Sunday, September 19, 2021

இதையும் படிங்க

பால்மாவின் விலை அதிகரிக்கப்படுமா ?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ள நிலையில் பால்மா இறக்குமதி நிறுவனங்களால் அதன் விலையை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த...

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

சர்வதேச தலையீடுகளை அனுமதிப்பதில்லை என்பதே அரசாங்கத்தின் கொள்கையாம்!

நாட்டின் சுதந்திரம், அபிமானம் ஆகியவற்றின் மீது தலையிட சர்வதேசத்திற்கோ, சர்வதேச நிறுவனங்களுக்கோ இடமளிப்பதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகிழ்ச்சியாம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள நன்மை! | விசேட வைத்திய நிபுணர்கள்

 நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

ஆசிரியர்

எப்படி இருந்தது வாழ்வு? | க. பத்திநாதன்

தமிழர் வாழ்வியல்

சூரியன் வர முதலே அம்மா வந்து எழுப்புவாவு? எழும்பின உடனே சுட வச்ச உப்புத்தண்ணி இருக்கும். அதுதான் இப்பத்தைய மவுத் வொஸ் (mouth wash) அத எடுத்து வாயக்கொப்பளிச்சிட்டு கமகமெண்டு மணக்குற தேத்தண்ணியக் குடிச்சா சும்மா சூட்டக்கிழப்பி நெஞ்ச எரிச்சித்துப் போகும்.

காரணம் அம்மா தேத்தண்ணிக்க போட்ட நன்னாரி வேர். வெனிலாவும் தோத்துப் போகும். இனி அப்படியே எழும்பி பக்கத்து வீட்டு நண்பர்களோட சேர்ந்து வெம்புக் காட்டுக்க போய்ப் பார்த்து, அவரவருக்கு விருப்பமான வேம்புக் கந்த உடச்செடுத்து அத பல்லாலையே கடிச்சி இழைகள் உண்டாக்கி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கமிருந்து பல்லத்தீட்டுவம். பல்லுல இருக்குற சிலும்பலெல்லாம் சும்மா அப்படி சேர்ந்து வரும் துப்பக்குள்ள. வேம்புச்சுவை அப்படியே வாய்க்க துப்பலோட கலந்து ஊறித்து நிக்கும். கம்ப கீழ போட்டாலும் எந்த பிரச்சினையும் இல்ல ஆனா இப்ப? எல்லாம் பிளாஸ்ரிக். எல்லாத்துக்கும் பிரச்சினை.


அப்படி இல்லாட்டி சில நேரம் அம்மா அடுப்புச் சாம்பலும், கரித்துண்டும் வச்சிருப்பாவு. எடுத்து வளவுக்க நிண்டே பல்லத்தீட்டினா அப்பிடியே பளபளக்கும் பல்லு. அதத்தான் இப்ப வார எல்லா பற்பசையிலும் சேக்குறாங்க. கரி எண்டால் கூடாது ஆனா Charcoal போட்ட Soult பற்பசை எண்டால் நல்லது. உயர் தரமான தயாரிப்பு. பல்லத் தீட்டித்து(துலக்குதல்) வாய்க்காலுக்க குளிக்கப் போனால், சில நேரம் சோப் இருக்காது. அதுவும் நாங்க போடுறது சன்லைட் சோப் தான். ஆனா சல்லைட் சல்லைட் எண்டுதான் நாங்க சொல்லுற. அதுவும் முருகன் கோயில் (கோயிலுக்குப் பக்கத்துல இருக்றதால இந்த பேர்) கடையில நூல்ல போட்டு வெட்டித் தருவாங்க கால்கட்டி. நல்லா தேசிக்காய் மணக்கும். அது சின்னக் கடதான் ஆனா எங்கள்ட இரிக்கிற காசிக்கு அங்க மட்டும் சாமான் தாரளமா வாங்குவம். வசதிக்கேத்த வாழ்வாதாரக்கடைகள் அது.

