Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல்!

அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம்...

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பெண் ஆசிரியை பதவி நீக்கம்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

ஆசிரியர்

1996 உலககோப்பை அரையிறுதிப் போட்டி | யூட் பிரகாஷ்

முன்னோட்டம்

சில சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களை வாழ்வில் மறக்கவே முடியாது. சாகும் வரை அந்த ஆட்டத்தில் நடந்த ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு விக்கெட்டும், ஒவ்வொரு பவுண்டரியும், ஒவ்வொரு சிக்ஸும், ஒவ்வொரு சம்பவமும் அப்படியே நினைவில் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.1996 உலகக்கிண்ணப் போட்டியில் இடம்பெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியும் அவ்வாறான ஒரு ஆட்டம் தான். இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டின் போக்கையும் வரலாற்றையும் மாற்றி அமைத்த போட்டி, இந்தியாவிற்கு எதிரான இந்த உலக கிண்ண அரை இறுதிப்போட்டி தான், ஒஸ்ரேலியாவிற்கெதிரான இறுதி போட்டி அல்ல. அந்த அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி தோற்று இருந்தால், பிற்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அடைந்த மகோன்னத நிலையை எட்டியிருக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அன்று இலங்கை கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி இந்தியாவின் 11 கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, கொதிக்கும் வெயிலில் கல்கத்தாவின் Eden Gardens அரங்கில் நிரம்பி வழிந்து கொண்டிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்த்துதான். மார்ச் 13, 1996, புதன்கிழமைAikten Spenceல் வேலைக்குச் சேர்ந்து அப்பொழுதுதான் ஒரு வருடம் முடிவடைந்து இருந்தது. வலு டீசண்டாக Bossடம் போய், friends உடன் World Cup semi finals match பார்க்க போறேன் என்று பேத்தனமாக உண்மையை சொல்லி , half day லீவுக்கு அப்ளிகேஷன் போட்டு, approval வாங்கி, பஸ் எடுக்க Union placeல் Salakaவிற்கு முன்னால் இருக்கும் bus haltற்கு வந்தால், TV பெட்டிகள் இருந்த கடைக் கண்ணாடிகளிற்கு முன்னால் எல்லாம் சனம் கூடத் தொடங்கியிருந்தது.பிற்காலத்தில் கிரிக்கெட் match பார்ப்பதற்கு எல்லாம் லீவு அப்ளிகேஷன் போட தேவையில்லை, sickie அடித்து விட்டு பார்ப்பதுதான் நீதியான செயல் என்று புரிய ஆரம்பித்தது வேறு கதை. வெள்ளவத்தை Fussels லேனில் இருந்த கிரிஷாந்தன் வீட்டில் தான் மட்ச் பார்க்க set ஆனோம். அன்று அந்த match பார்க்க வந்த நண்பர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் என்னைப்போல இந்திய கிரிக்கெட் ஆதரவாளர்கள். அதில் பலர் பிற்காலத்தில் ஏதேதோ சாட்டுச் சொல்லி, கட்சி மாறி இலங்கை அணியை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.ஒரு பெரிய flask நிறைய கிரிஷாந்தனின் அம்மா ஊத்தி வைத்திருந்த தேத்தண்ணி, match தொடங்க முதலே குடித்து முடிந்து விட்டது. Tossல் ஜெயித்த இந்திய இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார். கல்கத்தாவில் Day Night ஆட்டங்களில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவது சிரமமானது என்று அறிந்தும் அசாருதீன் ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பது புரியவில்லை.1993ம் ஆண்டு அதே மைதானத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற Hero Cup இறுதி ஆட்டத்தில், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி, பலமான நிலையில் இருந்த மேற்கிந்திய அணியை சச்சின் டெண்டுல்கரின் சுழற்பந்து வீச்சு கவிழ்த்துக் கொட்டியதை அசாருதீன் ஏனோ மறந்து விட்டிருந்தார்.நீண்ட, பலமான இலங்கையின் துடுப்பாட்ட வரிசை இலக்கைத் துரத்தி அடிப்பதில் வல்லவர்களாக இருந்ததால், அவர்களை குழப்பியடிக்க அசாருதீன் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஏனெனில், தான் tossல் ஜெயித்திருந்தால் தானும் இந்திய அணியை துடுப்பெடுத்தாட அழைத்திருப்பேன் என்று ரணதுங்கவும் பிற்காலத்தில் தெரிவித்திருந்தார். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பெங்களூரில் மிகப் பலமான பாகிஸ்தான் அணியை காலிறுதி ஆட்டத்தில் வென்று விட்டு வந்ததால் வந்த over confidence ஆல் வந்த வினையால் கூட அசாருதீன் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.1996 உலக கோப்பை இறுதியாட்டத்தில் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் அணிகள் கால் இறுதி போட்டியில் மோதிக்கொண்டன. அந்த ஆட்டத்தில் இறுதி நேரத்தில் உடல் உபாதையால் வொஸிம் அக்ரம் விலகிக் கொண்டது, பாக்கிஸ்தான் அணியின் பலத்தை வெகுவாக பாதித்தது. High voltage encounter ஆக வர்ணிக்கப்பட்டு இடம்பெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான கால் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது, ஏதோ உலக கோப்பையை தாங்கள் வென்று விட்டதாக அவர்களை கருத வைத்து விட்டதோ என்னவோ. இலங்கையுடனான அரையிறுதி ஆட்டம் ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுற்கு முன்னர், இந்திய பிரதமர் நரசிம்ம ராவின் அலுவலகத்தில் இருந்து அஸாருதீனுக்கு ஓரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இறுதியாட்டத்திற்கு இந்தியா லாகூரிற்கு போவது பாதுகாப்பானது அல்ல என்று சாரப்பட அந்த அழைப்பில் வந்த செய்தி இருந்ததாகவும், ஒரு வதந்தி பின்னாட்களில் உலாவியது. மறுபுறத்தில், 1996 ஜனவரி 31ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாதுகாப்பு நிலையை காரணம் காட்டி, ஒஸ்ரேலிய மற்றும் மேற்கிந்திய அணிகள் இலங்கையில் இடம்பெற வேண்டிய, இலங்கை அணியுடனான முதல் சுற்றுப் போட்டிகளில் ஆட மறுத்திருந்தன.இலங்கை அணி இடம் பிடித்திருந்த Group Aயில், இந்தியா, ஒஸ்ரேலியா, மேற்கிந்திய தீவுகள், கென்யா மற்றும் ஸிம்பாவே அணிகள் இடம் பெற்றிருந்தன. முதல் சுற்றில் விளையாட வேண்டிய 5 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் walk over முறையில் இலங்கை அணிக்கு வெற்றிகள் மடியில் தானாக வந்து விழ, கென்யா மற்றும் ஸிம்பாவே அணிகளுடனான போட்டிகளில் இலங்கை அணி எப்படியும் வெல்லும் என்று தெரிய, உலக கோப்பையில் முதலாவது பந்து வீச முதலே இலங்கை அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி கண்டு விட்டது.டெல்லி Feroze Shah Kotla மைதானத்தில் இந்திய அணியை இலங்கை அணி வெற்றி கொண்ட முதல் சுற்றுப் போட்டியை யார் மறந்தாலும், மனோஜ் பிரபாகர் மறக்கவே மாட்டார். Test போட்டிகளிலும் ODIகளிலும் இந்தியாவின் opening batsman – opening bowler எனும் தனிச்சிறப்பு பெற்றவர் Manoj Prabakhar.அன்றைய ஆட்டத்தில் சனத் ஜெயசூரியா மொங்கிய மொங்கில், மனோஜ் பிரபாகர் வீசிய 4 ஓவர்களில் 47 ஓட்டங்கள் கொடுத்தார், அதுவும் கடைசி இரண்டு ஓவர்களையும் அஸார், பிரபாகரை offspin போட வைத்தத்தும், டெல்லிக்காரனான பிரபாகரிற்கு டெல்லிச் சனமே கூ அடித்ததும், அந்த ஆட்டத்தோடு பிரபாகர் கிரிக்கெட் ஆடாமலே போனதும் வரலாறு. பைசலாபாத்தில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் சிக்கி, அத்தர்டனின் இங்கிலாந்து அணி சின்னாபின்னமாகியது. தட்டுத்தடுமாறி இங்கிலாந்து அடித்த 238 ஓட்டங்களை rampaging இலங்கை அணி 40 ஓவர்களில் வெறித்தனமாக அடித்து முடித்து விட்டு, flight பிடித்து, கொழும்பு வந்து சேர்ந்தது.சனத் ஜெயசூர்ய (82 runs in 44 balls) ஆடிய ருத்ர தாண்டவத்தில் இந்த முறை இங்கிலாந்து அணியின் சுழல் பந்து வீச்சளாரான Richard Illingworth (10-1-72-1) பலியானார். இந்த ஆட்டத்தோடு இங்கிலாந்து அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட Richard Illingworth தான் பின்னர் ICC Umpire ஆக அவதாரம் எடுத்தார். கல்கத்தா Eden Garden மைதானத்தின் High Court முனையில் இருந்து, பந்து வீச ஜவகல் ஶ்ரீநாத் தயராக, மறுமுனையில், தனது padஐ இழுத்து, glovesஐ இழுத்து, டொங்கு…டொங்கு என்று batஐ pitchல் அடித்து, ஶ்ரீநாத்தின் பந்தை எதிர்கொள்ள சனத் ஜெயசூர்யா தயாரானார்.

