Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த முதல் இந்திய வீராங்கனையாக மிதாலி ராஜ்

10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த முதல் இந்திய வீராங்கனையாக மிதாலி ராஜ்

1 minutes read

மிதாலி ராஜ் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

அதேநேரம் ஒட்டுமொத்த சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற இரண்டாவது வீரராகவும் அவர் பதிவானார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று இடம்பெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியின்போதே அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் 10,273 ஓட்டங்களை அடித்த இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட் முதலிடத்தில் இருக்கிறார். 

அதனையடுத்து மித்தாலி ராஜ் இப்போது இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் 36 ஓட்டங்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தாலும், அவரின் 10 ஆயிரம் ஓட்ட சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More