Sunday, June 13, 2021

இதையும் படிங்க

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி !

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,...

தெற்காசியாவில் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கை!

தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார்.

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. தமிழக அரசு இன்று...

பின்லாந்துடனான போட்டியில் ஆடுகளத்தில் சுருண்டு வீழ்ந்த நட்சத்திரம்

கோபன்ஹேகனில் நடைபெற்ற பின்லாந்துக்கு எதிரான தனது நாட்டின் யூரோ 2020 தொடக்க ஆட்டத்தின் போது டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் மயக்கமடைந்து, ஆடுகளத்தில் சுருண்டு வீழ்ந்துள்ளார்.

ரணிலுக்கு எதிர்க்கட்சி தலைவராக முடியாது: எம்.எ.சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி, ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் கூட்டத்தில் நானும் பங்குபற்றியிருந்தேன், இதன்போது  சுயாதீனமாக  இயங்குவது குறித்த எந்தவித...

டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்தான!

டெல்லி- சென்ட்ரல் மார்க்கெட் எனக் கூறப்படும் முக்கிய வர்த்தகப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பெரிய கடைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. ஜவுளி...

ஆசிரியர்

கடற்புலிகளின் கதை!

உலக அளவில் தனக்கென கடற்பிரிவு வைத்திருந்த ஒரே இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான்.

உலகின் மிகவும் புகழ்வாய்ந்த இயக்கமான பாலஸ்தீன விடுதலை இயக்கம் கூட தனக்கென கடற்பிரிவு (Sea Wing) எதையும் வைத்திருந்ததில்லை.

833 மைல் நீள கடல்விளிம்பை கொண்ட நாடு இலங்கை. ஒப்பீட்டளவில் நோக்கினால் சிறீலங்காவை விட தமிழ்ஈழமே மிக நீண்ட கடற்கரையைக் கொண்டது.

இப்படி மிகப்பெரிய கடல்பரப்பையும், கடற்கரையையும் கொண்ட தமிழ்ஈழத்தில் நாளை கடல்பரப்பில் யார் செல்வாக்கு செலுத்துகிறார்களோ அவர்களது கையே ஓங்கும் என்ற முடிவுக்கு புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வந்தார்.

இதற்காக கடற்புலிகள் என்ற பிரிவை அமைக்க அவர் முடிவு செய்தார். மிகத் தொலைநோக்கான பார்வை அது.

1990களில் கடற்புலிகள் என்ற பிரிவை தோற்றுவித்ததில் வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் என்ற கர்னல் சங்கர், தலையாய பங்கு வகித்தார்.

3000 போராளிகளைக் கொண்ட கடற்புலிகள் பிரிவுக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சூசை (தில்லையம்பலம் சிவனேசன்) தலைவராகப் பொறுப்பேற்றார். கங்கை அமரன் என்கிற அந்தோணி ஜான்சன் போன்றவர்கள் அவரது கரத்தை வலுப்படுத்தினார்கள்.

யாழ்ப்பாணம் ஊரிக்காடு பகுதியில் 300 கடற்புலிகளுக்கு கடலடியில் முக்குளித்து நீந்தும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சிறிய வள்ளங்கள், மீன்பிடிப் படகுகள் உதவியுடன் கடற்புலிகள் நடமாடி வந்தார்கள். கடற்படை போர்க்கலங்களைக் கண்டால் அவர்கள் தப்பி ஓட வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், கடற்புலிகளின் படகுகளில் மெல்ல மெல்ல வலிமையான கலிபர் சுடுகலன் ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டன. அதே 1990 ஆம் ஆண்டில் கடற்கரும்புலிகள் என்ற தற்கொலைப் படையினர் தோற்றுவிக்கப்பட்டனர்.

1990ம் ஆண்டு, வல்வெட்டித்துறையில் இலங்கைக் கடற்படையின் எடிதாரா கப்பல் கடற் கரும்புலிகளால் தாக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு மே மாதம் கடற்கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் அபிதா என்ற கட்டளைக் கப்பல் கடலின் அடியாழத்தில் அதன் முடிவைத் தேடிக் கொண்டது. ஜெயந்தன், சிதம்பரம் என்ற இரு கடற்கரும்புலிகள் அபிதா கப்பலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகால் மோதி அதை மூழ்கடித்து ஈகமானார்கள். (பின்னாளில் புலிகளின் ஒரு படையணிக்கு ஜெயந்தனின் பெயர் சூட்டப்பட்டது)

1991ல் கடற்புலிகள் முழு அளவில் வலிமை வாய்ந்த ஒரு பெருஞ்சக்தியாக உருவெடுத்தனர். நடுக்கடலில் கடற்படையினருடன் நேருக்கு நேர் அவர்கள் மோதத் தொடங்கினர்.