இலங்கை இன்னிங்ஸ்

Eden Garden மைதானத்தின் High Court முனையில் இருந்து உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி ஆட்டத்தின் முதலாவது பந்தை ஜெயசூரியாவை நோக்கி வீச ஸ்ரீநாத் ஓடிவர, ரசிகர்களின் ஆரவாரத்தில் அந்த கல்கத்தா அரங்கமே அதிர்ந்துகொண்டிருந்தது.சுமார் 2,000 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த இலங்கைத் தீவிலோ, தங்கள் தங்கள் கடவுள்களை வேண்டிக் கொண்டும், தங்களுக்கு ராசியான உடைகளை அணிந்து கொண்டும், தங்களுக்கு அதிஷ்டமான கதிரையிலோ இல்லை மூலையிலோ அமர்ந்து கொண்டும், மூச்சைப் பிடித்துக்கொண்டு, சனத் ஜெயசூர்ய எதிர்கொள்ளப் போகும் அந்த முதலாவது பந்தை எதிர்கொள்ள இலங்கை ரசிகர்களும் தயாரானார்கள். Middle and legல் விழுந்த முதலாவது பந்தை, சனத் mid onற்கு தட்டி விட்டு, வேகமாக ஓடி, இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்து வைத்தார். மறுமுனையில் இருந்து குடுகுடுவென்று ஓடி, ஓட்டத்தை நிறைவு செய்த ரொமேஷ் களுவிதாரண, ஶ்ரீநாத்தின் இரண்டாவது பந்தை எதிர்கொள்ள தயாரானார்.உலகக்கிண்ண தொடருக்கு முந்தைய ஒஸ்ரேலிய தொடரில் ஆரம்பமான இந்த சனத் ஜெயசூரிய – ரொமேஷ் களுவிதாரண opening combination ஒருநாள் கிரிக்கட் விளையாடும் முறையையே மாற்றியமைத்து கொண்டிருந்தது. உலகக்கிண்ணத் தொடரின் அதுவரையான ஆட்டங்களில் சனத் ஜெயசூரிய நெருப்பு formல் இருந்தார். ஒஸ்ரேலியாவில் அடித்த அளவிற்கு அடிக்கா விட்டாலும், Tony Griegன் little களுவின் பங்களிப்பும் இலங்கை அணிக்கு பலம் சேர்த்துக் கொண்டிருந்தது.இந்த இருவரையும் கழற்றி விட்டால் இலங்கை அணியை சுருட்டி விடலாம் என்று இந்திய அணி கணக்கு போட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில், கென்யாவிற்கு எதிராக அடித்த சதம், ஸிம்பாவேக்கு எதிராக அடித்த 91, என்பவற்றைத் தவிர அரவிந்த டி சில்வா பலமான இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பெரிதாக சோபித்து இருக்கவில்லை. ஸ்ரீநாத்தின் இரண்டாவது பந்து, off stumpற்கு வெளியே, short and wide ஆக விழ, பந்தை களூ தன்னுடைய batஆல் 3rd man நோக்கி தூக்கி அடிக்க, அந்த அடிக்காகவே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சஞ்சேய் மஞ்ச்ரேக்கர் பிடி எடுக்க, ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே இலங்கை அணி தனது முதலாவது விக்கெட்டை இழந்தது, கல்கத்தா மைதானம் ஆரவாரத்தில் பொங்கிப் பிரவாகித்தது.இலங்கை 1/1 (0.2)…களுவிதாரன ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேற, இலங்கையின் நம்பிக்கைக்குரிய No 3 batsman ஆன அசங்க குருசிங்க மைதானத்துக்குள் காலடி எடுத்து வைத்தார்.19 வயதில், இளம் விக்கட் காப்பாளராக இலங்கை அணிக்குள் காலடி எடுத்து வைத்த குருசிங்க, பின்னார் இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரராக மாறினார். தனது 19வது வயதிலேயே, 1986ம் ஆண்டில் கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் இம்ரான் கான், வொஸிம் அக்ரம், முதாஸர் நஸார் மற்றும் அப்துல் காதர் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு குருசிங்க அடித்த சதம் கிரிக்கெட் உலகின் கவனத்தை கவர்ந்திருந்தது. உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு பின்னர் தனது 30வது வயதில், 1996ல், குருசிங்க மெல்பேர்ணிற்கு குடிபெயர்ந்தார்.1980களின் நடுப்பகுதியல் இலங்கை அணியின் உப தலைவராகவும், டெஸ்ட் போட்டிகளில் அணியின் ஆரம்ப பந்துவீச்சாளர் ஆகவும், ஆரம்பத்துடுப்பாட்ட காரராகவும் இருந்த சகலதுறை ஆட்டக்காரரான ரவி ரட்னாயக்கவும் அணியில் ஆடிக் கொண்டிருக்கும் போதே மெல்பேர்ணிற்கு குடிபெயர்ந்திருந்தார். ஸ்ரீநாத்தின் முதலாவது ஓவரின் மூன்றாவது பந்தை சனத் எதிர்கொள்ள, ஓட்டம் எதுவும் பெறப்படவில்லை. நான்காவது பந்து சனத்தின் leg stump அடியில் short ஆக விழ, சனத் mid onஐ பார்த்து மொங்கிய மொங்கில், பந்து batல்edge ஆகி 3rd manல் நின்ற வெங்கடேஷ் பிரசாத்தின் கைகளில் பத்திரமாக இறங்கியது.