பார் சோப்

இப்ப எங்க அதெல்லாம். சன்லைட் சோப் இல்லாட்டி வார் சோப். சும்மா ஒரடிக்கு மேல இரிக்கும் நீண்டு. அதுவும் வாங்க ஏலாட்டி வெச்சிருப்பாவு அம்மம்மா சாமான். ராவு பாணிக்கி புழிஞ்ச பனங்கொட்ட. அத போட்டு தேய் தேய் எண்டு தேச்சா நுர அப்படி வரும். இருந்தாலும் சல்லைட் விளம்பரம் இடைக்கிடைக்க வந்துதான் போகும். அப்டியே குளிச்சிட்டு வந்தால் அம்மா தண்ணிச்சோறு கரையல் செஞ்சித்து இருப்பாவு. பழம், பால், முந்திரியங்கொட்ட எல்லாம் போட்டு கரைக்குற கரையல் இருக்கே சும்மா அப்படி இரிக்கும். பள்ளிக்கூடம் விட்டு வரும் வரைக்கும் பசிக்காது. அப்படியொரு சாப்பாடு. (இப்பெல்லாம் அதுதானே குடல் புண்ணுக்கு மருந்து.) ஆனா எனக்கு அத எந்த நாளும் சாப்புடுறது ஒத்துவாரல்ல. அதால எனக்கு மட்டும் அம்மா நல்லா வெயில்ல காயவச்ச மங்குக் கருவாட்ட (மீனின் சிறிய பருவம்) அடுப்புக்கரிக்க போட்டு சுட்டுத்தருவாவு. கமகம எண்டு கருவாடு மணக்கும். அதோட சேர்த்து சின்ன வெங்காயம், வாழ கொச்சிக்கா, தேங்காப்பூ கொஞ்சம் இருக்கும். அத எல்லாத்தையும் சேர்த்து உப்பையும் ஊத்தி சாப்பிடுற சுவையிருக்குதே இத நினைச்சு நினைச்சுப் பார்த்து type பண்ணக்குள்ளையே வாயூறுது. இப்ப இதச்செய்யத்தான் மெசின் கண்டு பிடிச்சி அதுக்கு கரியும் வேறையா தயாரிக்கிறாங்க. நினைச்சா?

சில நேரம் பழஞ்சோறு மிச்சமாகிடும். அத அம்மம்மா வெயில்ல காய வச்சு பின்நேரத்துல அத சின்ன உரலுக்க போட்டு இடிச்சி அதோட தேங்காப்பூ, குரக்கன் மாவு எல்லாம் போட்டு பிரட்டி உருண்ட உருண்டையா புடிச்சி ஆளுக்கொண்டாத் தருவாவு. சாப்பிட்டா அதுட ருசிய எப்படிச் சொல்றது. இப்ப கிலோக் கிலோவா குப்பையில கிடக்குத் தண்ணிச்சோறு. சில நேரம் காலச்சாப்பாடு இலக்கஞ்சி தான். முருங்க இல, காணாந்தி இல, முஸ்ட இல, முல்ல இல, கார இல, பொன்னாங் கன்னி இல, தேங்காப் பால் போட்டு செய்து தருவாங்க அதக் குடிச்சாலே போதும். அம்மம்மாட்ட இப்படி பல item இருக்கும்.

தேங்காய் எண்ணெய் எல்லாம் வீட்டுலதான் உருக்குறது. பால் வத்தி அப்படியே உருண்டக் கட்டியா இருக்குற தேங்காய சின்னச் சின்னத்துண்டா வெட்டி அத வெயில்ல காசய வச்சி புறகு அத இன்னும் பொடியாக்கி அம்மம்மா ஒரு தாச்சில போட்டு பதத்திற்கு உருக்குவாவு தேங்கா எண்ணெய் ரெடியா வந்த புறகு எண்ணச் சக்கையா ஒரு item வரும் அது தாற வாசன இருக்கே அடுத்த சந்திக்கும் போகும். அதுக்கு கடுகு எண்டுதான் சொல்லுவம். பேரப்புள்ளையள் ஒவ்வொருத்தரும் வரிசையா நிப்பம். கடுகு நிறைய இருந்தாலும் அவ கொஞ்சம் தான் தருவாவு. காரணம் கூட சாப்புட்டா வயிட்டோட்டம் வரும். அவ கொஞ்சம் தந்தாளும் வாய் கேக்காது. அவக்குத் தெரியாம எடுத்து அடிச்சா அப்பிடியே திகைக்கித்துப் போகும். புறகென்ன வயிட்டோட்டம் தான்.

