Wednesday, March 3, 2021

இதையும் படிங்க

பொலிகண்டிப் பிரகடனம் | அடுத்தது என்ன? | நிலாந்தன்

பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு...

அதிமுகவா? திமுகவா? | வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நேற்று அலுவலகத்தில் தேநீர் இடைவேளை நேரத்தில் சக பணியாளர் ஒருவரிடம், யாருக்கு ஓட்டுப்போடுவிங்க என்று கேட்டபோது, யாருக்கு போடுறதுன்னுல்லாம் பாக்கல, எனக்கு திமுக வரக்கூடாதுங்கறது தான் ஒரே குறிக்கோள் என்றார்....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 23 | பத்மநாபன் மகாலிங்கம்

வட மாகாணத்தில் உள்ள பழைய பாடசாலைகள் விபரம். Jaffna Central College.... யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி..... 1816 ஆம் ஆண்டளவிலும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் | நிலாந்தன்

2009 மேக்குப்பின் ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் என்னோடு கதைக்கும்போது சொன்னார்…தமிழ் மக்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு தென்னிலங்கையில்...

ஸ்ரீலங்கா சுதந்திரதினம் தமிழின அழிப்பு துவங்கிய நாள் | தீபச்செல்வன்

1948 ஆம் ஆண்டு சிலோன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கினர். ஆனால் அன்றைய நாள் ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா...

பாதுகாக்கப்படவேண்டிய திருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் | மருத்துவர் ரெட்ணரஞ்சித்

திருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு...

ஆசிரியர்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

எழுத்தும் வாழ்க்கையும்! — அங்கம் 24 — முருகபூபதி.

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் !

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

முருகபூபதி.

எனது தாத்தா கார்த்திகேசு, சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டிஷாரின் காலத்தில் பொலிஸ் சார்ஜன்ட்டாக இருந்தவர் என்று இந்த தொடரின் முன்னைய அங்கங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

அவர் கண்டிப்பானவர். எங்கள் ஊரில் அவருக்கு மரியாதை இருந்தது. அவர் முன்னிலையில் எவரும் புகைக்கமாட்டார்கள். மது அருந்தமாட்டார்கள். பாட்டியின் அண்ணன் ஒருவர் கஞ்சா- அபின் விற்பனை செய்தார் என்று அவரை கைதுசெய்து சட்டத்தின் முன்னால் தாத்தா நிறுத்தியவர். அந்தச் செல்வந்தர் இறுதிவரையில் அந்தக்கோபத்தைக்காண்பித்து, தங்கை குடும்பத்துடன் உறவைப்பேணவேயில்லை.

பொலிஸ் தாத்தாவின் முகத்தில் கனிவை காண்பது அபூர்வம். எப்பொழுதும் முகத்தை இறுக்கமாகத்தான் வைத்திருப்பார்.

அவர் தனது பொலிஸ் சேவையில் நீதி – நேர்மையை கடைப்பிடித்தமைக்காகவும் சாதனைகள் புரிந்தமைக்காகவும் பிரித்தானிய மகாராணியிடத்திலும் பதக்கம் பெற்றவர்.

அவரது பொலிஸ் வாழ்க்கையில் நிகழ்ந்த திடுக்கிடும் கதைகளை , பாட்டியிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொண்டேன். ஆனால், தாத்தா எனக்கு அக்கதைகளைச் சொல்லவில்லை. அவர் சொல்லித்தந்தது தேவாரமும் திருவாசகமும்தான். அவர் எங்கள் வீட்டு முற்றத்தில் வளர்த்த மல்லிகைப்பந்தலின் கீழே அமர்ந்து என்னை தனது மடியிலிருத்தி சொல்லித்தந்தார்.

ஆரம்பப் பாடசாலைக்கு அழைத்துச்சென்றதும், பாடசாலைவிடும்போது அழைத்துவருவதும் அவர்தான். அதனால் எங்கள் வீதியில் எனக்கு பொலிஸாரின் பேரன் என்ற பெயரும் இருந்தது.

அவரது சீருடைகளையும், பொலிஸ் தரப்பில் அவருக்குத்தரப்பட்டிருந்த குண்டாந்தடியையும் அந்த பதக்கத்தையும்

பார்க்கும்போதெல்லாம், வளர்ந்தால் நானும் பொலிஸ்காரனாகவேண்டும் என்ற கனவுதான் அந்த பால்ய பருவத்தில் என்னிடம் நீடித்திருந்தது.

தாத்தா எனக்கு ஆறுவயதாகவிருக்கும்போது திடீரென மாரடைப்பு வந்து மறைந்தார். நான் பாடசாலை விட்டு வரும்வரையில் அவர் காத்து நிற்கும்போது நிழல் தரும் அரசமரம் பாடசாலைக்கு முன்னாலிருந்தது. நிழல்பரப்பிய அரசமரத்தின் கிளைகளை மாநகர சபை ஊழியர்கள் மின் இணைப்பு பணிகளுக்காக வெட்டி வீழ்த்தியபோது அவர் அவர்களுடன் சண்டை பிடித்தார். அரசமரத்தின் கிளைகளை வெட்டியது அவருக்கு உடன்பாடில்லை.

அன்றைய தினம் இரவு அவர் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு உயிரை விட்டார். பின்னாளில், பல வருடங்களுக்குப்பிறகு அந்த அரசமரம், வீதி அகலமாக்கப்பட்டபோது முற்றாக தரித்து வெட்டப்பட்டசமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருக்கின்றேன். அம்மாவிடமிருந்து வந்த கடிதத்தில் அரசமரம் வெட்டப்பட்ட செய்தி அறிந்து எனக்கும் நெஞ்சுநோ வந்தது.

அந்த அரசமரம் பற்றி நான் எழுதிய சிறுகதை வீரகேசரியிலும், சிங்கப்பூர் தமிழ் முரசுவிலும் வெளியாகியிருக்கிறது.

எனது குடும்பத்தில் எனக்கு தாத்தாவும் பாட்டியும்தான் ஆதர்சம். அவர்கள் எனக்கு Role model. வாழ்வின் மீதான தன்னம்பிக்கையை ஊட்டியவர்கள்.

தாத்தா, நேர்மை , கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கற்றுக்கொண்ட பொலிஸ் திணைக்களம் பின்னாளில் அந்தக் கட்டுப்பாட்டை இழக்கின்ற காலத்தில்தான் நான் எழுத்துலகத்துள் பிரவேசித்தேன்.

பொலிஸ் துறை திணைக்களம் சார்ந்தது. ஆயுதப்படை, விமானப்படை, கடற்படை , அதிரடிப்படை என்பன திணைக்கள விதிமுறைகளிலிருந்து வேறுபட்டு, பாதுகாப்புத்துறைக்குள் வருகின்றன.

1971 இல் ஏப்ரில் மாதம் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆயுதக்கிளர்ச்சியை தொடங்கியபோது அவர்களின் முதலாவது குறி – பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதலாகவே இருந்தது. கதிர்காமம், வெல்லவாய முதலான தென்னிலங்கை நகரங்களின் பொலிஸ் நிலையங்கள் முதலில் தாக்கப்பட்டன.

இதே காலப்பகுதியில் ஹக்மனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. டீ. சமரநாயக்கா சம்பந்தப்பட்ட இரட்டைக்கொலை வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது,

நானும் நண்பர் செல்வரத்தினமும் அந்தச் செய்திகளை வீரகேசரிக்கு எழுதநேர்ந்தது.

அந்த பொலிஸ் அதிகாரியின் கதையை மரணதண்டனை தீர்ப்பு..? என்ற தலைப்பில் எனது சொல்லமறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.

இதே சமயம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து மரணமான தொடம்பே முதலாளி மரணவிசாரணை செய்திகளையும் படித்திருந்தேன்.

பொலிஸ்காரரின் பேரனாக வளர்ந்த எனக்கு அந்தத் துறையில் வேலை தேடும் படலத்தில் ஆர்வம் அற்றுப்போனதற்கு பொலிஸின் அராஜாகங்கள் பற்றிய செய்திகளும் முக்கியகாரணம்.

வீரகேசரியில் பொலிஸ் செய்திகளை எழுதியும் ஒப்புநோக்கியும் வந்தமையால், தென்னிலங்கை சிங்கள இளைஞர்கள் மற்றும் வட இலங்கை தமிழ் இளைஞர்களின் அறச்சீற்றங்களை புரிந்துகொள்ளமுடிந்தது.