இலங்கை 1/2 (0.4)…சனத்தும் இலங்கைச் சனமும் தலையை தொங்கப் போட, “Bengalis have gone berserk” என்று Tony Greig தொலைக்காட்சியில் வர்ணனை சொல்லிக்கொண்டிருக்க, மைதானத்துக்குள் அரவிந்த காலடி எடுத்து வைத்தார். இலங்கையின் கிரிக்கெட் தலைவிதியையே மாற்றப்போகும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்னிங்ஸ்ஸை ஆட அரவிந்த டி சில்வா விடுவிடுவென நடக்கத் தொடங்கினார்.அரவிந்த நடக்கும் விதம் ஊர் சண்டியன்களை ஞாபகப்படுத்தும். சாரத்தை சண்டிக் கட்டு கட்டிக்கொண்டு ஒரு சண்டியன் நடந்து போவது போல் தான் அரவிந்த batஐ தூக்கிக் கொண்டு பிட்சை நோக்கி நடப்பார். முக்கியமான போட்டிகளில் அரவிந்த திறமையாக ஆடுவதால் அரவிந்த அந்தப் போட்டிகளில் வழங்கப்படும் man of the matchற்கான பரிசிலிற்காத் தான் ஆடுகிறார் என்று கதையும் அப்போது இருந்தது.Betting என்றால் என்ன என்று அறியாத அந்தக் காலத்தில் அவர் ஆடிய ஆட்டங்கள் அவர் ஒரு Big match player என்ற உன்னதமான அடையாளத்தை, காலம் பிந்தியே அவருக்கு அளித்தது.இலங்கையின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சனத்தையும் களுவையும் கவிழ்க்க, ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே போடுவதாக இந்தியா திட்டம் தீட்டி இருந்தது. 1992 உலகக்கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணி தான் முதன் முறையாக சுழற்பந்து வீச்சாளரான தீபக் பட்டேலை ஆரம்ப பந்துவீச்சாளராக களமிறக்கி, அரையிறுதி போட்டி வரை முன்னேறி பாக்கிஸ்தானிடம் தோற்றிருந்தது. முதலாவது ஓவரிலேயே சனத்தும் களுவும் பவிலியன் திரும்பி இருக்க, இரண்டாவது ஓவரை கும்பிளேக்கு அசாருதீன் கொடுத்ததும், சுழற்பந்து வீச்சை லாவகமாக கையாளக்கூடிய அரவிந்த கும்பேளேயை அடித்து ஆடியதும், இந்த ஆட்டத்தின் போக்கை மாற்றிய முக்கிய தருணங்களில் அதிமுக்கியமானது. பாகிஸ்தானுடனான கால் இறுதிப் போட்டியில் ஆடிய இந்திய அணியிலிருந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரான வெங்கடபதி ராஜூ நீக்கப்பட்டு, bits and pieces cricketer ஆன ஆஷிஷ் கபூர் அணியில் சேர்க்கப்பட்டார்.கும்பிளேயை தவிர, இந்திய அணியில் சுழல் பந்துவீச்சாளர்களை என்றால் கபூரும் டென்டுல்கரும் தான். இரண்டு பேருமே regular spinners இல்லை, அதாவது அரை குறைகள். ஆரம்ப ஓவர்களை கும்பிளே வீசியதால் இலங்கை இன்னிங்ஸின் நடுப்பகுதியில் இந்திய அணிக்கு பந்து வீச தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் போனதும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி சந்தித்த ஒரு மிகப் பெரிய பலவீனம். அரவிந்த அடித்து ஆட தொடங்கியதும் ஆரவாரித்து கொண்டிருந்த கல்கத்தா சனங்களின் கொஞ்சம் கூச்சல் கொஞ்சம் அடங்கிப்போனது. மறுபுறத்தில் குருசிங்க நொட்டிக் கொண்டிருந்தார். 16 பந்துகளை விழுங்கி ஒரே ஒரு ஓட்டத்தை எடுத்திருந்த குருசிங்க இலங்கை அணி 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஶ்ரீநாத்தின் பந்தில் ஆட்டம் இழந்தார்.இலங்கை 35/3 (7.0)…
டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கும் ரொஷான் மஹானாம, இலங்கையின் No 5 ஆக களமிறங்கினார். மஹானாம தான் அன்றைய இலங்கை அணியில் அதி stylish ஆன batsman. மஹானாம மெதுவாகத்தான் ஓட்டங்களைப் பெறுவார். ஆனால் ஆள் ஆட்டங்களில் அடிக்கடி களைப்புற்று உபாதைக்கு உள்ளாவதால் “லெடா (நோயாளி)” என்ற பட்டப்பெயர் அவரோடு ஒட்டி இருந்தது.1993-94 கால வாக்கில், இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக அர்ஜுன ரணதுங்கவும் அரவிந்த டி சில்வாவும் இலங்கை அணியில் ஆட மறுக்க, ஷார்ஜாவில் இடம்பெற்ற சுற்றுப் போட்டி ஒன்றுக்கு இலங்கை அணிக்கு தலைமையேற்று சென்றது ரொஷான் மஹானாம தான்.ஷார்ஜாவில் மஹானாம இலங்கை அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்க நுகேகொடையில் இருந்த அவரது வீட்டிற்கு கல்லெறி விழுந்ததும் வரலாறு. இங்கால பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்க, இங்கால பக்கம் ஆடும் துடுப்பாட்ட வீரர்கள் நொட்டித் தட்டி தடுமாறிக் கொண்டிருக்க, அங்கால பக்கத்தில் அரவிந்த டி சில்வா வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.15-வது ஓவரில் கும்பிளேயின் பந்துவீச்சில் அரவிந்த டி சில்வாவின் middle stump சரிந்து விழும் போது, இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 85, அதில் அரவிந்த அடித்து கொடுத்தது 66(47). இலங்கை 85/4 (14.2)…அடுத்து ஆடவந்த அர்ஜுன ரணதுங்கவின் துணிச்சலான தலைமைத்துவம் அவரைச் சுற்றியிருந்த திறமையாளர்களை ஊக்கிவித்து, இலங்கையின் வெற்றிகளிற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது. 1982ல் இலங்கை அணி ஆடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் 18 வயது பொடியனான அர்ஜுன ரணதுங்க ஆடியிருந்தார்.ரணதுங்கவும் மஹநாமவும் ஓடி ஓடி ஓட்ட எண்ணிக்கையை ஓவரிற்கு சரசாரி 4 என்ற அடிப்படையில் அதிகரித்துக் கொண்டிருந்தார்கள். கொளுத்தும் கல்கத்தா வெய்யிலில், ஓட்டம் எடுக்க களைக்க களைக்க ஓடிக்கொண்டிருந்த “லெடா” மஹானாமவிற்கு, “லெட (நோய்)” வந்துவிட்டது. காலில் ஏற்பட்ட cramps மஹானாம ஓடுவதை முடக்க, அவருக்கு runner ஆக ஓட ஆட வந்தது சாட்சாத் சனத் ஜெயசூர்ய தான். 32வது ஓவரில் டென்டுல்கர் வீசிய பந்தில் அர்ஜுன ரணதுங்க LBW முறையில் 35 (42) ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார். இலங்கை 168/5 (32.5)….இலங்கையின் நீண்ட துடுப்பாட்ட வரிசையில் ஏழாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கியது ஹஷான் திலகரட்ன. ஹஷானின் அந்தக் கால காதலி நாங்கள் Oxoniaவில் CIMA படிக்கும் காலங்களில் கூடப் படித்தவர். கிருஷ்ணகுமாரின் வகுப்பு முடிய தனது காதலியை கூட்டிப்போக ஹஷான் Oxonia வாசலில் வந்து நிற்பார். 1996 உலகக்கோப்பை போட்டிகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஷார்ஜாவி்ல் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஹஷான் ஒரு அபாரமான சதம் அடித்திருந்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 333/7 அடித்தது. லாரா 169 (129) ஓட்டங்கள் விளாசி இருந்தார்.இரண்டாவதாக துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை அணி தடுமாறத் தொடங்கியது. ஏழாவது துடுப்பாட்ட வீரராக ஹஷான் களமிறங்கும் போது இலங்கை அணி 103/5 என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இருந்த மஹனாமாவோடும், தனக்குப் பின்னர் துடுப்பெடுத்தாட வந்த ஹதுரசிங்க, தர்மசேன, முரளி, பிரமோதய ஆகியோருடன் அபாரமாக இணைப்பாட்டம் ஆடிய ஹஷான் 100(106), இலங்கையை (329) வெற்றியின் விளிம்புக்கு கொண்டு வந்திருந்தார். அதுவும் இறுதி ஓவரில், ஹஷான் அடித்த பந்து சிக்ஸரிற்கு போக வேண்டியது, ஆனால் துரதிருஷ்ட வசமாக Stuart Williams எடுத்த அபாரமான பிடியெடுப்பு, கைக்கு எட்டிய இலங்கையின் வெற்றியை தட்டிப் பறித்திருந்தது. 1996 உலக கிண்ண அரையிறுதிப் போட்டியில் மீண்டும் மஹனாமாவோடு இணைந்து ஹஷான் நிதானமாக ஆடத் தொடங்கினார். ஆனால் மஹானாமாவால் தொடர்ந்து ஆட முடியவில்லை. இலங்கை 182 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, மஹானாமாவால் தொடர்ந்தும் ஆட முடியாமல் போக, மஹானாமா மைதானத்தில் இருந்து stretcherல் தூக்கி செல்லப்பட்டார்.. Mahanama… retired hurt 58(101)…இலங்கை இன்னிங்ஸில் இலங்கையின் tail, ஹஷானோடு இணைந்து wag பண்ண தொடங்கியது. குமார் தர்மசேன 9(20) பொறுமையாக ஆடி ஹஷானிற்கு உறுதுணையாக இருந்து ஆட்டமிழக்க, சமிந்த வாஸோ 3 பவுண்டரிகள் அடங்கலாக 16 பந்துகளில் 23 ஓட்டங்களை குவித்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை மளமளவென உயர்த்தினார்.ஹஷானும் 32(43) வாஸும் ஆட்டமிழந்த பின்னர், முரளியும் பிரமோதயவும் பந்துகளை அங்கேயும் இங்கேயும் தட்டிக் கிட்டி ஓடி இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 250 தாண்ட வைத்தார்கள்.இலங்கை அணி தனது நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை முதலாவது ஓவரிலேயே இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில் இருந்து மீண்டு, இந்திய அணிக்கு மிகவும் சவாலான 252 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்து விட்டு, Eden Gardens மைதானத்தின் dining roomல் டின் மீன் போட்ட sandwich சாப்பிடப் போனது.