பின்னாலப் போய் போய் ஏலாம கடைசியா அவவுட்டா போய் நிக்கிற. மல வாசல் அடைச்சு வயிட்டோட்டம் நிக்றதுக்கு கூடவே வெச்சிருப்பாவு மரமுந்திரிப் பழப் பாணி. நல்ல கனிஞ்ச பழமா எடுத்து அதப்புளிஞ்சு வார பாணத்த பதமாக் காச்சித்தான் அத செய்து வச்சிருப்பாவு. சில நேரம் அதப் போலவே இலுப்பம் பாணி, எண்ணெய், கித்துள் பாணி எல்லாம் அதோட சேர்த்து இருக்கும். தேனுக்கு நிகரா இருக்கும் இலுப்பம் பாணிட ருசி. தண்ணிக்க கூட கிடந்து சளி புடிச்சா சளி மாந்து எண்ணை வெச்சிருப்பாவு அத தலையில வைக்கிறது. சின்னப்புள்ளையளுக்கு சளித்தொல்ல வந்தா இந்த எண்ணய முலைக்காம்புல பூசி புள்ளையளுக்கு பால் கொடுப்பாங்க. சில நேரம் எண்ணக்கி சளி நல்லாப் போகாட்டி ஆவி புடிப்பம். தோட இல, தேசி இல, ஆடா தோடா இல, பதிமருந்து இல, தேயிலச் சாயம் எல்லாம் போட்டு சுட வைச்சி ஆவி புடிக்கத் தருவாவு. அத மூணு தடவ செய்தாப் போதும் எப்படிப் பட்ட சளியும் கரைஞ்சி காணாமப் போய்டும். அதுக்குப் புறகு வயித்தால போகக் குடிக்கத் தருவாங்க பரிசாரியார் குளிச. வயித்த முறுக்கி இருக்குற எல்லா கெட்ட சாமானையும் வெளில கொண்டு வந்திடும்.

பெரியம்மா ஊருல இருந்து வரக்குள்ள நிறைய சாப்பாட்டுச் சாமான்கள் கொண்டு வருவாவு. பனங்கட்டி, பனங்குட்டான், ஒடியல், பனாட்டு, பனங்கிழங்கு, பருத்தித்துற வட, வேப்பம் பூ வட, வடகம் எண்டு ஏகப்பட்டதுகள் இருக்கும். வந்தாவெண்டா ஒடியல் கூழ், குரக்கன் புட்டு எல்லாம் செய்து தருவாவு. தேத்தண்ணி குடிக்கிறது பனங்கட்டி கடிச்சித்தான். சில நேரம் அப்புச்சிட சேனைக்குப் போனால் அங்க வித்தியாசமா இருக்கும். ஒல்லிக்கிழங்கு, ஒல்லி அரிசி, தண்ணிச்சோத்துப் பழம், புளியம் பழம், பாலப்பழம், வீரப்பழம், சொரவணப் பழம், கறுக்காப் பழம், கிழாத்திப் பழம், கிண்ணம் பழம், பிரம்புப் பழம், நாவல் பழம், காரப்பழம், உன்னிப் பழம், பனம் பழம், மோதிரக்கன்னி பழம், மருங்கப் பழம், ஈச்சம் பழம், பளாக்காப் பழம், லாக்கடப் பழம், சூரப் பழம், கொவ்வம் பழம், நாயுருவிப் பழம், மயிர்க்கொட்டிப் பழம், துவரம் பழம், கடுபுளியம் பழம், கூளாப் பழம், விளாம் பழம், குருவிச்சம் பழம், கொசுவலங் கிழங்கு, தாமரக் கிழங்கு, கவலக் கிழங்கு, பண்டிக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, பறங்கிக் கிழங்கு போன்ற இன்னும் பேர் தெரியாத நிறைய கிடக்கும். ஒவ்வொண்டும் ஒவ்வொரு விதம், சுவை, சத்து கொண்டு இரிக்கிம். குளத்து மீனப்புடிச்சி அத மாங்காக் கடையல் செய்து உப்பவியல் ஒண்டு வெச்சி மதியச் சாப்பாடு தருவாரு சும்மா அப்படி இருக்கும். அதுல எந்த விதமான கெமிக்களும் இருக்காது.

