Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

1 minutes read

ரி-10 லீக் கிரிக்கெட் தொடரின், 21ஆவது லீக் போட்டியில் நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணியும் புனே டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோதர்ன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புனே டெவில்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நசீர் ஹொசைன் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் கெனர் லீவிஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நோதர்ன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், பார்னல் 3 விக்கெட்டுகளையும் ரியாஸ் 2 விக்கெட்டுகளையும் பெபியன் அலென் மற்றும் எம்ரிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 98 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நோதர்ன் வோரியஸ் அணி, 4.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வசீம் மொஹமத் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பிரெண்டன் கிங் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

புனே டெவில்ஸ் அணியின் பந்துவீச்சில், சாம் விஸ்னீவ்ஸ்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 13 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வசீம் மொஹமத் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More