1977 இல் ஜே.ஆர். ஜெயவர்தனா பதவியேற்ற சில தினங்களில் யாழ். சம்பத்தரிசியார் கல்லூரியில் நடந்த களியாட்ட நிகழ்ச்சியில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகங்களிலிருந்து ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஆயுதக்கலசாரத்தின் கதை ஆரம்பமாகிறது. 1981 இல் யாழ். பொது நூலகம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டதிலிருந்து ஆயுதப்போராட்டம் உக்கிரமடைந்தது.

சம்பத்தரிசியார் களியாட்ட விழாத்திடலில் தொடங்கிய கலவரம் அநுராதபுரம் தொடக்கம் தென்னிலங்கை வரையில் விஸ்தீரணமடைந்தது. யாழ்ப்பாணத்தில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரா மீது உரும்பராய் சிவகுமாரனின் குண்டுவீச்சுத்தாக்குதலிலிருந்து படிப்படியாக இரண்டு தரப்பிலிருந்தும் வன்முறைகள் வெடித்தன.

தினம் தினம் பொலிஸ் தரப்பு செய்திகள் வீரகேசரிக்கு வந்தமையால் அவற்றை ஒப்புநோக்கும்போதே இலங்கையின் எதிர்காலம் குறித்த கவலையும் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. நான் தினமும் நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன். அச்செய்திகள் சிங்கள ஊடகங்களிலும் வெளியானமையால் பயணிக்கும் பஸ்ஸில் தெரிந்த தமிழர்கள் இருந்தாலும் உரத்துப்பேசுவதற்கு தயக்கம் இருந்தது.

1976 ஆம் ஆண்டு மேமாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்றம்பெற்றிருந்தது. அத்துடன் வேறும் சில ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்கள் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்யத் தொடங்கியிருந்தன.

வடக்கில் நீர்வேலி, புத்தூர், புலோலி , கோப்பாய் வங்கிக்கொள்ளைகள் இடம்பெற்றன. அதில் சம்பந்தப்பட்டவர்களை தேடும் தீவிர வேட்டையில் ஈடுபட்ட பொலிஸாரும் குறிவைக்கப்பட்டனர். யாழ். மேயர் அல்ஃபிரட் துரையப்பாவை கொலைசெய்தவர்களை தேடுவதில் சில தமிழ் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தனர்.

அவ்வாறு சம்பந்தப்பட்ட முக்கிய பொலிஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை. 1978 ஏப்ரில் மாதம் அவரும் அவருடன் முருங்கன் காட்டுக்குள் தேடுதலுக்கு சென்ற மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளதும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளை ஒப்புநோக்கிய காலப்பகுதியில், மற்றும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் இரத்மலானை விமான நிலையத்தில் நடந்தது.

அச்செய்தி:

1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை முதலில் பலாலிக்குப்பறந்த அவ்ரோ விமானம், அங்கிருந்து இரத்மலானை திரும்பி, கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலைத்திற்கு வந்து, அங்கிருந்து பம்பாய்க்கு பறக்கவிருந்தது. எனினும் இரத்மலானை விமானநிலையத்தில் அதனை சுத்தம்செய்யும் தருணத்தில் வெடித்துச்சிதறியதனால், 1931 இல் திறக்கப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்க அந்த முன்னைய பழைய பாராளுமன்ற கட்டிடம் உயிர்தப்பியது.

இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ வெடித்தபோது, கொழும்பு கிராண்ட்பாஸில் மற்றுமொரு சம்பவம் நடந்தது. ஒரு இனந்தெரியாத நபர் வீரகேசரி அலுவலகத்தின் வாயிலிலிருக்கும் பாதுகாவலர் அறையில் ஒரு கடித உறையை கொடுத்துவிட்டு மாயமாகிவிட்டார்.

வீரகேசரி ஆசிரியருக்கு எனத்தலைப்பிடப்பட்ட அந்த உறையை பிரித்துப்பார்த்தபோது ஆசிரியபீடம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. பஸ்தியாம் பிள்ளை உட்பட மூவரின் கொலைக்கும் உரிமைகோரியும் மேலும் சில கொலைச்சம்பவங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கும் தாமே பொறுப்பு என்றும் தெரிவித்திருந்த அந்தக்கடிதம் பல சந்தேகங்களை எழுப்பியது.

புலிகள் இயக்க லெட்டர்ஹேடில் தட்டச்சுசெய்யப்பட்டிருந்த அக்கடிதம் போலியானதா, நிஜமானதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டி பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம் பிரதம செய்தி ஆசிரியர் டேவிட்ராஜூ, சிரேஷ்ட துணை செய்தி ஆசிரியர்கள் நடராஜா, கார்மேகம் ஆகியோர் மந்திராலோசனை நடத்தினர்.

இறுதியில் புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகளை அழைத்து அவர்களின் அனுமதியுடன் அதனை வீரகேசரியின் முதல் பக்கத்தில் பிரசுரிக்க ஆவன செய்தனர். குறிப்பிட்ட முதல் பக்கத்தின் முழுமையான பக்கம் தயாரான வேளையில் மாலை நேரம் நான் எனது இரவு நேரக்கடமைக்கு அலுவலகத்தினுள்ளே ஒப்புநோக்காளர் பிரிவுக்கு வந்துசேர்ந்தேன்.

அன்று இரவு வீரகேசரியில் பணிமுடியும்போது நடுஇரவும் கடந்துவிட்டது. அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் நண்பர் தனபாலசிங்கமும் வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தின் ஆசிரியபீடத்திலேயே தங்கிவிட்டோம்.

எனக்கு நீர்கொழும்புக்குச்செல்வதற்கு இரவு 12.30 மணிக்குத்தான் கடைசி பஸ். அதனை தவறவிட்டால் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் மறுநாளுக்கான முதல் பஸ். இரவுக்கடமையின்போது கடைசிபஸ் தவறவிடப்படுமானால் அலுவலகத்திலேயே தங்கிவிடுவது எனது வழக்கம்.

1977 கலவரத்திற்குப்பின்னர், தனபாலசிங்கம் வேலைமுடிந்து நடந்துபோகும் தூரத்திலிருக்கும் கொட்டாஞ்சேனைக்கு நடு இரவில் வீடுதிரும்பமாட்டார். அவ்வாறு வீடு திரும்ப முடியாத ஊழியர்கள் வீரகேசரி அலுவலகத்தில் தங்கலாம். ஆனால் படுக்கை, தலையணை, விரிப்புகள்தான் இருக்காது. ஆசிரியபீடத்திலிருக்கும் உதவிஆசிரியர்கள் பயன்படுத்தும் மேசைகள் எமக்கு கட்டில். அங்கிருக்கும் வீரகேசரி பிரதிகளும் இதரபத்திரிகைப்பிரதிகளும் தொகுக்கப்பட்ட பெரிய கோவைகளே எமக்கு தலையணைகள். அச்சுக்கூடத்திலிருந்து பத்திரிகை அச்சிடும் நீண்ட தாளை உருவி எடுத்துவந்து மேசையில் விரித்துப்படுப்போம்.

நுளம்புகள் ரீங்காரமிடும். டெங்கு அபாயம் அக்காலத்திலிருந்ததாக ஞாபகம் இல்லை. விட்டத்தில் சுற்றும் மின்விசிறிகள் நுளம்புகள் எம்மை அண்டவிடாது பாதுகாக்கும். ஆனால், காலை எழும்போது கண்கள் எரியும். மூக்கு அடைத்திருக்கும்.

செய்தி ஆசிரியர்களாக பணியிலிருந்த நடராஜா மற்றும் கார்மேகம் ஆகியோர் சில நாட்கள் இரவுக்கடமையின்போது அங்கு

தங்கிவிடுவதும் உண்டு. அந்த நாட்கள் இனிமையானவை. ஆமர்வீதிச்சந்தியிலிருக்கும் அம்பாள் கபே, வாணிவிலாஸ் தோசை, இடியப்பம் உண்ட நாட்கள் அவை. கெப்பிட்டல் தியேட்டருக்கு அருகில் ஒரு குச்சொழுங்கையிலிருந்த தீவுப்பகுதியைச்சேர்ந்த அன்பர் ஒருவர் நடத்திய சாப்பாட்டுக்கடையில் புட்டும் சம்பலும் முட்டைப்பொரியலும் நண்டுக்குழம்பும் சுவையானவை. அக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியிலிருந்த ஆனந்தசங்கரியும் அங்கு இரவுச்சாப்பாட்டிற்கு வருவதைக்கண்டிருக்கின்றேன்.

அந்தப்பிரதேசத்தில் அந்த சாப்பாட்டுக்கடை பிரசித்திபெற்றது. மேற்படி மூன்றில் ஏதாவது ஒன்றில் இரவு உணவை முடித்துக்கொண்டு, மீண்டும் பணிதொடங்கி, வீரகேசரி அலுவலகம் தரும் இரவு நேர பால்தேநீருடன் படுக்கை விரித்து உறங்கிவிடுவோம்.

மறுநாள் எழுந்து அங்கேயே சிரமபரிகாரம் செய்து குளித்து உடைமாற்றிக்கொண்டு சீனிச்சம்பலும் பாணும் சாப்பிட்டுவிட்டு மீண்டும்பணி தொடருவோம். இப்படி கழிந்த நாட்களில் ஒருநாள் இரவை மறக்கவே முடியாது.

நண்பர் தனபாலசிங்கத்துடன் அரசியல், இலக்கியம், சமூகம் தொடர்பாக அடிக்கடி உரையாடுவதும் விவாதிப்பதும் அன்றாட நிகழ்வு. புலிகளின் கடிதம் வந்த அன்றையதினம் நாமிருவரும் இரவுக்கடமையில் இருந்தோம். எங்களது உரையாடல் குறிப்பிட்ட கடிதம் பற்றியே சுற்றிச்சுற்றி வந்தது.

அன்று மதியம் அலுவலகம் வந்த புலானாய்வுப்பிரிவு அதிகாரிகள், குறிப்பிட்ட கடிதத்தின் மூலப்பிரதியை பிரதி எடுத்துக்கொண்ட பின்பே பிரசுரிக்க அனுமதியளித்துள்ளனர். இதுபோன்ற கடிதத்தின் பிரதிகள் கொழும்பிலிருந்து வெளியாகும் ஏனைய தமிழ், ஆங்கில, சிங்கள ஏடுகளுக்கும் வந்திருக்கிறதா? என்ற கேள்விக்கு குறிப்பிட்ட அதிகாரிகளிடமிருந்து திருப்திகரமான பதில் இல்லை. வீரகேசரி இலங்கையில் பிரசித்தி பெற்ற முன்னணிப் பத்திரிகை. விற்பனை எண்ணிக்கையும் அதிகம். அந்தக்கடிதத்தை வீரகேசரிக்கு மாத்திரம் கொடுப்பதன் மூலம் புலிகள் இயக்கம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கலாம்.

அல்லது அப்படி ஒரு கடிதத்தை தயார்செய்து அதனை வீரகேசரியில் வெளியிட்டு, அதன்பின்னர் அவசரகாலச்சட்டத்தையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தையும் விரிவுபடுத்தி புலிப்படைத்தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அரசின் புலானாய்வுப்பிரிவு திட்டமிட்டிருக்கலாம்.

குறிப்பிட்ட புலிகளின் கடிதம் வீரகேசரியில் மாத்திரமே வெளியானது. அதுவே எமது ஐயப்பாடுகளின் ரிஷிமூலம். அந்தச்செய்தி வெளியான அனைத்து வீரகேசரி பத்திரிகை பிரதிகளும் வெளியாகி சில மணிநேரங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டன. வீரகேசரி குழுமத்தின் மற்றுமொரு பத்திரிகையான மித்திரனிலும் அச்செய்தி வெளியாகி விற்றுத்தீர்ந்துவிட்டது. எனது சில இலக்கிய நண்பர்கள் என்னுடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட வீரகேசரியின் பிரதிகளை பெற்றுத்தருமாறு பலதடவை கேட்டனர். எனினும் பிரதிக்கு தட்டுப்பாடு நிலவியது.

அந்தக்கடிதம் தொடர்பாக பிரபல இடதுசாரி தொழிற்சங்கத்தலைவர் பாலாதம்பு மாத்திரமே வெளிப்படையாக கருத்துவெளியிட்டிருந்தார். புலிப்படைத்தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காகவே, அரசாங்கமே தயாரித்து வெளியிட்ட கடிதம் என்பது அவரது கருத்தாக அமைந்திருந்தது.

அவ்ரோ விமான சம்பவத்திற்கும் அந்தக்கடிதத்திற்கும் ஒற்றுமை இருந்தது. புலிகள் இயக்கம் ‘உரிமைகோரும்’ மரபு அந்தக்கடிதத்துடன் ஆரம்பமாகியது. அந்தக்கடிதம் வெளியானதும், புலிப்படைத்தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளன்று இரவுக்கடமை முடிந்து வழக்கம்போன்று வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பேப்பர் விரித்து படுத்துவிட்டோம்.

நடுச்சாமம் கடந்து அதிகாலை இரண்டு மணியிருக்கும். ஆழ்ந்த உறக்கத்தை குழப்பியது ஒரு தொலைபேசி அழைப்பு. அடுத்தடுத்த மேசைகளில் படுத்திருந்த தனபாலசிங்கமும் கொம்போசிட்டர் கதிர்வேல் அண்ணையும் எழுந்திருக்க பஞ்சிப்பட்டனர்.

தொலைபேசி தொடர்ந்து சிணுங்கியது.

“ மச்சான் எழும்பி எடுடாப்பா… இந்த நேரத்தில் யார்தான்

எடுக்கிறாங்களோ…” என்று எரிச்சல்பட்டார் தனபாலசிங்கம். நானும் சலிப்புடன் எழுந்து தொலைபேசியை எடுத்து, ‘ஹலோ’ சொன்னேன்.

மறுமுனையிலிருந்து ஒரு தடித்த ஆண்குரல். புலிகள் இயக்கத்தின் தலைமைக்காரியாலயத்திலிருந்து பேசுவதாகவும் தொலைபேசி ஊடாக ஒரு அறிக்கை தருவதாகவும் அதனை எழுதி ஆசிரியபீடத்தில் கொடுக்குமாறும் அதிகார தோரணையில் அந்தக்குரல் பேசியது. உறக்கக்கலக்கத்திலிருந்த நான் திடுக்கிட்டு சுதாரித்துக்கொண்டேன். “தற்போது இரவு நேரம். இனி மறுநாள் காலைதான் வீரகேசரி அலுவலகம் பணிகளுக்காக திறக்கப்படும். அப்பொழுது தொடர்புகொள்ளுங்கள்” என்றேன். “ பரவாயில்லை. நாம் தருவதை எழுதிக்கொடுங்கள்” என்று அந்தக்குரலுக்குரியவர் வற்புறுத்தினார். சொல்லச்சொல்ல எழுதினேன். பலதாக்குதல் சம்பவங்ளை பட்டியலிட்டு அவற்றுக்கெல்லாம் தாமே உரிமைகோருவதாக அந்தக்குரல் சொன்னது.

“ புலிகளின் தாகம் தமிழ் ஈழத்தாயகம். வணக்கம்.” என்று செல்லிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார். குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பு எங்கிருந்தும் வந்திருக்கலாம். தனபாலசிங்கத்தை தட்டி எழுப்பி தகவல் சொன்னேன். “ எழுதியதை பிரதம ஆசிரியரின் மேசையில் வைத்துவிட்டு படுக்குமாறு” நண்பர் சென்னார். திகதி, நேரத்தையும் அதில் குறித்து ஆசிரியரின் மேசையில் வைத்துவிட்டு, மறுநாள் காலை பிரதம செய்தி ஆசிரியர் கடமைக்கு வந்ததும் சொன்னேன்.

மீண்டும் ஒரு மந்திராலோசனை ஆசிரியபீடத்தில் நடந்தது. தொலைபேசி வாயிலாக வந்த அந்த அறிக்கையை வீரகேசரி தீவிரமான கவனத்திற்குட்படுத்தவில்லை.

அக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்துடன் பல்வேறு இயக்கங்களும் களத்திலிருந்து சம்பவங்களுக்கு உரிமைகோரிக்கொண்டிருந்தன.

ஏனைய இயக்கங்கள் புலிகளினால் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும், பல சம்பவங்களுக்கு புலிகள் மறுப்பறிக்கை வெளியிடும் மரபையே தொடக்கியிருந்தனர்.

வீரகேசரிக்கு அன்று தரப்பட்ட அக்கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகப் பெயர் 05.05.1976 முதல் மாற்றி அமைக்கப்பட்டு ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின்வரும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்:

1. திரு.அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை)

2. திரு என். நடராஜா (உரிமையாளர் பெற்றோல் கராஜ், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு)

3. திரு ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை,சுட்டுக்கொலை)

4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை.

(அதே நாளில் சுட்டுக்கொலை)

5. திரு.சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)

6. திரு. தங்கராஜா (முன்நாள் நல்லூர் சுதந்திரக் கட்சி எம்பீயான திரு.அருளம்பலத்தின் காரியதரிசி)

7. திரு.சி.கனகரத்தினம் (முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்போது ஐ.தே.க வில் அங்கம் வகிக்கும் பொத்துவில் எம்.பி)

8. திரு,பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்)

9.திரு.பேரம்பலம் (இரகசியப் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர்)

10. திரு.பாலசிங்கம் (இரகசியப் பொலீஸ் சார்ஜன்ட்)

11. திரு.சிறிவர்தன(இரகசியப் பொலீஸ் சாரதி)

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடிவந்தனர். அவர்கள் வசம் எஸ்.எம்.ஜி, ஷொட்கன், கைத் துப்பாக்கி ஆகியவை இருந்தன. அவர்கள் புலிகளைத் தாக்கினார்கள். அப்புலிகள் தங்களுக்கு உடல் காயமோ உயிர்ச் சேதமோ எதுவுமின்றி அவர்களை அழித்தார்கள். காரும் அழிக்கப்பட்டது.

இந்த மரணங்களுக்கு வேறு எந்தக் குழுவோ அல்லது இயக்கமோ அல்லது தனி நபர்களோ உரிமை கொண்டாட முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளைத் தவிர

இவற்றுக்கு உரிமை கொண்டாடும் வேறு எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது எழுத்துலக வாழ்வில் இலங்கை அரசியலும் இவ்வாறு கவனத்திற்குள்ளாகிக்கொண்டே வருவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது !

-முருகபூபதி

இதையும் படிங்க

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்!

2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜெனீவா:உலகளவில் செவி திறன்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 26 | பத்மநாபன் மகாலிங்கம்

முன்னர் எட்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு கனிஷ்ட பாடசாலை சான்றிதழும் (Junior school certificate, J.S.C), பத்தாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிரேஷ்ட பாடசாலை சான்றிதழும் (Senior school certificate,...

ஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு | நிலாந்தன்

கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்

கிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் "நகர வாழ்க்கையே சிறந்தது" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...

ஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? | நிலாந்தன்

கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின் போக்கை மதிப்பிடக்கூடியதாக இருக்கும்....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்

கல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய...

தொடர்புச் செய்திகள்

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கிளிநொச்சியில் சிறப்பாக நடந்த நடுகை வெளியீட்டு விழா!

நடுகை கவிதை இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.02.2021) மாலை  கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது. நடுகை " அம்பலம்" சஞ்சிகையை நடாத்தி வந்த  குழுமத்தினரால்.....

ஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்

மேற்கு ஈராக்கில் புதன்கிழமை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தும் ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து குறைந்தது 10 ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கிந்தியத்தீவுகள் – இலங்கைக்கிடையேயான டி-20 கிரிக்கெட் சமர் நாளை அதிகாலை

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பதிவுகள்

அமெரிக்க, தாய்வானின் வலுவான உறவும் சீனாவின் போர் எச்சரிக்கையும்

அமெரிக்காவும் தாய்வானும் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு வருவதால், சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு சுதந்திரத்தை விரும்பும் மக்களை எச்சரித்துள்ளது. மேலும் “தாய்வான் சுதந்திரம்” தேடுவது என்பது...

மொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி

சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது சிறை முகாமாக இருக்கலாம்...

நடிகராகும் இயக்குனர்

'மைனா', 'கும்கி' என வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் 'அழகிய கண்ணே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

புகழின் அதிரடி வளர்ச்சி | குவியும் வாழ்த்துகள்

குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழின் வளர்ச்சியை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி...

உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் | கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்றைய தினம் கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர்...

மூதாதையர் பேணி வந்த பூரண வாய்ச்சுகாதார பராமரிப்பு தீர்வு

இயற்கையான வாய்ச் சுகாதார பராமரிப்பு தீர்வுகளுக்கான தேவை தினமும் மிகப் பாரிய அளவில் அதிகரித்து வரும் ஒரு விடயமாக காணப்படுகிறது. மக்கள் முன்னரை விட, தங்கள்...

பிந்திய செய்திகள்

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

துயர் பகிர்வு