Wednesday, January 26, 2022

இதையும் படிங்க

மேலும் 241 நபர்கள் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவு

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 241 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது!

பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக...

தேசிய செய்திகள்சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்...

விழி பிதுங்கும் மாடுகள் | துவாரகன்

அந்த நாற்றத்தைநாங்கள்மூன்று தலைமுறையாகஅனுபவிக்கிறோம்என்றார் பெரியவர். நல்ல மாட்டுக்குஒரு சூடு போதும்.இந்த மாடுகளைஎன்னதான் செய்வது? கால்களைப்...

பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் பெருமை!

உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ”பிரதம மந்திரி பால சக்தி...

மட்டு நகர் பார்வீதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முச்சக்கர வண்டி சாரதியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த நிலையில் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது. இன்று...

ஆசிரியர்

ஸ்ரீலங்காவில் தூக்கு கயிறு வாங்கக்கூட மக்களிடம் பணம் இல்லை | அவதானிப்பு மையம் அதிருப்தி

ஸ்ரீலங்காவில் பட்டினி தாங்க முடியாமல் உயிரை மாய்ப்பதற்கு தூக்குக் கயிறுகூட வாங்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், கோத்தபாய ராஜபக்ச யுத்த வீரனல்ல என்றும் ஆளத்தெரியாத கேலி நாயகன் என்றும் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி குறித்து அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

உணவுக்குப் பஞ்சம்

“ஸ்ரீலங்காவில் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடைகளில் இல்லை என்ற நிலைமையால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரும் அவலத்திற்குள் தள்ளியுள்ளது. அன்றாடம் உழைத்து உண்ணுகின்ற கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கை பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

பொருட்களின் கட்டுப்பாடற்ற விலையினால் உழைக்கும் பணத்தில் அருசியைக்கூட வாங்க முடியாத நிலை நிலவுகிறது. இன்னும் சில வாரங்களில் இலங்கையில் அருசி 300 ரூபாவிற்கு விற்கப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. உர இறக்குமதி நிறுத்தப்பட்ட நிலையில் நெல் உற்பத்தியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் பட்டினியால் மக்கள் துடித்து விழுந்து மரணிக்கும் நிலை வரலாம்.

யார் ஆள்வது

நாமே ஆள்வோம், நாமே எல்லாவற்றையும் அடக்குவோம் என்று சூளுரைக்கும் கோத்தபாய ராஜபக்ச பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டு விலையை நீக்கியுள்ளார். இதனால் சந்தையில் கடுமையான விலை உயர்வுகள் நிலவுகின்றன. வியாபாரிகளும் முதலாளிகளும் விலையை தீர்மானித்தால் நாட்டை ஆளுவதற்கு என ஜனாதிபதி எதற்குத் தேவை? ஸ்ரீலங்கா சந்தைகள் ஆட்சி நிர்வாகத்திற்கு வெளியில் உள்ளமை இதனையே உணர்த்துகின்றது.

ஸ்ரீலங்கா அரச தலைவரின் வழி நடத்தலில் இயங்கும் விவசாய அமைச்சு படுதோல்வி அடைந்துள்ளமையும் ஸ்ரீலங்காவின் இன்றைய பெருநெருக்கடிக்கு காரணமாகும். மரக்கறிகளின் விலை தங்கத்தின் விலை போல உயர்ந்து வருகின்றது. உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்காமை, கால போகங்களை மதிப்பிட்டு உற்பதிகளை மேற்கொள்ளாமை, இடர்கால முகாமையின்மை போன்ற  விவசாய அமைச்சின் பிழையான செயற்பாடுகளினால் மரக்கறி சந்தையும் விலை தளம்பி மக்களின் உயிரை எடுக்கின்றது. அத்துடன் வறிய ஆபிரிக்க நாடுகள் போன்று மூட்டைக் கணக்கில் பணத்தை கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கும் நிலையே ஸ்ரீலங்காவில் ஏற்படப் போகின்றது.

வீழும் கோத்தபாய அரசு

ஸ்ரீலங்கா அரசின் சிரேஸ்ட அமைச்சரும் ராஜபக்ச குடும்பத்தினரின் விசுவாசியுமான சுசில் பிரேம் ஜெயந்த அண்மையில் பதவி விலகியிருந்தார். அரசை விமர்சித்தார் என்பதன் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்வின் அழுத்தத்தின் பெயரில் இவர் பதவி விலகியுள்ளார். அத்துடன் கோத்தபாய ராஜபக்ச அரசுக்குள் இருந்தே அவருக்கு எதிரான கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதுவரை காலமும் கோத்தாவை வெற்றி நாயகனாக புகழ்ந்த சிங்களப் பேரினவலாத அரசியல்வாதிகள் இப்போது மிகுந்த கேலிப் பொருளாகக் கருதி அவரை தூக்கி எறிகின்றனர். கோத்தபாய ராஜபக்ச அரசின் வீழ்ச்சியின் அடையாளமாக இடம்பெறும் இந்த நிகழ்வுகள் ஸ்ரீலங்கா எந்தளவுக்கு மோசமான பொருளாதாரக் கட்டத்தை அடைந்துள்ளது என்பதையும் அம்பலப்படுத்துகின்றது. பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ஸ்ரீலங்காவை அதளபாதாளத்திற்குள் தள்ளிய பெருமையை கோத்தாய ராஜபக்ச பெற்றுள்ளார்.

JAFFNA, SRI LANKA – AUG 12: Young girl Asha, 11, sits in the window of her father’s traditional taxi on August 12, 2013 in Jaffna, Sri Lanka, South Asia. Tuk-tuk is a popular asian transport as taxi.

யுத்த வெற்றி என்பது சாபம்

போர் வெற்றி வீரன் என்றும் புலிகளை நாயைப் போல இழுத்து வந்து நந்திக்கடலில் சுட்டேன் என்றும் கடந்த காலத்தில் பேசிய கோத்தபாய ராஜபக்ச இன்றைக்கு அரசியலில் நாயைப் போல இழுத்து எறியப்படுகின்ற சூழ்நிலை உருவாகி வருகின்றது. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு அதனையே தனது மாபெரும் சாதனையாக பேசி வந்த கோத்தபாய ராஜபக்ச இன்றைக்கு கேலியின் நாயகனாக உருமாறி வருகின்றமை காலத்தின் தீர்ப்பாகும்.
உணவை தடுத்து மருந்தை தடுத்து பசியில் தவித்த குழந்தைகள்மீது கொத்துக் குண்டுகளை வீசி, அவர்கள் சுவாசிக்கும் காற்றிலும் நஞ்சைக் கலந்து இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையை கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள் செய்திருந்தனர். ஈழத் தமிழ் இனத்தை அழித்த போரினை மாபெரும் வெற்றியாக சித்திரித்த கோத்தபாய ராஜபக்சவுக்கு அதுவொரு தீராத சாபம் என்பதை இப்போது காலம் உணர்த்துகின்றது.

கோத்தாவின் இராணுவ விவசாயம்

விவசாயத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதாக கோத்தபாய கூறியிருப்பது வேடிக்கையும் அபாயமும் கொண்டாதாகும். ஏற்கனவே கல்வி, மருத்துவம், நிர்வாகம் என அனைத்திலும் இராணுவத்தை நிறைத்தமையினாலேயே ஸ்ரீலங்கா இன்று பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது. கோத்தபாயவின் இராணுவ விவசாயம் ஸ்ரீலங்காவை இன்னும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி அனைத்து மக்களையும் சவக்கிடங்கில் தள்ளும் அபாயத்திற்கான அறிகுறியாகும்
தமிழ் நிலத்தை அன்றைக்கு உணவாலும் அத்தியாவசியப் பொருட்களாலும் தடுத்து உயிர் திருகிய அரசு இன்றைக்கு

அதே நிலமையால் சிறிலங்காவின் கழுத்தை திருகுகின்றது. ஈழத் தமிழ் இனம்மீது மேற்கொண்ட இனப்படுகொலை செயலுக்கு நீதியை நிலைநாட்டுவதுடன் சர்வதேச நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழர் தேசத்தின் தற்சார்புப் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமென உலகத் தமிழர்களை வலியுறுத்துகிறோம்… என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.  உலகின் பாரிய...

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை...

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு கொடுத்த சன்மானம்

சர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு ( வோர்ஸ் பிக்சர்ஸ்) கொடுத்த சன்மானம்.

கரந்தெனிய கறுவா தோட்டத்தில் பாடசாலை மாணவி, இளைஞனின் சடலங்கள் மீட்பு

கரந்தெனிய, பிஹிம்பிய கந்த பிரதேசத்தில் உள்ள கறுவா தோட்டம்  ஒன்றிலிருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதா கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புச் செய்திகள்

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணத்திற்கு முதல் வெற்றி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு குருநாகல் மாலிகாபிட்டிய மைதானத்தில் 25 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஊவா மாகாணம்...

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு கொடுத்த சன்மானம்

சர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு ( வோர்ஸ் பிக்சர்ஸ்) கொடுத்த சன்மானம்.

கரந்தெனிய கறுவா தோட்டத்தில் பாடசாலை மாணவி, இளைஞனின் சடலங்கள் மீட்பு

கரந்தெனிய, பிஹிம்பிய கந்த பிரதேசத்தில் உள்ள கறுவா தோட்டம்  ஒன்றிலிருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதா கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பதிவுகள்

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்

பாகிஸ்தானின் சியொல்கொட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர், அதாவது இலங்கை மதிப்பில் 2 கோடியே  2 இலட்சத்து 48 ஆயிரம்...

முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கி நடித்த அனுபமா பரமேஸ்வரன்

சமீபத்தில் வெளியாகிய ரவுடி பாய்ஸ் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

நாட்டை கட்டியெழுப்ப, ஜனாதிபதி தமது மனதை மாற்றிக்கொள்ளவேண்டும் | ஸ்ரீதரன்

நாட்டின் ஜனாதிபதியின் உரை, அனைத்து மக்களையும் அணைத்து செல்லும் உரையாக அமையவில்லை. இந்தக்கருத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு கொடுத்த சன்மானம்

சர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு ( வோர்ஸ் பிக்சர்ஸ்) கொடுத்த சன்மானம்.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு