டர் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பில்லிங்ஸ் 50 ஓட்டங்களையும் கவாஜா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பந்துவீச்சில், போலண்ட் 4 விக்கெட்டுகளையும் நாதன் எலீஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 18 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் மெக்டர்மோட் 96 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும் ஆடம் மில்ன் மற்றும் நதன் மெக்ஹென்ரிவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 56 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 8 பவுண்ரிகள் அடங்களாக 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பென் மெக்டர்மோட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More