Monday, March 1, 2021

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 23 | பத்மநாபன் மகாலிங்கம்

வட மாகாணத்தில் உள்ள பழைய பாடசாலைகள் விபரம். Jaffna Central College.... யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி..... 1816 ஆம் ஆண்டளவிலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் | நிலாந்தன்

2009 மேக்குப்பின் ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் என்னோடு கதைக்கும்போது சொன்னார்…தமிழ் மக்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு தென்னிலங்கையில்...

ஸ்ரீலங்கா சுதந்திரதினம் தமிழின அழிப்பு துவங்கிய நாள் | தீபச்செல்வன்

1948 ஆம் ஆண்டு சிலோன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கினர். ஆனால் அன்றைய நாள் ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா...

பாதுகாக்கப்படவேண்டிய திருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் | மருத்துவர் ரெட்ணரஞ்சித்

திருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 22 | பத்மநாபன் மகாலிங்கம்

தென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் செய்ய வந்த செட்டிமார், சுட்டதீவு துறைக்கு அருகே நெல் வேளாண்மை செய்யக் கூடிய நிலம் உள்ளது என்று அறிந்து, அங்கு வந்து கடல் நீர்...

மல்லிகை ஜீவாவுக்கு நினைவு முத்திரை, நினைவுமண்டபம் வேண்டும்! | யாழில் வலியுறுத்தல் | முருகபூபதி

மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும்

ஆசிரியர்

மிருசுவில் படுகொலை | திகிலூட்டும் ஒரு இனக்கொலையின் கதை!! | தீபச்செல்வன்

 

மிருகத்தனமான படைகளின் மிருசுவில் படுகொலை மன்னிக்ககூடியதா? தீபச்செல்வன் -  Vanakkam London

 

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என இலங்கை அரசின் ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். இருபது வருடங்களுக்கும் அதிகமான சிறையில் வாடுகின்ற அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மறுக்கப்படும் பொழுதெல்லாம் சுனில் ரத்நாயக்கா நினைவுக்கு வருகின்றார். உண்மையில் மிருசுவில் படுகொலை என்பது, அப்பாவி தமிழ் மக்களின் இனப்படுகொலையை மாத்திரம் நினைவுபடுத்தவில்லை. சிறையில் வாழ்வை தொலைத்து வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளையும் நினைவுபடுத்துகின்றது. இந்த தீவில் இனத்திற்கு இனம், மாறுபடுகின்ற நீதியையும் மன்னிப்பையும் அணுகுமுறையையும் பாரபட்சங்களையும் நினைவுபடுத்திச் செல்கிறது. 
மிருசுவில் படுகொலை, ஒரு கொடிய திரைப்படம் போல், மனதை உலுக்குகின்ற கதை. நெஞ்சை உருக்கின்ற காட்சிகள். வரலாறு முழுவதும் நினைவில் அழியாது துருத்துகின்ற துயரம்.  

வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு.  

அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தம் சொந்த ஊருக்குச் சென்று திரும்பாதவர்களும் உண்டு.  கடலும் வயல்களும் தென்னைகளும் மாமரங்களும் நிறைந்த அழகிய பிரதேசம் மிருசுவில்.யாழ் நகரத்திலிருந்து  ஊரைப் பார்க்க மிருசுவில் கிராமத்தவர்கள், மூன்று குழந்தைகள் உட்பட எட்டுப் பேர், 2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 19ஆம் திகதி 10 மணியளவில் வந்தனர்.  ஒரு சிறுவன் கொய்யாப் பழமொன்று பறித்துத் தரும்படி சையாகக் கேட்டுள்ளான். கொய்யா மரத்தை நெருங்கியபோது கத்தியுடன் ஒரு இராணுவத்தினனும் துப்பாக்கியுடன் ஒரு இராணுவத்தினனும் அவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் மேலும் சில இராணுவத்தினரை அவர்கள் அழைத்து வந்தனர்.  

மிருசுவில் சடலமொன்று புதைக்கப்பட்டதை கண்டனர். மீண்டும் ஊர் மக்களுடன் அந்த சடலத்தை அடையாளம் காண இவர்கள் வந்துள்ளனர். அத்துடன் உள்ளுர் அரச அதிகாரிகளின் அனுமதியுடன்தான் அவர்கள் வந்திருந்தனர். அங்கு வந்து புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண முற்பட்டபோது அவர்கள் இராணுவத்திடம் சிக்கினர். இலங்கை அரச படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டனர். ஏற்கனவே இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தை அடையாள காண முற்பட்டவேளையிலேயே இவர்களும் சடலாக்கப்பட்டனர். 

சடலமொன்றின் முகம் தேடச் சென்றவர்களை இராணுவத்தினர் சிறைப்பிடித்து சித்திரவதை செய்தவர். டிசம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட மக்கள் டிசம்பர் 20 வரை சித்திரவதை செய்யப்பட்டனர். அந்த அப்பாவிச் சனங்களின் அழு குரல்கள் எவருக்கும் கேட்கவில்லை. மிருசுவில் மாதாவே எங்கள் அப்பாவிக் குழந்தைகளையாவது காப்பாற்று என்று அவர்கள் கூக்குரலிட்டனர். மிருசுவில் மாதாவும் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புச் சிறையில் சிக்கியிருந்தாள். குழந்தைகள் என்றும் பாராமல் இராணுவத்தின் சித்திரவதைகள் தொடர்ந்தன. மனித குலத்திற்கு விரோதமான இராணுவத்தின் கண்களில் குழந்தைகளும் பெண்களும் எப்படிப் பொருட்டாகும்?  

தொடர் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள் உட்பட எட்டுப்பேர் டிசம்பர் 20ஆம் திகதி இலங்கை  அரச படைகளினால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.  ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் முதலிய எட்டுப் பேரே இலங்கை அரச படைகளினால் இனக் கொலை செய்யப்பட்டனர்.

அங்கிருந்த மலக் குழி ஒன்றினுள் அவர்களின் சடலங்களை இராணுவத்தினர் போட்டனர். இராணுவத்திடம் அகப்பட்ட பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் அதிஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்தக் கொடூரம் மிக்க மிருசுவில் படுகொலையின் ஒற்றைச் சாட்சியாக அவர் தப்பி வந்தார். உயிருக்காக இறைஞ்சிய நிலையில், குழந்தைகள் என்றும் பாராது இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதிக்காக அந்தச் சாட்சி தப்பி வந்திருக்க வேண்டும்.

மலக்குழி ஒன்றை நோக்கித் தள்ளியபோது மகேஸ்வரன் மயக்கமடைந்துள்ளார். இராணுவத்தினர் கத்தி கூச்சலிட்டு மகிழ்ந்தைமை தனக்கு நினைவிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மகேஸ்வரன் கூறியிருந்தார். அவர் கட்டியிருந்த சாரத்தால் .இராணுவத்தினர் கைகளை இறுக்கமாக கட்டினர். தனக்கு மரணம் நிகழப்போகிறது என்று உணர்ந்த அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். மாலை ஆறு மணியளவில் குறுக்கு வழிகளின் ஊடாக மகேஸ்வரன் தப்பிச் சென்றார். அவ் இடத்திற்குப் புதிய இராணுவத்தினரால் மகேஸ்வரனை குறி வைத்து சுட்டுவிட இயலவில்லை.

மகேஸ்வரனின் வாக்குமூலங்களை அடுத்தே, இனக் கொலை செய்யப்பட்ட அந்த மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. முதற்கட்டமாக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. அத்துடன் அங்கு முதன் முதலில் காணப்பட்ட பெண்ணின் சடலம் குறித்தும் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. உண்மையில் அந்தப் பெண்ணுக்கு நடந்த அநீதியை நீதிமன்றத்தினால் கண்டுபிடிக்க இயலவில்லை.

அவள் யார்? அவளுக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் மறைத்திருந்தனர். அதனை நீதிமன்றத்தினாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவளுக்கு மிக மோசமான முறையில் வன்முறையும் மரணமும் நிகழ்ந்திருக்க வேண்டும். அவளின் சடலத்தை இந்த மக்கள் தேடி வந்தமைக்காகவே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவளின் சடலத்தை கண்ட சாட்சி என்பதற்காகவே இந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த மக்களை படுகொலை செய்த இராணுவத்தினர் அவளின் சடலத்தையும் இல்லாமல் செய்து குற்றத்திலிருந்து தப்பிக் கொண்டனர்.

இந்தப் படுகொலையில் மூன்று பதின்ம வயதுச் சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவனான வில்வராசா பிரசாத்தும் அடங்குவதாக யாழ் மாவட்ட வைத்திய அதிகாரி சி. கதிரவேற்பிள்ளை சாட்சியமளித்தார். அத்துடன் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் யாழ் மாவட்ட வைத்திய அதிகாரி சி. கதிரவேற்பிள்ளை தனது சாட்சியத்தில் கூறினார். இந்தப் படுகொலை குறித்து உரிய வகையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அன்றைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கடிதம் எழுதினார்.

அத்துடன் மனித உரிமை அமைப்புக்களும் இப் படுகொலை குறித்து இலங்கை அரசாங்கம் பக்கச் சார்பற்ற முறையில் விசாரணை நடாத்தி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை வழங்கி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தது. இந்தப் படுகொலை ஐ.நாவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே ஐந்து இராணுவத்தினரை கைது செய்திருந்த இலங்கை அரசு, இவ் அழுத்தங்களினால் 14 இராணுவத்தினரை கைது செய்தனர். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் 2002 மே, 2இல் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன் நவம்பர் 27இல் இது தொடர்பில் விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவொன்றை இலங்கை சட்ட மா அதிபர் நியமித்திருந்தார். ஜூரிகள் எவரும் இன்றிய நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அரசு அறிவித்தது.

மகேஸ்வரனின் வாக்குமூலத்தின்படி மலக்குழியை சென்று பார்வையிட்டபோது அதற்குள் ஆடு ஒன்று இறந்தமைக்கான அடையாளங்கள்  இருந்தன. இராணுவத்தினர் அங்கிருந்து உடல்களை அப்புறப்படுத்தியிருந்தனர். எனினும் கஜபாகு அணியை சேர்ந்த இராணுவச் சீருடை ஒன்று  அப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. ஆட்டை கொன்றவர்களைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து, கொலைக் குற்றவாளிகளை மகேஸ்வரன் அடையாளம் காட்டினார்.

பின்னர் இராணுவக் குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி 500 மீற்றர் தூரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு நான்காவது நாளில் கண்டுபிடிக்கப்பட்டது. மலக்குழியில் இருந்த இரத்தக்கறையை பகுப்பாய்வு செய்தபோது அது மிருகங்களின் இரத்தக்கறை அல்ல என்றும் மனிதர்களின் இரத்தக்கறை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் ஆட்டை கொன்றது யார் என்பதை கண்டுபிடித்த பின்னரே, அங்கு கொல்லட்டவர்கள் தொடர்பான குற்றவாளி இரத்நாயக்கா சிக்கிக் கொண்டார்.   

குற்றம் சாட்டப்பட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, எச்.என்.பி.பி.வராவௌ, சுனில் ராஜபக்ச ஆகிய மூன்று நீதிபதிகளும் பிரதி சட்டமா அதிபர் சரத் ஜயமான மற்றும் அதிகாரிகள் 2011 ஏப்ரல் 28ஆம் திகதி மிருசுவில் பகுதியில் கொலை இடம்பெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடம், குற்றவாளிகளை அடையாளம் காண அணிவகுப்பு நடந்த நீதிமன்ற வளாகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இதனிடையே, புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2011 ஜூலை 27 வழக்கு இடம்பெற்றது. இதன்போது புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலையில் கொல்லப்பட்ட நபர்கள் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல். ஜயமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார். கதிரேஸ் ஞானவிமலன், ஞானவிமலன் ரவிச்சந்திரன் ஆகியோரது உடைகளே என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சாவகச்சேரி மாவட்ட நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், குற்றவாளிகளை அடையாளம் கண்ட அன்றைய  பதில் நீதவான் சுப்பிரமணியம் கந்தசாமி, பொலிஸ் தரப்பில் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டார ஆகியோரது வாக்குமூலங்களையும் நீதிபதிகள் பதிவு செய்தனர். இவர்களும் கொலை இடம்பெற்ற பகுதிக்கு நீதிபதிகளுடன் சென்று நடந்த சம்பவத்தை குறித்து எடுத்துரைத்தனர். நீதிபதிகளின் தீர்ப்புக்காக அனைவரும் காத்திருந்தனர்.

இந்த நிலையில் 2015, அதாவது கடந்த வரும், ஜூன் 25ஆம் திகதி அன்று இப் படுகொலை தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டது. எட்டுத் தமிழ் மக்களையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தவர் என்ற குற்றசாட்டில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு மரண தண்டனையை கொழும்பு நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்திருந்தது.

ஈழத்தில் கடும் போர் ஓய்ந்திருந்த காலம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் போர் நிறுத்த சமாதான முயற்சிகள் நடந்த நாட்கள். அப்படி ஒரு நாட்களில்தான் அந்தக் கொடுஞ்செயல் இடம்பெற்றது. இலங்கை அரச படைகள் சமாதானத்திற்கு எத்தகைய மதிப்பை கொடுத்தார்கள் என்பதையும் சமாதானத்தின்மீது எத்தகைய ஈடுபாடு கொண்டவர்கள் என்பதையும் உலகிற்கு உணர்த்தியதொரு நிகழ்வாகவும் இதனைக் கருதலாம்.