இந்தியா இன்னிங்ஸ்

இன்னிங்ஸ் இடைவேளை முடிந்து, துடுப்பெடுத்தாட கொல்கத்தா Eden Garden மைதானத்தில் நவ்ஜோத் சித்துவோடு காலடியெடுத்து வைக்கும் பொழுது கொல்கத்தா மைதானத்தின் பிட்ச் மாறிவிட்டது என்பது டெண்டுல்கருக்கு தெரிந்தே இருந்தது. “It was only when I came to bowl that I realised we had misread the wicket. The ball started to hold up and was stopping on the batsmen” என்று சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில் பின்னாட்களில் எழுதுவார்.இலங்கையுடனான இந்த அரையிறுதிப் போட்டிக்கு சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னரேயே சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கத் தொடங்கியிருந்தார்.1994 ஆம் ஆண்டு நியூசிலாந்துடனான போட்டியொன்றில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்க இருந்த சித்து, உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலக, அசாருதீன் டெண்டுல்கரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறக்கினார். Aucklandல் நடைபெற்ற அந்தப் போட்டியில் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசியதோடு அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டெண்டுல்கரின் golden run கோலாகலமாகத் தொடங்கிருந்தது.1996 உலகக்கோப்பையில் டென்டுல்கரோடு, முதலில் அஜய் ஜடேஜாவும், பின்னர் இலங்கையுடனான போட்டியில் மனோஜ் பிரபாகரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இருந்தார்கள். அரையிறுதி ஆட்டத்திற்கு முதல் இந்தியா ஆடிய கடைசி இரண்டு போட்டிகளில் சித்து, டென்டுல்கரோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இருந்தார். பலமான பாகிஸ்தான் அணியுடனான காலிறுதி போட்டியில் சித்து அடித்த 93 ஓட்டங்கள் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது. பிரமோதய விக்ரமசிங்க வீசிய முதலாவது ஓவரின் கடைசி பந்தில் டெண்டுல்கர் அடித்த பவுண்ட்ரியுடன் இந்தியாவின் இன்னிங்ஸ் அட்டகாசமாக ஆரம்பமாகியது. ஆனால் அடுத்த ஓவரிலேயே சமிந்த வாசின் பந்துவீச்சில் gullyயில் நின்ற ஜயசூரியாவிடம் பிடிகொடுத்து சித்து ஆட்டமிழந்தார்.இந்தியா 8/1 (2.1)அடுத்து வந்த இருபது ஓவர்களிற்கும் சச்சின் டெண்டுல்கர் show அரங்கேறியது. மைதானத்தின் சகல பாகங்களிற்கும் பந்தை விளாசி அடித்து இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை டெண்டுல்கர் தனியொருவராக அதிகரித்துக்கொண்டிருந்தார்.சர்வதேச கிரிக்கெட்டில் commentators curse என்ற சொல்லாடல் உண்டு, தமிழில் அதை கண்ணூறு நாவூறு என்பார்கள். அன்றும் அது தான் டென்டுல்கருக்கு நடந்தது. “While he is there, he is making batting look reasonably comfortable” என்று டெண்டுல்கரை பற்றி Boycottஓ யாரோ ஒரு வர்ணனையாளர் வர்ணித்துக் கொண்டிருக்க, மறுமுனையில் சனத் ஜயசூர்ய 22வது ஓவரை வீச ஆயத்தமானார்.ஜயசூர்ய வீசிய பந்து, டெண்டுல்கரின் padல் பட்டு, on sideல் விக்கெட் கீப்பர் பக்கம் பயணிக்க, பந்து எங்கே போனது என்று பாராமல் டென்டுல்கர் ஓட்டம் எடுக்க முற்பட்டு creaseஐ விட்டு வெளியே வர, விக்கெட் காப்பாளரான களுவிதாரண நிலத்தில் விழுந்து bump பண்ணி வந்த பந்தை பக்கென்று பிடித்து இலகுவான stumpingஐ செய்யும் போது, திரும்ப creaseற்குள் வர முற்பட்ட டென்டுல்கரின் batம் காலும் creaseற்கு வெளியே இருந்தன.