Sunday, April 11, 2021

இதையும் படிங்க

வணிகப் போட்டியால் அரிவாளுடன் அடிதடியில் ஈடுபடும் கிளிநொச்சி ரியூசன் நிர்வாகிகள்!

வணிக மயமாக்கலும் தனியார் கல்வி நிலையப் போட்டிகள்... கிளிநொச்சி மாவட்டம் போர்த் தழும்புகள் மறைந்து இப்பொழுதுதான் தன்னைக் கல்வியால் உயர்த்தியும் வளர்த்தும் வருகிறது... 

ஐநா கூட்டத்தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள்| பகுதி -1 | நிலாந்தன்

கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் அதாவது தாயகம் தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.முதலாவது இம்மாதம் ஒன்பதாம்...

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவாலயத்தின் வரலாற்று தொன்மை தெரியுமா? | க.கிரிகரன்

க.கிரிகரன் B.A (Archaeology special) ******************************************** இலங்கையின் வடபாகத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டத்தின்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 29 | பத்மநாபன் மகாலிங்கம்

ஶ்ரீ லங்காவில் உள்ள நீதிமன்ற முறைகள் (Structure of the Courts System in Sri Lanka) பின்வருமாறு: சுப்ரீம் நீதிமன்றம் (Supreme Court)

இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு | சிறிமதன்

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர் பற்றிய விமர்சனம் | யசோதா.ப

வணக்கம் லண்டனில் விபரணக் கட்டுரை பகுதியில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்ற திரு.பத்மநாபன் மகாலிங்கம் அவர்களின் வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி 28 அத்தியாயங்களைக் கடந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வாசகி...

ஆசிரியர்

இலங்கையில் தொற்றா நோய்களால் வேகமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் தொற்றா நோய்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. தொற்றா நோய்கள் மனித வரலாற்றில் முன்னொரு போதுமே இவ்வாறு அதிகரித்திருக்கவில்லை. அதுவும் நவீன அறிவியலில் அபரிமித வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்த யுகத்தில் இவ்வகை நோய்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இவ்வகை நோய்கள் அதிகரிப்பதற்கு உணவு, நடத்தை மற்றும் பழக்க வழக்கம் என்பவற்றில் குடிபுகுந்துள்ள உடல், உள ஆரோக்கியத்துக்கு பொருத்தமற்றவை காரணிகளாக விளங்குவது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அவற்றில் புகையிலை உட்கொள்ளல், புகைபிடித்தல் மற்றும் மதுபாவனை என்பன முக்கியமானவையென ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

இவற்றின் பாவனை மற்றும் பழக்கவழக்கங்களால் பலவிதமான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் அப்பாதிப்புகள் உடனடியாக வெளிப்படாததன் விளைவாகவே அவை குறித்து பெரிதாகப் பொருட்படுத்தப்படாத நிலைமை காணப்படுகின்றது. இப்பழக்கவழக்கங்களின் விளைவாக  ஒருவரின் ஆயுட்காலம் சுமார் 20 வருடங்களால் குறைவடைய முடியுமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் லக்ஷமி சோமதுங்க குறிப்பிடுகின்றார்.

ஆயுட் காலத்தில் இருபது வருடங்கள் என்பது ஒரு சாதாரண காலப் பகுதி அல்ல. புகையிலை பாவனை மற்றும் புகைப்பிடித்தலால் ஏற்படும் நோய்களால் வருடமொன்றுக்கு 8 மில்லியன் பேர் உலகெங்கிலும் மரணமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டிருக்கின்றது. அதேநேரம் மதுப்பாவனையின் விளைவாக ஏற்படும் நோய்களாலும் சுமார் 3 மில்லியன் பேர் உலகெங்கிலும் மரணமடைவதையும் மறந்து விட முடியாது.

இலங்கையில் புகையிலை பாவனை மற்றும் புகைப்பிடித்தலுக்காக   நாளொன்றுக்கு 38 கோடி ரூபாவும் மதுப்பாவனைக்காக  57 கோடி ரூபாவும் செலவிடப்படுகின்றது. புகையிலையின் விளைவாக ஏற்படும் நோய்களால் தினமும் 55 பேரும், மதுப்பாவனையால் ஏற்படும் நோய்களால் தினமும் 50 பேரும் மரணமடைகின்றனர்’ என்று புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்ர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.


இவரது தரவுகளின்படி, புகையிலை, மதுப்பாவனையினால் நாளொன்றுக்கு 100 கோடி ரூபா இழக்கப்படுவது தெளிவாகின்றது.
அதேநேரம் இப்பழக்கவழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென சுகாதார அமைச்சு வருடா வருடம் கோடிக்கணக்கில் செலவிடுவதையும் மறந்து விட முடியாது. இருந்தும் அரசின் செலவினம் பெரிதாக உணரப்படாத நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில் இலவச சுகாதார சேவை நடைமுறையில் இருப்பதே அதற்கான காரணமாகும். எனவே உண்மை யதார்த்தத்தைப் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான சிறுவர் நோயியல் நிபுணர் டொக்டர் அநுருத்த பாதெனியவின் கருத்துப்படி, 2010 ஆம் ஆண்டளவில் இந்நாட்டில் சுமார் 70 வீதமாகக் காணப்பட்ட தொற்றா நோய்கள் தற்போது 80 வீதத்துக்கும் மேல் அதிகரித்திப்பதாகத் தெரிகின்றது. இந்நிலைக்கு புகையிலை மற்றும் மது என்பன பெரிதும் பங்களிக்கின்றன.

பொதுவாக புகையிலை மற்றும் மதுப்பாவனை காரணமாக புற்றுநோய் ஏற்படலாம் என்ற கருத்து பரவலாகக் காணப்படுகின்றது. இந்நாட்டில் அதிகளவானோர் வாய்ப்புற்று நோய்க்கு உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர். அதற்கு இப்பாவனைகள் தான் முக்கிய காரணமென   சுட்டிக் காட்டிய   சுகாதார அமைச்சின் புற்றுநோய்கள் கட்டுப்பாட்டுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன, ‘புகையிலை பாவனை மற்றும் புகைப்பிடித்தலின் விளைவாக சுமார் 15 விதமான புற்றுநோய்களும், மதுப்பாவனையின் விளைவாக சுமார் 05 வகையான புற்றுநோய்களும் ஏற்பட முடியும்’ என அவர் கூறியுள்ளார்.

புகையிலை பொருட்களில் நிக்கொட்டின், அமோனியா,சயனைட், தார் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கடும் நச்சுப் பதார்த்தங்கள் அடங்கலாக சுமார் 4 ஆயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. அவை புற்றுநோய்களுக்கு மாத்திரமல்லாமல் ஏனைய தொற்றா நோய்களுக்கும் காரணமாக அமையக் கூடியவையே. 
 
புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு புகைபிடிக்காதவர்களை விடவும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மூன்று மடங்குகள் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்நாட்டில் தொற்றாநோய்களில் பிரதான இடத்தைப் பெற்று இருப்பது  இதய நோய்களேயாகும். இந்நாட்டின் 1997 முதலான சுகாதாரத் தரவுகளை எடுத்துப் பார்த்தால் அதிக மரணங்கள் இதய நோய்களால் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு புகையிலை பெரிதும் பங்களித்திருக்கின்றது.

அதேநேரம் இதய நோய்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தொற்றாநோயாக பக்கவாதம் விளங்குகின்றது. இப்பாதிப்பு புகைப்பவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்பட்டு அவர்களது பாதங்களில் காயங்கள் ஏற்படுமாயின் அதன் விளைவாக பாதத்தை அகற்றக் கூடிய நிலைமையும் ஏற்படலாம்.

அத்தோடு நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுகின்றவர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களில் அரைப்பங்கினர் புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு ஏற்படக் கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருப்பவர்களுக்கு புகைபிடித்தல் பழக்கம் அப்பாதிப்பை விரைவுபடுத்த முடியும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.


அத்தோடு புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பாவனையின் விளைவாக இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் 8 மடங்காகக் காணப்படுகின்றது. சுவாசத்தொகுதி தொடர்பான நாட்பட்ட நோய்  ஏற்பட புகைபிடித்தல் சுமார் 90 வீதம் பங்களிக்கின்றது.

மேலும் புகைபிடிப்பவர் வெளிவிடும்யே புகையை சுவாசிப்பதால் புகைபிடிக்காதவருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படவே செய்கின்றன. குறிப்பாக புகைபிடிப்பவர் வாழும் வீடுகளில் உள்ள பிள்ளைகளும், பெண்களும் சுவாசத் தொகுதி தொடர்பான பலவிதமான நோய்களுக்கு உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர். ஆஸ்துமா நோய்க்கும் புகைபிடித்தல் காரணம் ஆகும். 
 
இவ்வாறான ஆபத்தான பழக்கங்களை தவிர்த்துக் கொண்டால் பாதிப்புகள் தானாகவே பெரும்பாலும் நீங்கி விடும்.  இந்நாட்டில் புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுப்பாவனைக்கான செலவு பொருளாதார ரீதியில் பெரும் இழப்பாக அமைகின்ற அதேநேரம், அப்பாவனையினால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க செலவிடுப்படுகின்ற பணமும் மிக அதிகமாகும். 

ஆகவே புகையிலை பாவனை, புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனையை தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அது தமக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் நன்மையாக அமையும்.

இதையும் படிங்க

ஆயரும் அரசியல்வாதிகளும் | நிலாந்தன்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 31 | பத்மநாபன் மகாலிங்கம்

தமிழரின் இசைக் கருவிகள்: தமிழரின் இசைக் கருவிகள் மூன்று. 'தமிழ்' என்ற சொல்லின் சிறப்பு ஒலி 'ழ' அல்லவா?  தமிழரின் இசைக் கருவிகளிலும் இந்த 'ழ'...

ஜெனிவாத் தீர்மானமும் பின்னும் | நிலாந்தன்

2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வலைஞர்மடம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு மருத்துவர்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும்...

ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல் | தீபச்செல்வன்

இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது...

ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் வாழ்வும் பணியும்!

மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து வெள்­ளி­விழாக் காண்டவர். இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 30 | பத்மநாபன் மகாலிங்கம்

குதிரை வண்டில் ஓட்டப் போட்டிகள் (Chariot racing) பற்றி கிரேக்கரின் (Greeks) பாரம்பரியமான வரலாற்றில் உள்ளது. ரோமானியர்கள் (Romans) அந்த பழக்கத்தைப் பின்பற்றி, பெருமளவில் மக்களை மகிழ்விக்கும் விளையாட்டாக, குதிரை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை அனுமதிக்க முடியாது!

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்!

14 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கபிட்டல்ஸ் அணி...

எங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய உரிமை இருக்கிறது!

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்க்கப்பலான, ‘யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் (டிடிஜி 53),’ சமீபத்தில் லட்சத்தீவு கடல் வழியாக வந்து சென்றது. இதற்கு, இந்தியாவிடம் முறையான...

மேலும் பதிவுகள்

பாகிஸ்தான் அணியுடான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை...

விசேட போக்குவரத்து சேவை இன்று முதல்!

தமிழ் மற்றும் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விசேட போக்குவரத்து சேவை மற்றும் விசேட ரயில் சேவை ஆகியன முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

துரியன் பழத்தை சாப்பிட்டால் அந்த பிரச்சனைகள் தீரும்!

பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட...

வாழைக்காய், கீரை கறி!

என்னென்ன தேவை?பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,வாழைக்காய் - 1/4 கப்,உப்பு - தேவைக்கு,இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் -...

இலங்கையில் கொரோனா பாதிப்பு முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 11.04.2021

மேஷம்மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பண விஷயங்களை சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும்...

பிந்திய செய்திகள்

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.திருப்பதி கோவில் திருமலை:

ஆஸ்திரேலியாவில் அவல நிலையில் ஒர் ஈராக்கிய குடும்பம்!

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற...

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து...

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – தீவிரவாதிகள்12 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல்...

மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.

மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது!

கூச்பிகாரில் தங்களையும், வாக்களிக்க வந்த மக்களையும் காப்பாற்றுவதற்காகவே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று நடந்த...

துயர் பகிர்வு