1992ஆம் ஆண்டில் கிளாலி கடலில் புலிகளும், மக்களும் தன்னிச்சையாக படகுகளில் சென்று வருவதை இலங்கை அரசு தடுக்க முயன்றது. இதற்காக, நாகதேவன்துறையில் அது கடற்படை தளத்தை அமைத்தது.

அது மட்டுமின்றி, ராணுவத்தினரின் துணையுடன், யாழ்ப்பாண தீபகற்பத்தின் வடமேற்கு முனையில் உள்ள மாதகல்லில் கடற்புலிகளின் முகாம் ஒன்றையும் அது தாக்கி அழித்தது.

இப்போது புலிகளின் முறை. இதற்கு தக்க பதிலடி தர புலிகள் திட்டமிட்டனர். அதன் ஒருகட்டமாக, 1992ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம்தேதி, கொழும்பு காலிமுகத் திடல் பகுதியில், கடற்படை அட்மிரல் கிளென்சி பெர்னாண்டோ கொல்லப்பட்டார்.

அதன்பின் பருத்தித்துறை கடலில் கடற்கரும்புலிகள் குண்டு நிரப்பிய படகை மோத விட்டு, கடற்படையின் இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான நவீன டோரா டோரா பீரங்கிப்படகைத் தகர்த்தனர்.

1993ல் கிளாலி கடல்ஏரியிலும் ஒரு டோரா பீரங்கிப் படகை கடற்புலிகள் தகர்த்ததும் ஆடிப் போன கடற்படை, கிளாலி கடற்பகுதியில் ரோந்து சுற்றுவதை நிறுத்திக் கொண்டது.

1993ஆம் ஆண்டு பூநகரி ராணுவ முகாம், நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை புலிகள் தாக்கி அழித்தபோது அதில், கடற்புலிகளின் பங்கு மகத்தானதாக இருந்தது. நாகதேவன்துறை இறங்குதளம், கறுக்காய்த்தீவு பகுதி ஆகியவற்றை கடற்புலிகள் கடல் வழியாக சூழ்ந்து தாக்கினர்.

இதற்குப் பரிசாக கடற்புலிகளுக்கு இலங்கைக் கடற்படையின் 2 அதிவேக நீருந்து படகுகள் (வாட்டர்ஜெட்கள்) கிடைத்தன.
இந்த வாட்டர்ஜெட் படகுகள் வந்தபின் கடற்புலிகளின் வலு இன்னும் கூடிப்போனது.

கடற் போர்களை நடத்துவது, எதிரியின் கலங்களைத் தாக்கி அழிப்பது மட்டுமின்றி, கடல்வழியே வரும் எதிரியை குறிப்பிட்ட பகுதியில் தரையிறங்க விடாமல் தடுப்பது, புலிகளை கடல் வழியாக அதிக அளவில் ஏற்றிச் சென்று உரிய இடத்தில் தாக்குதலுக்காக தரை இறக்குவது, கப்பல்கள் மூலம் வரும் ஆயுதங்களை நடுக்கடலுக்குச் சென்று படகுகளில் ஏற்றி வருவது என பலவித பணிகளில் கடற்புலிகள் ஈடுபடத் தொடங்கினார்கள்.

1994 செப்டம்பர் மாதம் 20ஆம்தேதி மன்னார் அருகே சாகரவர்த்தன என்ற கடற்படைக் கப்பலை புலிகள் மூழ்கடித்தனர். 43 பேர் இருந்த அந்தக் கப்பலில் உயர் அலுவலராக இருந்த கடற்படை லெப்டினன்ட் கமோடார் அஜித் போயாகொட உள்பட 18 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

புலிகளிடம் கைதியாகப் பிடிபட்ட அஜித் போயாகொட அதன்பின்னர் 8 ஆண்டுகாலம் புலிகள் வசம் கைதியாக இருந்தார்.

முல்லைத்தீவு முகாம் மீது புலிகள் நடத்திய ஓயாதஅலைகள் தாக்குதலின் போது, தரைவழியாக மூன்று புறம் புலிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நான்காவது பக்கமாக கடல்வழியாகவும் கடற்புலிகள் தரையிறங்கி தாக்குதல் தொடுத்தனர். நான்குபுறமும் முல்லைத் தீவு முகாம் சுற்றிவளைத்து வீழ்த்தப்பட்டது.

ஓயாத அலைகள் 3 இன் இரண்டாவது கட்டத்தின்போது மன்னார் தீவில், கோட்டைப் பகுதியில் நிலை கொண்டிருந்த மன்னார் ராணுவ முகாமைத் தாக்க, பெரிய படகில் ஆர்டிலரி பீரங்கியை ஏற்றிக் கொண்டுச் சென்ற புலிகள், தீவில் பீரங்கியை நிறுத்தி மன்னார் ராணுவ முகாமைத் தாக்கினர். நாச்சிக்குடா தளத்தில் இருந்து பல்லிமுனை கடற்கரை வழியாக கடற்புலிகள் புறப்பட்டுச் சென்று மன்னார் தீவைக் கைப்பற்ற முயன்றனர்.