இதில் ஆகப்பெரிய பகிடி என்னவென்றால், leg umpire ஆட்டமிழப்பை 3rd umpireற்கு reviewற்கு அனுப்ப, டெண்டுல்கர் ஒரு கையால் batஐ ஊன்றிக் கொண்டும் மறு கையை இடுப்பில் வைத்துக்கொண்டும் நங்கூரம் பாய்ச்சி மைதானத்தில் நின்றுகொண்டு அகலத்திரையில் 1996 உலகக் கோப்பையில் இந்திய அணியின் விதியை நிர்ணயிக்கப் போகும் சிவப்பு விளக்கு எரிய போவதை பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் அவர் எழுதிய சுயசரிதை புத்தகமான “Playing It My Way”ல் “… I didn’t bother waiting for the third umpires decision because I knew I was out” என்று பக்காவாக ஒரு அண்டப்புளுகை அவிழ்த்து விடுவார். இந்தியா 98/2 (22.4)அடுத்து ஆடவந்த அசாருதீன் அந்த உலகக் கோப்பையில் பெரிதாக கலக்கியிருக்கவில்லை. இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்போட்டியில் அடித்த 72(80) ஓட்டங்களே அஸார் அடித்திருந்த அதிகபட்ச ஓட்டங்கள். டெண்டுல்கர் ஆட்டமிழந்து சரியாக ஆறு பந்துகள் கழித்து தர்மசேன வீசிய பந்தில் அவரிடமே பிடி கொடுத்து அசாருதீன் ஆட்டம் இழக்க, இந்திய அணியின் march past ஆரம்பமாகியதுஇந்தியா 99/3 (23.4)மறுபுறத்தில் தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டிருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு, ஜயசூர்ய வீசிய பந்து, leg stumpற்கு வெளியே விழுந்து மஞ்ச்ரேக்கரின் sweep shotற்கு உச்சுக் காட்டி விட்டு, விக்கெட்டை முத்தமிட, வெள்ளவத்தை மங்களா எலக்ரிகல் கடைக் கண்ணாடியில் இருந்த தொலைக்காட்சியில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த சனம் ஆரவாரித்தது. இந்தியா 101/4 (26.2)அஜய் ஜடேஜா, நாயன் மொங்கியா என்று ஆமான இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் இருக்க, அவர்களை முந்திக்கொண்டு ஸ்ரீநாத் அடுத்து ஏன் ஆட வந்தார் என்று தெரியவில்லை. ஆறாவதாக ஆடவந்த ஸ்ரீநாத் மொக்குத்தனமாக ஓடி, run out ஆக, கொல்கத்தா சனத்துக்கு விசர் மண்டையில் ஏறத் தொடங்கியது.இந்தியா 110/5 (26.1)தான் சந்தித்த பத்து பந்துகளில் எந்த ஓட்டங்களையும் பெற முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருந்த அஜய் ஜடேஜாவின் இன்னிங்ஸ், ஜயசூரிய மஞ்ரேக்கரை ஆட்டமிழக்க செய்த அதே மாதிரியே, bowled around the stumps, முடிவிற்கு வந்தது.இந்தியா 115/6 (30.5)கொதி கொதியென கொதித்து விட்டு மறைந்த கல்கத்தா சூரியன் கிளப்பி விட்டுச் சென்ற வெக்கை ஒருபக்கம், இந்திய அணி மோசமாக ஆடி விக்கெட்டுக்களை இழந்து கொண்டிருந்த கிளப்பிய கோபம் ஒரு பக்கம், 1983ற்கு பின்னர் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை கனவு தகர்ந்து போன விரக்தி ஒருபக்கம், அளவுக்கு அதிகமான பார்வையாளர்களை மைதானத்திற்குள் அனுமதித்தால் ஏற்பட்ட சன நெருக்கடி ஒரு பக்கம், என்று நாலா பக்கங்களாலும் நெருக்கப்பட்ட கொல்கத்தா சனம், குழப்படி செய்ய ஆரம்பித்தது.இலங்கை துடுப்பெடுத்தாடும் போது ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக retired hurt ஆன மஹாநாமவிற்காக, reserve player ஆன உபுல் சந்தன field பண்ண வந்திருந்தார். உபுல் சந்தன அந்தக்கால all rounder, இவர் விளையாடிய இடத்தில் விளையாட வேண்டியவர் பரி யோவான் நண்பர் பிரஷாந்தன் தான் என்று இன்றும் நம்மில் பலர் கதைப்பதுண்டு. இங்கிலாந்துடனான காலிறுதிப் போட்டியில் மஹாநாமவை நீக்கி விட்டு உபுல் சந்தனவை போட அணித்தலைமை தீர்மானித்ததாம். இந்தத் தீர்மானம் மஹாநாமவிற்கு பெரும் மன உளைச்சலை கொடுத்திருக்கிறது. மஹாநாமவின் மன உளைச்சலை அவதானித்த உபுல் சந்தன அணித் தலைமையிடம் சென்று நான் ஆடவில்லை மஹாநாமவையே ஆட விடுமாறு கேட்டுக் கொண்டதாக பின்நாட்களில் மஹாநாம ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. இங்கிலாந்துடனான போட்டியில் மஹாநாம திறமையாக ஆடியதும், அரையிறுதிப் போட்டிக்கு அணியை மாற்றம் விரும்பாத இலங்கை அணியின் superstitionம் மஹாநாம இந்தியாவுடனான அரையிறுதிப் போட்டியில் ஆட வழிவகுத்தது.