Thursday, October 22, 2020

இதையும் படிங்க

மொகல் ஈ ஆஸம் | திரைக்கு பின்னால் மகத்தான காதல்

மொகல் ஈ ஆஸம் - திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல் ( தோல்வி) கதை

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 5 | பத்மநாபன் மகாலிங்கம்

கொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிகள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும்,...

கொரோனாவால் ட்ரம்ப் கடுமையாக பாதிக்கப் பட்டால் என்ன நேரும்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா?

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின்...

திலீபனின் போராட்டத்தை திரிபுபடுத்தும் டக்ளஸ் | கார்வண்ணன்

தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடைகள்,   விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், திலீபன் குறித்த சிந்தனைகள் பரவலான கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாகி இருக்கிறது.

ஆசிரியர்

நானாட்டான் நாணயங்கள் பாண்டியருக்கு உரியதா? | பேராசிரியர் புஸ்பரட்ணம்

நாளை நடைபெறவுள்ள சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களது சேர் பொன்  இராமநாதன் நினைவுப் பேருரை! - Tamilwin

18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில்  நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து 1904 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி 25.09.2020 அன்றிலிருந்து  ஊடகங்களில் முக்கிய செய்தியாக காணப்படுகின்றது. இந்நாணயங்களை அச்சத்துடன் பார்த்த அக்கிராம மக்கள்  பூதம் பாதுகாத்து வந்த இந்நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என கூறியதால் அவற்றால் அச்சமடைந்த நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.புவனம் அவர்கள் அந்நாணயங்கள் அனைத்தையும் தற்போது முருங்கன் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். அந்நாணயங்கள் நீதிமன்றத்தின் ஊடாக இலங்கைத் தொல்லியற் திணைக்களத்திடம் ஒப்படைக்க இருப்பதாக அறிகின்றோம். வடஇலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான நாணயங்கள் முதன் முறையாக ஒரேயிடத்தில் கிடைத்திருப்பதால் அந்நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையாவது பார்ப்போம் என்ற ஆவலில்  மன்னார் மாவட்ட கௌரவ பாராளமன்ற உறுப்பினர்; திரு.சாள்ஸ் அன்ரனி மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.புவனம் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் உரிய இடத்தைப் பார்வையிடுவதற்கான சகல வசதிகளையும்; ஏற்படுத்தி தந்தனர். இக்களவாய்வில் எனது மாணவர்களும் தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர்களுமான திரு. கபிலன், மணிமாறன், தசிந்தன், கிரிகரன் ஆகியோருடன் நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.சிறிஸ்கந்தகுமார், நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர் ஜொனி, மதகுரு அருண் புஸ்பராஜ், அக்கிராமத்து இளைஞர்களான திரு.செல்வம், கணேஸ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரும் எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் களவாய்வில் பங்கெடுத்தமை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பல குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் அக்குழிகள் எவற்றிலுமே  புராதன குடியிருப்புக்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. மாறாக இக்குழிகளில் காணப்படும் களிமண் அருகிலுள்ள காணிகளின் மண்ணின் நிறத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. இது பற்றி வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது இற்றைக்குப் 15 ஆண்டுகளுக்கு முன்னர்  இம்மண்ணை அருகில் உள்ள குளத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டியதாகக்  கூறினார். இதனால் இங்கு பானையோடு கிடைத்த நாணயங்கள் குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணோடு வந்தவை என்பது உறுதியாகத் தெரிகின்றது. இந்நாணயங்களில் மீன் சின்னங்களும், வாளும் பொறிக்கப்பட்டுள்ளதால் இவற்றைப் பாண்டியர் முடியாட்சிக்குரிய நாணயங்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தற்போது தென்னிலங்கை ஊடகங்களில் இவை அநுராதபுர இராசதானிகால நாணயங்கள் எனவும் செய்திகள் வெளிவருவதாக அறிகின்றோம். இந்நாணயங்கள் அனைத்தையும் நேரில் பார்வையிட இன்னும் எமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆயினும் முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நானாட்டான் பாடசாலை ஒன்றில் காட்சிக்கு வைப்பதற்காக கொடுத்த நாணயங்களையும், களவாய்வின் போது எமக்கு கிடைத்த இரு நாணயங்களையும், ஊடகங்களில் வெளிவந்த நாணயங்களின் புகைப்படங்களையும் வைத்துப் பார்க்கும் போது இந்நாணயங்களின் முன்பக்கத்தில் மூன்று கோடுகளால் வடிவமைக்கப்பட்ட பீடத்தின் மேல் இடப்பக்கமாக  அல்லது வலப்பக்கமாக பார்த்த நிலையில் படுத்திருக்கும் நந்தியின் உருவமும், இதற்கு இரு புறத்திலும்  குத்துவிளக்கும், நந்தியின் தலைக்கு மேல் பிறைச் சந்திரனும், நாணய விளிம்னை ஒட்டி சிறுபுள்ளிகளும் காணப்படுகின்றன. நாணயத்தின் பின்பக்கத்தில் பீடத்தின் மேல் கிடையாக அல்லது நேராக இரண்டு மீன் சின்னங்களும் இவற்றின்  இரு புறத்திலும் குத்துவிளக்கும், விளிம்பை ஒட்டி பிறைச் சந்திரனும், சிறு புள்ளிகளும்  .காணப்படுகின்றன. ஆயினும் நாணயங்களின்,  அளவு, நிறை, வடிவமைப்பு, அழகு. தெளிவு என்பவற்றில் வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வகையான  நாணயங்கள் இலங்கையில் சிறப்பாக வடஇலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.  அவற்றைப் பிரின்செப் (1858), எலியட் (1858), கொட்றிங்ரன்(1924), டுல்பே(1966), மிச்செனர்(1998) முதலான நாணயவியல் அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். சேயோன் என்ற நிலவியலாளர் வடஇலங்கையில் மாதோட்டம், மன்னார், கந்தரோடை முதலான இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான இவ்வகை நாணயங்களைக் கண்டுபிடித்து 1982 இல் வெளியிடப்பட்ட தனது இலங்கையின் பண்டைய கால நாணயங்கள் என்ற நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். 1997 களில் பேராசிரியர் கிருஸ்ணராஜா கந்தரோடையில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்விலும் இவ்வகை நாணயங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1990  களில் இருந்து வடஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எமது தொல்லியல் மேலாய்வின் போது பூநகரி, ஈழவூர், மாதோட்டம், உடுத்துறை, இயற்றாலை, அண்மையில் கட்டுக்கரை முதலான இடங்களிலும் இவ்வகை நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இக்கண்டுபிடிப்புக்களின் தொடர்ச்சியாக நானாட்டானில் கிடைத்த நாணயங்கள் காணப்பட்டாலும் அவை வகையிலும், தொகையிலும் அதிகமாக இருப்பதால்  வடஇலங்கையின் வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வில் இந்நாணயங்கள் அதிக முக்கியத்துவம் பெற இடமுண்டு என்பதில் ஐயமில்லை.

பொதுவாக பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் அதாவது யாழ்ப்பாண அரசின் தோற்றத்திற்கு  முன்னர் இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்களை தமிழகத்துடனான அரசியல் வாணிபத் தொடர்பால் வந்தவை என்றே கூறப்பட்டு வந்துள்ளது.  இதற்கு யாழ்ப்பாண அரசின் தோற்றத்தின் பின்னரே இலங்கைத் தமிழரிடம் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றியது என்ற நம்பிக்கை முக்கிய காரணமாகும்.  ஆனால் இலங்கையின் சமகாலத் தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் சங்க காலத்தின் சமகாலத்தில் இருந்து தமிழகத்தைப் போல் இலங்கைத் தமிழரிடமும் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றி வளர்ந்ததற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 

அண்மையில்  நானாட்டானில் கண்டுபிடிக்கப்பட்ட நாணய வகைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் அந்நாணயங்கள்  வடஇலங்கையில் கிடைத்ததாகவே கூறுகின்றனர். இவற்றின் எண்ணிக்கை யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட சேது மொழி பொறித்த நாணயங்களின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. வடஇலங்கைக்கு வெளியே இவ்வகை நாணயங்கள் மிக அரிதாக அநுராதபுரத்திலும், அக்குறுகொட என்ற இடத்திலும் கிடைத்துள்ளன. தமிழ் நாடு சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகையான நான்கு நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவையும் யாழ்ப்பாணத்தில் இருந்தே பிற்காலத்தில் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் நானாட்டானில் கிடைத்த நாணய வகைகளை வடஇலங்கையில் இருந்த அரசோடும், ஆட்சி செய்த அரசர்களோடும் தொடர்புபடுத்திப் பார்ப்பதே பொருத்தமாகும். இந்நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சின்னங்கள், குறியீடுகள் முதலியன இந்து மதத்தை சிறப்பாக சைவ சமயத்தைப் பிரதிபலிப்பதால் இந்நாணயங்களை வெளியிட்ட அரசின்ஷ மதமாக இந்து மதம் இருந்துள்ளதெனக் கூறலாம்.