மரண தண்டனையை எதிர்கொள்கின்ற அளவிற்கு தான் மிக மோசமான குற்றத்தில் ஈடுபடவில்லை என ரட்ணாயக்க பதிலளித்தார்.  இராணுவத்தில் சேவையாற்றிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு வீரச் செயல்களைப் புரிந்ததாகவும் ஏனைய இராணுவ வீரர்கள் இவற்றைச் செய்வதற்கு அச்சப்படுகின்ற போது கூடத் தான் துணிச்சலாக முன்னேறிச் சென்றதாகவும் ரத்னாயக்க கூறினார்.  அதாவது தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் தவறானவை என ரத்னாயக்க நியாயப்படுத்த முயன்றுள்ளார்.

இலங்கை அரச படைகளின் மனங்களில் தமிழ் மக்களின் உயிர் குறித்து என்னவிதமான மதிப்பீடு இருக்கிறது என்பதை இரத்நாயக்கவின் வாக்குமூலங்கள் உணர்த்துகின்றன. இவ் வகையிலான எண்ணங்கள் எத்தகைய அரசியல், மேலாதிக்க சிந்தனைகளிலிருந்து ஏற்படுகின்றன என்பதையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. இராணுவத்தில் தமிழர்களை படுகொலை செய்வதை ஒரு இராணுவத்தின் கடமையாகவே ரத்னநாயக்க கருதியுள்ளார். இதுவே இலங்கை இராணுவத்தின் மனப்போக்கு என்பதையே உணர முடிகிறது.  


மிருசுவில் படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் சில ஆண்டுகளிலேயே சுனில் ரத்நாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய ஒரு முன்னாள் இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு கிடைக்கின்ற நாட்டில் இன்னும் காரணம் தெரியாமல் சிறையில் உள்ளனர் தமிழ் கைதிகள். நீதி என்பது மனிதர்களுக்கானது  என்பதை நடைமுறையில் வரும் வரையில் தமிழர்களின் காலம் சிறையில்தான் கழியும். 

 கவிஞர் தீபச்செல்வன் 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதையும் படிங்க

ஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு | நிலாந்தன்

கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்

கிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் "நகர வாழ்க்கையே சிறந்தது" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...

ஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? | நிலாந்தன்

கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்

கல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...

பொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன? | நிலாந்தன்

பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...

அதிமுகவா? திமுகவா? | வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நேற்று அலுவலகத்தில் தேநீர் இடைவேளை நேரத்தில் சக பணியாளர் ஒருவரிடம், யாருக்கு ஓட்டுப்போடுவிங்க என்று கேட்டபோது, யாருக்கு போடுறதுன்னுல்லாம் பாக்கல, எனக்கு திமுக வரக்கூடாதுங்கறது தான் ஒரே குறிக்கோள் என்றார்....

தொடர்புச் செய்திகள்

“முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழிப்பவர்களுடன் எப்படி இணைந்து வாழ்வது?” | தீபச்செல்வன்

இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது....

அன்று மொழியோடு போர் இன்று நினைவுகளோடு போர் | தீபச்செல்வன்

1974ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் மொழியோடு படுகொலைப் போர் புரிந்த அரசு, இன்று இனத்தின் நினைவுகளோடு போர் செய்கிறது.

புதிய அரசியலமைப்பா? தமிழீழமா? | தீபச்செல்வன்

புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்ற கதை தற்போதைய ஆட்சியிலும் பேசப்படுகின்றது. ஸ்ரீலங்காவை ஆளுகின்ற கட்சிகள் தாம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச மறுக்கும் ஈரான்!

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டரின் இன்று...

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. டொம் மூடி எதிர்வரும் 3 வருட...

மேலும் பதிவுகள்

சாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...

திருகோணமாலை நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது

பெப்ரவரி 08 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற 38 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ராதிகா வேடத்தில் நடிக்க 2 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை

சித்தி 2 தொடரிலிருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து அவரது வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.பிரபல நடிகையான ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக...

கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்த பார்வதி நாயர்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர், தற்போது பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன்பிறகு உன்னைபோல் ஒருவன்,...

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச மறுக்கும் ஈரான்!

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

பிந்திய செய்திகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி போராட்டம்!

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு...

சுட் டி பிரான்ஸ் டென்னிஸ்: டேவிட் கொஃபின் சம்பியன்!

சுட் டி பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று டேவிட் கொஃபின் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க...

எனக்கு என்ட் கார்டே கிடையாது…2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக...

சீரக தண்ணீர் குடித்தால் இந்தநோய்கள் வராது!

இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம். இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே...

ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி | அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து...

ரோஹிங்கியா அகதிகளை ஏற்று வேண்டிய பொறுப்பு எமக்கில்லை | வங்கதேசம்

அந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட 90 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள...

துயர் பகிர்வு