Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி ஆர்ஜன்டினாவில்!

47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி ஆர்ஜன்டினாவில்!

2 minutes read

47ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூ ன் 12ம் திகதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கோபா அமெரிக்க கால்பந்து ஆகும்.உலக கிண்ணம், ஐரோப்பிய கிண்ணத்துக்கு அடுத்து புகழ் பெற்றது இந்த போட்டி ஆகும்.

47ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூ ன் 12-ம் திகதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோபா அமெரிக்க கால்பந்து போட்டி ஆர்ஜன்டினாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 முதல் ஜூலை 11ம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது.

ஆர்ஜென்டினாவுடன் இணைந்து கொலம்பியாவும் இந்த போட்டியை நடத்தும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது போட்டியை நடத்தும் வாய்ப்பை கொலம்பியா இழந்துள்ளது. அர்ஜென்டினா மட்டுமே இந்த போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கினன்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளும், ‘பி’ பிரிவில் ஆர்ஜன்டினா, சிலி, பொலிவியா, உருகுவே, பராகுவே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 2 பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதிபெறும்.

29-ம்திகதியுடன் லீக் ஆட்டம் முடிகிறது. ஜூலை 3 மற்றும் 4-ம்திகதிகளில் கால் இறுதியும், 6 மற்றும் 7-ம் திகதியில் அரை இறுதியும், ஜூலை 11-ம்திகதி இறுதிப் போட்டி நடக்கிறது.

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் உருகுவே அதிகபட்சமாக 15 முறை சம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி கடைசியாக 2011-ல் வெற்றி பெற்றது.

அதற்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா 14 தடவை கோபா அமெரிக்க கிண்ணத்தை கைப்பற்றியது. அந்த அணி கடைசியாக 1993-ல் வெற்றிபெற்றது.

பிரேசில் 9 முறை சம்பியன் பட்டம் பெற்றுள்ளது. பராகுவே, சிலி, பெரு ஆகியவை தலா 2 முறையும், கொலம்பியா, பொலிவியா தலா 1 முறையும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More