May 28, 2023 5:44 pm

பங்களாதேஷ் – நியூசிலாந்து முதல் டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக டெவோன் கொன்வே 122 ஓட்டங்களையும் ஹென்றி நிக்கோல்ஸ் 75 ஓட்டங்களையும் வில் யங் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிவரும் பங்களாதேஷ் அணி இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு வரை இரண்டு விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக நஜ்முல் ஹொசைன் 64 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க மஹ்முதுல் ஹசன் ஜாய் 70 ஓட்டங்களுடன் அட்டமிழக்காது காலத்தில் உள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்