கிளிநொச்சி நகரத்துக்குத் 7 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இரணைமடு குளத்தில் கடலில் வருவது போல கடற்புலிகள் படகுகள் மூலம் ரோந்து சுற்றிவந்த காலம் ஒன்று இருந்தது.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் தெற்கே தென்கிழக்கு மூலையில் உள்ள சுண்டிகுளம் பகுதியில் ராடார் வசதியுடன் கூடிய தளத்தை கடற்புலிகள் வைத்திருந்தனர். புங்குடுத்தொடுவை, நல்ல தண்ணீர் தொடுவை, சாளை பகுதிகளிலும் கடற்புலிகள் தளங்கள் அமைத்திருந்தனர். பூநகரியை கைவிட்டுவிட்டு எதிரி நழுவியபோது கடற்புலிகள் அங்கும் தளம் அமைத்துக் கொண்டனர்.

இரண்டாம் உலகப்போரின்போது நடந்த நார்மண்டி தரையிறக்கம், கொரியப்போரின்போது நடந்த இஞ்சோன் தரையிறக்கம் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக பிரிகேடியர் பால்ராஜ் நடத்திய குடாரப்பு தரையிறக்கத்தின்போது அதற்கு படகுகள் மூலம் உதவி, உலக வரலாற்றில் அழியா இடம் பிடித்தனர் கடற்புலிகள்.

(புதிய தமிழ்ப்புலிகள் என்ற பெயரை மாற்றி, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை இயக்கம் சூட்டிக்கொண்ட வரலாற்று நாளை (ஏப்ரல் 05) முன்னிட்டு, சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்ட, புலிகள் அமைப்பின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான கடற்புலிகள் தொடர்பானது இந்தப்பதிவு.)

இதையும் படிங்க

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரியங்கா காந்தி கடும் தாக்கு-கோழையை போல் செயல்படும் மோடி!

புதுடெல்லி: `யார் பொறுப்பு?’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமருக்கு மக்கள் முதலில் முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம்....

கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை!

அம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான...

மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

தொடர்புச் செய்திகள்

ஊழல்கள் பலவிதம் | கவிதை

இல்லாத விடயத்தைஇருக்குது என்றால்இவரு உரையில் ஊழல் சொல்லாத விடயத்தைசொன்னதாய்ச் சொன்னால்சொன்னவர் சொல்லில் ஊழல் பொல்லாத...

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நாட்டில் மேலும் 2,031 பேர் பூரண குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2,031 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13.06.2021)பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழில் அறிமுகமாகும் புதிய டிஜிட்டல் தளம்

தமிழில் சோனி லிவ் என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  கொரோனா காலகட்டத்தில்...

இந்தியாவுக்கு புதிய பெயர் சூட்டிய குஷ்பு

ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் பதிவுகள்

ரணிலுக்கு எதிர்க்கட்சி தலைவராக முடியாது: எம்.எ.சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி, ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் கூட்டத்தில் நானும் பங்குபற்றியிருந்தேன், இதன்போது  சுயாதீனமாக  இயங்குவது குறித்த எந்தவித...

கொரோனாத் தொற்று நோயாளிகளுக்கான மருத்துவ நடைமுறைகள்

எம்மில் பலருக்கு கொரோனாத் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு மருத்துவர்கள் தெளிவான விளக்கத்தை அளிக்கிறார்கள்.

திட்டமிட்டபடி எல்.பி.எல். தொடர் நடைபெறும்!

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) டி-20 தொடரின் இரண்டாம் பதிப்பு முன்னதாக திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? | இராணுவத் தளபதி

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...

கப்பல் தீ விபத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நீதி...

இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டவர் இந்தியாவில் கைது

இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில்  50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர்  ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக தமிழக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

பிந்திய செய்திகள்

ஊழல்கள் பலவிதம் | கவிதை

இல்லாத விடயத்தைஇருக்குது என்றால்இவரு உரையில் ஊழல் சொல்லாத விடயத்தைசொன்னதாய்ச் சொன்னால்சொன்னவர் சொல்லில் ஊழல் பொல்லாத...

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரியங்கா காந்தி கடும் தாக்கு-கோழையை போல் செயல்படும் மோடி!

புதுடெல்லி: `யார் பொறுப்பு?’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமருக்கு மக்கள் முதலில் முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம்....

துயர் பகிர்வு