செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு முதலாவது ரி-20: இலங்கை அணியை பந்தாடியது மேற்கிந்திய தீவுகள்!

முதலாவது ரி-20: இலங்கை அணியை பந்தாடியது மேற்கிந்திய தீவுகள்!

1 minutes read

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிசங்க 39 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒபேட் மெக்கோய் 2 விக்கெட்டுகளையும் கெவீன் சின்க்ளாயார், எட்வட்ஸ், ஹோல்டர், பிராவோ மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 13.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிய்ரன் பொலார்ட் 38 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், அகில தனஞ்சய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

குறிப்பாக இப்போட்டியில் இலங்கையின் அணியின் அகில தனஞ்சய, ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

அத்துடன், இப்போட்டியில் கிய்ரன் பொலார்ட், இலங்கையின் அணியின் அகில தனஞ்சயவின் ஓவருக்கு ஆறு பந்;துகளுக்கு ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் ரி-20 கிரிக்கெட்டில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை பொலார்ட் பதிவுசெய்தார். முன்னதாக இந்தியாவின் யுவராஜ் சிங் இந்த சாதனையை பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிய்ரன் பொலார்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.