செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை விவேக் மரணம் | மாரடைப்பு பற்றி அவதானமாய் இருப்போம்! – தெ.சு.கவுதமன்

விவேக் மரணம் | மாரடைப்பு பற்றி அவதானமாய் இருப்போம்! – தெ.சு.கவுதமன்

2 minutes read

நம் இதயத்துக்கு இடது(70%), வலது(30%) என இரண்டு ரத்தக்குழாய்கள்(தமனி) ரத்தத்தைக் கொண்டுசெல்கின்றன. இதில், இடது ரத்தக்குழாய், மேலும் இரண்டாகப் பிரிந்து, 30% + 40% என்ற சதவிகிதத்தில் ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. இதில் 40% ரத்தத்தைக் கொண்டுசெல்லக்கூடிய, இடதுபுறத்தில் முன்பக்கமாக உள்ள தமனியில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டது தான் நடிகர் விவேக்கின் மாரடைப்புக்குக் காரணமாகியுள்ளது.

இப்படியான அடைப்பென்பது ஒரே நாளில் ஏற்படக்கூடியதல்ல. அதேபோல, இதுவே முதன்முறை மாரடைப்பாக இருக்குமென்பதும் உறுதியில்லை. நமக்கே தெரியாததுபோல் மைல்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதும் உண்டு. அது நம் கவனத்துக்கே வராமல் போகலாம். நம் உடல் நலம் குறித்த நம்பிக்கையால், இதயப் பரிசோதனைகளைச் செய்யாமலிருந்தால், தமனியில் அடைப்பு உருவாவது நமக்குத் தெரியாமலேயே போகக்கூடும்.

நடிகர் விவேக்கின் குடும்பத்தில், கடந்த 6 ஆண்டுகளில், அவரது தந்தையின் மரணம், அவரது மகனின் மரணம், அடுத்து அவரது தாயின் மரணமென்று அடுத்தடுத்த மரணங்களால் மன உளைச்சலில் இருந்தார். குறிப்பாக, அவரது மகனின் மரணத்துக்குப்பின்பு அவரது இயல்பையே தொலைத்துவிட்டார். கூடுதலாக, அவரது குரு, வழிகாட்டிகளான இயக்குநர் பாலச்சந்தர், அப்துல்கலாமின் மரணமும் அவரது மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது. மன உளைச்சலைத் தவிர்க்க, யோகா வகுப்புக்கெல்லாம் சென்றிருக்கிறார்.

மாரடைப்புகளைப் பொறுத்தவரை, சைலண்ட் ஹார்ட் அட்டாக் எனப்படுவதில், அதை உணரக்கூட முடியாமல் தூக்கத்திலேயே உயிர்பிரியும் சம்பவங்கள் நடக்கின்றன. sudden heart attack என்பது, நன்றாக இருக்கும்போதே திடீரென வரக்கூடிய ஹார்ட் அட்டாக் இது. பேசிக்கொண்டிருக்கும்போதேகூட சட்டெனச் சரிந்து விழுவார்கள். சுகர் பிரச்சனை இருந்து கவனிக்காமலேயே விட்டிருந்தால் இத்தகைய ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புண்டு. வயதானவர்கள், டாய்லெட்டில் மலச்சிக்கலால் சற்றே முக்கினால்கூட ஹார்ட் அட்டாக் வரக்கூடும். இப்படி, டாய்லெட்டில் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தவர்கள் பலருண்டு. பிரபல மருத்துவமனையொன்றின் தலைவரே இப்படித்தான் உயிரிழந்தார்.

அதேபோல, ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதும், முதல் ஒரு மணி நேரத்தை கோல்டன் ஹவர் என்பார்கள் இந்த ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவ உதவியை அளித்துவிட்டால் காப்பாற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நடிகர் விவேக்குக்கு இந்த கோல்டன் ஹவர் தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னும் பல்வேறு மருத்துவ உதவிகள் தரப்பட்டும் காப்பாற்ற இயலவில்லை.

ரத்தம் உறைவுப் பிரச்சனை குறித்து ஒரு தகவல். கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு 16% அளவுக்கு ரத்தம் உறைவுப்பிரச்சனை (blood clot) ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதற்கான சிகிச்சையோடு, ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகளும் வழங்கப்படும். கொரோனா பாதிப்பால் மட்டுமல்ல, சிகரெட் குடிக்கும் பழக்கமிருந்தாலோ, கர்ப்பத்தடை மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டாலோ ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான அளவில் ரத்தம் உறைவுப்பிரச்சனைக்கு வாய்ப்புண்டு. அதுவே, கோவிட் தடுப்பூசியில், 0.000….1% என்று குறிப்பிடக்கூடிய அளவில், மிகமிகச் சொற்பமான சதவிகித அளவில்தான் வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசியால் உடனடி ஹார்ட் அட்டாக் வருவதற்கான சாத்தியமில்லையென்றே கருதலாம்.

மருத்துவ அறிவியலென்பது, அனைத்தையும் நீண்ட கால, ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்தியே எதையும் ஏற்கவல்லது. பொத்தாம்பொதுவாக யூகத்தின் அடிப்படையில் எதையும் ஏற்காது. நடிகர் விவேக் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுவதால், மருத்துவ நிபுணர்களிடம் நான் சேகரித்தத் தகவல்களின் அடிப்படையிலேயே இதனை எழுதியுள்ளேன். மக்களிடமுள்ள அறியாமையைப் போக்குவது மட்டுமல்லாது, நானும் சிலவற்றைக் கற்றறிந்து எனது அறியாமையையும் போக்கிக்கொள்ளவே இவற்றைக் கேட்டறிந்து கட்டுரையாக்கியுள்ளேன்.

உங்களுக்கு இதிலெல்லாம் சந்தேகமிருந்தால் நிபுணர்களிடம் கேட்டறியுங்கள். மிகச்சிறந்த கட்டுரையாளர்களாக இருப்பவர்கள் அனைவரும், அனைத்திலும் நிபுணர்களாக இருப்பதில்லை. எனவே, எந்த விஷயத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதுகுறித்து அறிந்துகொள்ளும் முறைப்படியான தேடலை வளர்த்துக்கொள்ளுங்கள். தேடலே நம் அறிவை விரிவாக்கும். தேடலே நம் வாழ்க்கை. வாழ்தல் இனிது.

  • வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.