இப்படி எல்லாம் வாழ்ந்த வாழ்வை இன்று தொலைத்துக் கொண்ட, நாகரிகம் என்று சொல்லி மறந்து கொண்ட, மறைத்துக் கொண்ட கடைத் தலைமுறையினர் நாமல்லவா. வாழ்வியல் முறைகள், கலாசார முன்னெடுப்புக்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், மரபுப் பேணல்கள், கலை முன்னெடுப்புக்கள் என்று இன்னும் எத்தனையை இதற்குள் சொல்லி விட்டுச் செல்ல முடியும். எமக்கே உரிய வாழ்க்கையையும், எமக்கே உரிய வாழிடங்களையும், எமக்கே உரிய கலைப் பாரம்பரியங்களையும் என எமது அத்துணை அடையாளங்களையும் காலனீயச் சிக்கலுள் அமிழ்த்திக் கொண்டு நாம் இன்னும் எத்துணை தூரம் தான் துர்வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம்? முன்னைய காலங்களில் நன்றாக வாழ்ந்தோம், அப்போதெல்லாம் எந்த தீய விளைவுகளும் உண்டாகவில்லை. இப்போதுதான் எல்லாத் தீய விளைவுகளும் உண்டாகின்றது என்பதல்ல. ஏனெனில் எந்த காலகட்டத்திலும் வாழ்வது மனிதர் தானே. இன்றைய கால கட்டத்தில் பல நல்ல முன்னெடுப்புக்கள் தாராளமாகக் காணப்பட்டாலும் அதை எவ்வாறு நாங்கள் நுகர்ந்து கொள்ளப் போகின்றோம் என்பதுதான் வினா? பழமைக்கு திரும்புதல் அல்ல மாற்றம் பழமையை ஏற்று கால வர்த்தமானங்களுக்கு அமைய தக்கன வாழ்தலே இயற்கைக்கு இயைந்த மாற்றமும் வாழ்தலும் ஆகும்.

க. பத்திநாதன்

நன்றி- ஆரையம்பதி

இதையும் படிங்க

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக பரீசிலனை செய்ய வேண்டும்!

அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? | நிலாந்தன்

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம்...

தொடர்புச் செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் ஆசிரியைகள்

ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு என ஆசிரியை லிஸ்சி கூறினார்.

திருப்பதியில் ரூ.2.30 கோடி உண்டியல் வசூல்

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

மேலும் பதிவுகள்

வடகொரியாவின் மற்றுமோர் ஏவுகணை சோதனை

வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஜோடி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தென்கொரியா புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பிரபல வர்த்தகர் குலாம்ஹுஸைனின் கொலை தொடர்பில் 4 வருடங்களின் பின் மகன் கைது!

இயற்கை மரணமென சித்தரிக்கப்பட்ட கொலை; விளக்கமறியல் விதிப்பு பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரும் வர்த்தகருமான ஷபீர்...

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

அல்ஜீரியாவின் நீண்டகால ஜனாதிபதியாக பணியாற்றிய பூடெஃப்லிகா காலமானார்

அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்தெலாசிஸ் பூடெஃப்லிகா தனது 84 ஆவது வயதில் காலமானார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அல்ஜீரிய அரசியலில்...

குஜராத் புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர பட்டேல் பதவி ஏற்பு

பூபேந்திர பட்டேலை முதல்-மந்திரியாக தேர்வு செய்ததில் முன்னாள் முதல்-மந்திரியும், உத்தரபிரதேச கவர்னருமான ஆனந்தி பென் பட்டேல் பங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நுரையீரல் பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும்?

கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் எம்மில் பலருக்கு நுரையீரலின் முழுமையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு