Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அயர்லாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை வென்றது நெதர்லாந்து!

அயர்லாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை வென்றது நெதர்லாந்து!

1 minutes read

அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி கைப்பற்றியது.

உட்ரெக்ட் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 163 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஹரி டெக்டொர் 58 ஓட்டங்களையும் டொரக்ரெல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், ப்ரெட் க்ளாசென் மற்றும் வென் பீக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வெண் டர் குஜ்டன் 2 விக்கெட்டுகளையும் கிங்மா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணி, 45.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ;, நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீபன் மைபர்க் 74 ஓட்டங்களையும் மேக்ஸ் ஓடவுட் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், சிமி சிங் 3 விக்கெட்டுகளையும் பெர்ரி மெக்கார்தி, ஜோசுவா லிட்டில் மற்றும் என்டி மெக்பிரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்டீபன் மைபர்க் தெரிவுசெய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக லோகன் வென் பீக் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More