செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

1 minutes read

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற தம்புள்ள சிக்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சாமிக்க கருணாரட்ன தனது இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதத்தைக் குவித்து தம்புள்ள சிக்சர்ஸ் அணியைப் பலப்படுத்தி அதன் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதேவேளை, கோல் கெலன்ட்ஸ் சார்பாக பந்துவீச்சில் 5 விக்கெட் குவிலை துஷ்மன்த சமீர பதிவுசெய்தபோதிலும் அவரது முயற்சி வீண்போனது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் சாமிக்க கருணாரட்ன ஆட்டம் இழக்காமல் 72 ஓட்டங்களையும் சாம் ஹாப்பர் 41 ஓட்டங்களையும் சரித் அசலன்க 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இதில் ரமேஷ் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சச்சிந்து கொலம்பகே 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: சாமிக்க கருணாரட்ன

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.