Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பண்டார வன்னியனும் பண்டாவின் கூட்டமும்: த. செல்வா

பண்டார வன்னியனும் பண்டாவின் கூட்டமும்: த. செல்வா

3 minutes read

வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 218 ஆவது ஆண்டு நாள் இன்று.

பண்டார வன்னியன் வெள்ளையருடனான யுத்தத்தில் நேரடியாக இறந்ததாக வரலாறு இல்லை ஆனால் பாண்டார வன்னியனின் ரகசியங்களைச் சொல்லிக்கொடுத்து வெள்ளையரிடம் சிக்க வைத்து போரில் தோல்வி அடையச் செய்தார்கள் சில துரோகிகள் என வரலாறு சொல்லுகின்றது

பண்டார வன்னியனின் மனதுக்கு இனியவளோ அவள் மடியில் பண்டார வன்னியனை வைத்து அழுது சாபம் போட்டாளாம் எந்த மக்களுக்காகப் போரிட்டீர்களோ அந்த மக்களில் சில துரோகிகள் உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கினரே இந்த வன்னியே நாசமாகப் போக வென அன்றிலிருந்து வன்னிக்காடுகள் 1/4சகாப்தங்களுக்கொரு முறை யுத்தம் அல்லது கொடிய நோய்க்கு ஆளாகி மக்கள் இறப்பதைக் காண்கிறோம் இதில் கொஞ்சம் கர்ணபரம்பரைக் கதைக் கலப்பு பிணைந்துள்ளது என யாராவது சொன்னாலும் கூட அழிவு படிப்படியாய் நிகழ்வதும் துரோகம் படிப்படியாய் நிகழ்வதும் நடைபெறுகிறதுதானே

பண்டார வன்னியின் காலத்திலிருந்தே தமிழர்களில் சில துரோகக்கூட்டங்களும் சங்கிலிப்பிணைப்பாக நீள்வதை அவதானிக்க முடிகிறது

அண்மையில் இறந்த தமிழரல்லாத அந்த அரசியல் வாதிக்கு தமிழர் சிலர் தமது புலம்பல்ப் புராணத்தை எழுதியதை நினைக்க கவலையாக உள்ளது

இதுபற்றி வெளிநாட்டுநண்ப ரொரருவர் என்னிடம் வினாவினார் உடனே நான் பிழை என்றேன் கோபமடைந்த அவர் பின்னர் நான் சொன்ன விளக்கங்களை ஏற்றுக்கொண்டார்

இந்தத் துரோகக் கும்பல்களிடம் பல உளவியல் நோய் மையங்கொண்டுள்ளது அது யாது
1-அரசியல் வாதிகள் சொல்லும் ராஜதந்திரப் புராணத்தை கண்மூடி ஆதரித்தல்
2-இணங்கிப் போதல்
3-சிங்களவர்கள் குருடர்கள் எனவே தமிழ் மக்களின் பிரச்சினையை சிங்களத்தில் காட்சிப்படுத்த வேண்டும்
4-அவர்களும் சகோதரர்
5-ஏதாவது ஒரு நாள் பிச்சை போடுவார்கள்
6-ஆர்வக் கோளாறு
7-அவசரக் குடுக்கை
8-அறியாமை

சோசல் மீடியாக்களிலோ வேறு வழிகளிலோ ஈழத் தமிழர்களை உலகம் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது

நாமோ தீபாவளி தைப்பொங்கல் போல்
மாவீரர் நாளில் முள்ளிவாய்க்கால் நினைவில் இனப்படுகொலை நிகழ்ந்ததென எழுதி வாசித்து அழுவோம்

பின்னொரு பொழுதில்
ஒரு சிங்களப் பாடகி சிறப்பாக பாடினால் அவளை சகோதரியென வாழ்த்தி சர்வதேசம்வரை சாமரம்வீசுவோம்

ஒரு சிங்கள அரசியல் வாதிக்காய் கண்ணையே கழட்டிப் போட்டு அழுவோம்

இப்போது ஒரு முரண் உருவெடுக்கிறது

எவனாவது தன் உறவினனைக் கொன்றவனுக்காய் அழுவானா வாழ்த்துவானா

எனவே மீடியாக்களின் மூலம் சிங்களவனுக்காய் நாம் உருவாக்கும் வாழ்த்தும் அழுகையும் சர்வதேச அளவில் அவனுக்கு ஒரு நல்ல பெயரை உருவாக்கி விடுகிறது

எனவே தமிழர்கள் தமது வாதத்தில் உறுதி அற்றவர்கள் என்பதனை இந்தத் துரோகிகள் உருவாக்கி விடுகின்றனர்

அப்போது அந்த வெளிநாட்டவர் கேட்டார் செத்தவரை நினைத்து சிரிக்கலாமோ வென

சிரிக்கச் சொல்லி நாம் சொல்லவில்லை
சமூக வலைத்தளங்களில் அழுகை என்ற பெயரில் உருவாக்கும் கருத்தியல் தமிழர் போராட்டத்தில் பலவீன மனநிலையை உருவாக்கும் என்பதே

அப்போது அவர் கேட்டார்
இது அறமா என

அதற்கு நான் சொன்னேன்

மகாபாரதத்தில் நிராயுத பாணியாய் நிற்கும் கர்ணன் அருச்சுனனிடம் கிருஸ்ணனிடம் கேட்டான் நான் ஆயுதமில்லாத போது என்னைத் தாக்குவது அறமா என

கிருஸ்ணன் அருச்சுணனூடாக அறத்தை பற்றி என்ன சொன்னான் தெரியுமா

அபிமஞ்சு எனும் பாலகன் ஆயுதமின்றி இருக்கையில் நீ ஏன் அவனைக் கொன்றாய் அப்போது எங்கே போனது அறம்

பாஞ்சாலி துயிலுரியப் படுகையில் நீ அவளை வேசி என்று வேடிக்கையாகி நின்றாய் அப்போது எங்கே போனது அறம்

இப்போதுதான்
அந்த யோக் நினைவுக்கு வருகிறது
உங்களுக்கு வந்தால் ரத்தம்
எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்ணியா

அந்தப் பாலகன் நிராயுத பாணியாய் விஸ்கட் உண்ணும் போது சுட்டீர்களே எங்கே போனது அறம்

இசைப்பிரியா போன்ற நமது சகோதரிகள் சீலைத் துண்டு கூட இல்லாமல் அறுத்தெறியப்படுகையில் எங்கே போனது அறம்

அந்த நண்பர் கண்ணீர் மல்க தொடர்பை துண்டித்தார்

வேடிக்கை என்ன வெனில் இப்போது ஈழத்தில் வாழும் பெண்கள்கூட இறந்த அந்த அரசியல்வாதிக்குக் கண்ணீர் விடுவதுதான்

எனவே பண்டார வன்னியன் காலத்திலிருந்தே வளர்ந்து வரும் இந்த விச வேர்கள் அறுத்தெறியப் படும் போதே விடுதலைப் பூக்கள் மலரும் இனியாவது சமூக வலைத் தளங்களை தமிழர் நலன் சார் கருத்துக்களை வெளிப்படுத்தப் பயன்படுத்துவோம்.

த. செல்வா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More