Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் I ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி!

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் I ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி!

2 minutes read

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

அபுதாபியில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 545 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷயீடி ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களையும் அஸ்கர் ஆப்கான் 164 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், ரியான் பர்ல், ராஸா மற்றும் நியாச்சி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய சிம்பாப்வே அணி 287 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஸா 85 ஓட்டங்களையும் மஸ்வாரே 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும் அமீர் அம்ஸா 3 விக்கெட்டுகளையும் சிர்ஸாட் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 258 ஓட்டங்கள் பின்னிலைப் பெற்றிருந்த சிம்பாப்வே அணியை ஆப்கானிஸ்தான் அணி, போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதற்கமைய ஆப்கானிஸ்தான் அணிக்கு 108 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காது 151 ஓட்டங்களையும் ட்ரிபானோ 95 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 7 விக்கெட்டுகளையும் சிர்ஸாட், அமிர் அம்ஸா மற்றும் ஜாவிட் அஹமதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஹஸ்மதுல்லா ஷாயீடி தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக சீன் வில்லியம்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More