Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பாகிஸ்தான் சுப்பர் லீக்: முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி!

பாகிஸ்தான் சுப்பர் லீக்: முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி!

2 minutes read

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின், 28ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவலெண்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லாகூர் குவலெண்டர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மக்சூத் 60 ஓட்டங்களையும் ரொசொவ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லாகூர் குவலெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் போல்க்னர் 2 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவூப், ரஷித் கான் மற்றும் அஹமட் டேனியல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லாகூர் குவலெண்டர்ஸ் அணி, 15.1 ஓவர்களுக்கு 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் முல்தான் சுல்தான்ஸ் அணி, 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேம்ஸ் போக்னர் 22 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முல்தான் சுல்தான்ஸ் அணியின் பந்துவீச்சில், ஷாஹ்னாவாஸ் தானி 4 விக்கெட்டுகளையும் இம்ரான் கான் 3 விக்கெட்டுகளையும் பிளெஸிங் முஸரபானி 2 விக்கெட்டுகளையும் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முல்தான் சுல்தான்ஸ் அணியின் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹ்னாவாஸ் தானி தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More