இதுவரைகாலமும்  இந்நாணயங்களை ஆய்வு செய்த நாணயவியல்  அறிஞர்களில் ஒருசாரார்; நாணயங்களில் மீன் சின்னங்கள் காணப்படுவதால் இவை பாண்டியரால் வெளியிடப்பட்டு  தமிழகத் தொடர்பால் இலங்கைக்கு வந்ததாகக் கூறுகின்றனர். இன்னொரு சாரார் இலங்கையில் பாண்டியர் ஆட்சி இருந்ததன் அடையாளமாக இந்நாணயங்களை வெளியிட்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர். வேறு சிலர் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்கள் சமகாலத்தில் தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் இருந்து சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பதால் இவற்றைப் பாண்டியர் வடஇலங்கைக்கென வெளியிடப்பட்ட தனித்துவமான நாணயங்கள் எனக் கருதுகின்றனர். ஆயினும் இக்கருத்துக்கள் பொருத்தப்பாடாகத் தோன்றவில்லை. காரணம் தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையில் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் வடஇலங்கையில் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ள மீன் சின்னங்கள் பொறித்த ஒரு நாணயமாவது தமிழக ஆய்வுகளில் கிடைத்ததாகத் தெரியவில்லை. இவை தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களாக  இருந்தால் வடஇலங்கையைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கிடைத்திருக்கவேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பாண்டியர் இலங்கை மீது பல தடவைகள் படையெடுத்ததற்குப் பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. இப்படையெடுப்புக்கள் மூலம் சோழரைப் போல் பாண்டியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை. மாறாக இப்படையெடுப்புக்கள் மூலம் இலங்கை மன்னர்களிடம் பாண்டியர் திறைபெற்றதற்கே சான்றுகள் காணப்படுகின்றன. இதனால் இலங்கையில் பாண்டியர் ஆட்சி இருந்ததன் அடையாளம் இந்நாணயங்கள் வெளியிடப்பட்டவை எனக் கூறுவது  ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வடஇலங்கையில் கிடைத்த மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்கள் தனித்துவமானது என்பதில் நாணயவியல் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்துக்கள் காணப்படவில்லை. அத்தனித்துவம் பாண்டியருக்குரியதல்ல. மாறாக  இலங்கையில் தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் காணப்படும் தனித்துவமான அம்சமாகப் பார்ப்பதே பொருத்தமாகும்.

நானாட்டானில் கிடைத்த நாணய வகைகள்  வடஇலங்கைக்கு வெளியே மிக அரிதாக தென்னிலங்கையிலும்,  தமிழகத்திலும் கிடைத்துள்ள நிலையில் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்களின்  எண்ணிக்கை பல ஆயிரமாகக் காணப்படுகின்றன. இந்த  எண்ணிக்கை யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்ட சேது மொழி பொறித்த  நாணயங்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளன. இதையே நானாட்டானில் கிடைத்த நாணயங்கள் மேலும் உறுதிசெய்கின்றன.

இலங்கையில் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றுவதற்கு இந்தியத் தொடர்பு முக்கிய காரணமாக இருந்தாலும், பண்டுதொட்டு இலங்கையில் தமிழ்,  சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் சில தனித்துவமான அம்சங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட சதுரவடிவிலான நாணயங்களில் முன்பக்கத்தில் நிற்கும் நிலையில் காளையின் உருவமும், நாணயத்தின் பின்பக்கத்தில் பாண்டியரின் அரச இலட்சனையான மீன் சின்னமும் காணப்படுகின்றன. சமகாலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட சதுர நாணயங்களின் முன்பக்கத்தில்  பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் உள்ளதைப் போன்ற காளை உருவம் இடம் பெற்றாலும் நாணயத்தின் பின்பக்கத்தில் பாண்டியரின் மீன் சின்னத்திற்குப் பதிலாக ஒரு வட்டமும் வட்டத்திற்குள் மூன்று அல்லது நான்கு சிறு புள்ளிகளும் காணப்படுகின்றன. இச்சின்னங்களே சற்றுப் பிற்பட்ட காலத்தில் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட சதுரவடிவிலான நாணயங்களின் பின்பக்கத்திலும் காணப்படுகின்றன. ஆனால் நாணயங்களின் முன்பக்கத்தில் காளைக்குப் பதிலாக சிங்கள மன்னர் வெளியிட்ட நாணயங்களில் சிங்கம் முக்கிய இலட்சனையாக இடம்பெற்றுள்ளது. இவற்றில் இருந்து சிங்கள மன்னர்கள் சிங்கத்தையும், தமிழர்கள் காளையையும் (நந்தி) தமது அரச இலட்சனையாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர் இம்மரபு பிற்காலத்திலும் தொடர்ந்துள்ளது. நாணயங்களின் பின்பக்கத்தில் உள்ள சின்னங்களில் காணப்படும் ஒற்றுமை அநுராதபுர அரசை அல்லது நாட்டைக் குறித்திருக்கலாம்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட சதுர வடிவிலான நாணயங்களில் அவர்களின் அரச இலட்சனையான மீன் சின்னம் கோட்டுருவில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கிடைத்த சதுர நாணயங்களில் அவை முழு உருவமாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு வடஇலங்கையில் கிடைத்த  மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்களிலும் காணப்படுகின்றன.

நானாட்டானில் கிடைத்த நாணய வகைகளில் மூன்று கோடுகளால் அமைந்த பீடத்தின் மேலேயே நந்தியும், மீன் சின்னங்களும் காணப்படுகின்றது. இந்த அம்சம் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் பௌத்த சின்னங்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இது இலங்கை நாணய மரபுக்குரிய தனித்துவமான அம்சமாகும். இந்த அம்சத்தை தமிழக நாணயங்களிலோ அல்லது இந்திய நாணயங்களிலோ காணப்படவில்லை. பாண்டியர் இன்னொரு நாட்டை வெற்றிகொண்டு ஆட்சி செய்யும் போது தாம் வெளியிட்ட நாணயங்களில் தமது அரச இலட்சனையான மீனையே பொறித்தனர். ஆனால் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் புதிய அரசைத் தோற்றுவித்த பாண்டியரின் படைத்தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகள் மீனுக்குப் பதிலாக நந்தியையே அரச இலட்சனையாக நாணயங்களிலும், அரச கொடிகளிலும், அரச ஆவணங்களிலும் பயன்படுத்தினர். இதற்கு யாழ்ப்பாண அரசிற்கு முன்னோடியாக நந்தியை அரச இலட்சனையாகக் கொண்ட  தமிழ் அரசு வடஇலங்கையில் இருந்தது காரணம் எனலாம். ஆயினும் யாழ்ப்பாண இராசதானிக்கு முற்பட்ட நாணயங்களில் நந்தியின் வடிவம் மூன்று கோடுகளாலால் அமைந்த பீடத்திற்கு மேல் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாண இராசதானி கால நாணயங்களில் பீடத்திற்குப் பதிலாக  சேது என்ற மங்கல மொழி பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாண இராசதானியை முதலில் தோற்றுவித்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் தமிழ் நாடு இராமேஸ்வரம் சேது தலக்துடன் தமக்குள்ள தொடர்பை அடையாளப்படுத்திக் கொண்டனர் எனக் கூறலாம்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொலநறுவை இராசதானியில் கலிங்கமாகன் ஆட்சியால் வெறுப்படைந்த சிங்கள மக்களும், சிங்கள அரசும் தெற்கு நோக்கி நகர்ந்த போது வடக்கே தமிழருக்குச் சார்பான அரசு கலிங்கமாகன், சாவகன் தலமையில் தோன்றியதாகப் பாளி, சிங்கள இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வரசின் படைகள், பாதுகாப்பு அரண்கள் திருகோணமலை, கந்தளாய், பதவியா, குருந்தன் குளம், கோணாவில், மன்னார், மாதோட்டம், இலுப்பைக்கடவை, காக்கதீவு, ஊர்காவற்துறை, வலிகாமம் முதலான  இடங்களில் நிலை கொண்டிருந்ததாக இவ்விலக்கியங்கள் மேலும் கூறுகின்றன. இதைச் சமகாலத்திற்குரிய பாண்டியரது கல்வெட்டும் உறுதி செய்கின்றது. இவ்வாதாரங்களை வைத்துப் பார்க்கும் போது மன்னார் நானாட்டனிலும், வடஇலங்கையின் ஏனைய வட்டாரங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட நந்தி, மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்களை யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக வடஇலங்கையில் நந்தியை அரச இலட்சனையாகக்   கொண்டு ஆட்சிபுரிந்த தமிழ் அரசால் வெளியிடப்பட்டவை எனக் கூறுவதே பொருத்தமாகும்.

குறிப்பு

ஆதிகால,    இடைக்கால இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்களின் முன்பக்கத்தில்  நந்தியும், நாணயங்களின் பின்பக்கத்தில் மீன் வடிவங்களும் முக்கிய சின்னங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நந்தியின்  வடிவம் அரச இலட்சனையையும்,  மீன் சின்னங்கள் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளில் கடல்சார் தொடர்புகள் பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கலாம்.  மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் அங்குள் அருங்காட்சியங்கள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாணயங்களையும், தனிநபர்களின் சேகரிப்பிலுள்ள நாணயங்களையும் நேரில் பார்வையிட்டு ஆராயும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன.  ஆனால் இலங்கையில் கிடைத்துள்ள மேற்மேற்கூறப்பட்ட சின்னங்கள் கொண்ட நாணயங்களை அங்கு  காணமுடியவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்குமேல் தமிழகத்தின் குக் கிராமங்களுக்கெல்லாம் சென்று நாணயங்களைச் சேகரித்து பதினைந்துக்கு மேற்பட்டநூல்களையும், நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்ட தஞ்சாவூர் அளக்குடி ஆறுமுகம் சீதாராமனுடம் பல தடவைகள் இலங்கையில் கிடைத்து வரும் நாணயங்கள் பற்றி கலந்துரையாட முடிந்தது.அவர் நந்தியும்,  மீன் சின்னமும்பொறித் த நாணயங்களின் வடிவமைப்பும், அவற்றின் கலைமரபு, தொழில்நுட்பத் திறன், அழகு என்பவற்றை தமிக நாணய மரபிற்கு அந்நியமானவை என்றே  உறுதிபடக் .கூறுகின்றார். ஆகவே யாழ்ப்பாண  இராசதானிக்கு முன்னர் இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்ற பாரம்hரிய நம்பிக்கையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி அவற்றை இலங்கை மண்யேடொட்டி வாழ்ந்து வரும் தமிழருடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதே பொருத்தமாகும்.  அதன் மூலம் இலங்கைத் தமிழர் வரலாற்றுக்கு புதுமுகவரி கிடைக்கும்.

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்

கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...

கடலின் அக்கரை போனோரே.. | முருகபூபதி

மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...

மஞ்சள் – தேங்காய் – வைரஸ் – இருபதாவது திருத்தம் | நிலாந்தன்

நாடாளுமன்றத்தை ராஜபக்சக்கள் கைப்பற்றுவதற்கு முன்பு நாட்டில் கஞ்சா கடத்துவோரின் படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது மஞ்சள் கடத்தி அகப்படுவோரின் படங்கள்...

தொடர்புச் செய்திகள்

யாழ். வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

யாழில் பல திருட்டு சம்பவங்களில் கைவரிசை காட்டிய ஐவர் கைது

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

டெங்கு பரவல் தொடர்பில் சி.யமுனாநந்தா மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை.

கொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

படை பலத்தை அதிகரிக்கும் சீனா | தாய்வானுக்கு அச்சுறுத்தலா?

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து...

மேலும் பதிவுகள்

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம்

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்

கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...

ஆஸ்கா் விருது பெற்ற முதல் இந்தியா் காலமானாா்

ஆஸ்காா் விருது பெற்ற முதல் இந்தியரும், பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளருமான பானு அதய்யா(91), மும்பையில் வியாழக்கிழமை காலமானாா். இதுகுறித்து...

கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன்? | தோனி விளக்கம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஓவரை ஜடேவுக்கு வழங்கியது ஏன் என சென்னை அணித்தலைவர் எம்எஸ் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

மேலுமொரு ஆடைத்தொழிற்சாலையின் ஊழியருக்கு கொரோனா!

கஹாதுடுவ பகுதியில் அமைந்துள்ள ஹைத்ராமணி ஆடைத் தொழிற்சாலையின் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

பிந்திய செய்திகள்

யாழ். வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

யாழில் பல திருட்டு சம்பவங்களில் கைவரிசை காட்டிய ஐவர் கைது

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

டெங்கு பரவல் தொடர்பில் சி.யமுனாநந்தா மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை.

கொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

நாளை முதல் மூடப்படுகிறது கொழும்பு மெனிங் சந்தை

கொழும்பு மெனிங் சந்தை நாளை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து...

கொரோனா தொற்று அபாயம் – நாட்டில் மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சில பகுதிகளுக்கான ஊரடங்கு அறிவிப்பு தறபோது வெளியாகியுள்ளது. இதன்படி, அகலவத்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை,...

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த தீர்ப்பு வெளியானது

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை)...

துயர் பகிர்வு