கொல்கத்தா மைதானத்தில் பார்வையாளர்களுக்கு இடையில் கலவரம் தொடங்கிய போது, அவர்கள் முதலில் மைதானத்திற்குள் எறிந்த போத்தல் 3rd manல் நின்ற அரவிந்தவிற்கு மிக அருகில் வந்து விழுந்தது. கண்ணாடி போத்தல் தன் மீது படுவதிலிருந்து அருந்தப்பு தப்பிய அரவிந்த, உடனடியாக இந்த சம்பவத்தை அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அரவிந்த அர்ஜுனைவிற்கு தனக்கு நேர்ந்த சம்பவத்தை விவரிப்பதை கேட்டுக்கொண்டிருந்த உப்பு சந்தன, அரவிந்த காயம் அடைவதை எப்படியாது தவிர்க்க தானே அரவிந்த நின்ற இடத்திற்கு களத்தடுப்பில் ஈடுபட முன்வந்தார். அடுத்து ஆடவந்த நயன் மோங்கியா (1) அரவிந்த வீசிய பந்தை sweep செய்யப்போய் ஜயசூர்யாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்க, இலங்கைத் தீவில் Singer கடைகளின் கண்ணாடி பெட்டிக்குள் இருந்த தொலைக்காட்சிகளில்ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சனம் கொண்டாட்டத்திற்கு தயாரானது. இந்தியா 120/7 (33.5)முரளிதரன் வீசிய அடுத்த ஓவரின் முதலாவது பந்திலேயே, இரண்டாவது முறையாக “அள்ளகண்ட (பிடியுங்கோ)” என்று இரண்டாவது முறையாக களுவிதாரண கத்திய சத்தம் stump micல் தெளிவாக கேட்க, வெங்கடபதி ராஜுவின் இடத்தில் ஆடவந்த ஆல்ரவுண்டர் ஆஷீஷ் கபூர் ஓட்டம் எதுவும் பெறாமலேயே ஆட்டமிழந்தார். இந்தியா 120/8 (34.1)பேந்தென்ன…இந்தியாவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட, அரங்கில் இருந்த சனங்கள் நெருப்பு கொளுத்தியும், போத்தல்களை மைதானத்துக்குள் எறிந்தும் கலவரத்தில் ஈடுபட, உலகக்கிண்ண வரலாற்றில் முதல் முறையாக பார்வையாளர்களின் கலவரம் காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்படுகிறது.இந்த ஆட்டத்திற்கான ICC Match refereeயான Clive Lloyd மைதானத்துக்குள் வந்து நிலைமையை அவதானித்து நடுவர்களுடன் கலந்தாலோசித்து விட்டு இலங்கைக்கு வெற்றியை கையளித்தார்…Sri Lanka won by default.அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று, மைதானத்தை மத்தியில் இருந்து இலங்கை அணி நடக்கத் தொடங்க, தங்களது வெற்றி பெருமிதத்தை வெளிகாட்ட குருசிங்கவும் தர்மசேனாவும் தங்கள் இரு கைகளையும் உயர்த்தினார்கள்.அசம்பாவிதங்கள் மத்தியிலும் அமைதியாக அணியை வழி நடத்திக்கொண்டிருந்த ரணதுங்கவிற்கு இவர்கள் இருவரின் செயல் எரிச்சலை ஏற்படுத்தியது. ரணதுங்க குருசிங்கவிற்கும் தர்மசேனாவிற்கும் உறுக்கி ஏதோ சொல்ல, இருவரும் உயர்த்திய கைக்குள் அடக்கி விட்டு அமைதியாக நடக்க தொடங்கிய காட்சியையும் மறக்க முடியாது.இலங்கை அணி மைதானத்தின் எல்லையை அடைந்ததும் இந்திய பாதுகாப்பு படையினர் அணியை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக அவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றும் காட்சியும் இன்றும் நினைவில் இருக்கின்றது. அதே வேளை, 29 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் நின்ற வினோத் காம்ப்ளி அழும் காட்சியையும் நினைவில் இருந்து அழிக்க ஏலாது. 1996 உலகக்கிண்ணப் போட்டியில் டெண்டுல்கரை தவிர இந்திய அணிக்காக சதம் அடித்த ஒரே ஒரு துடுப்பாட்ட வீரர் வினோத் காம்ப்ளி தான். பல வருடங்களுக்குப் பின்னர், தனது கிரிக்கெட் வாழ்க்கையை அளவுக்கு அதிகமான மது பழக்கத்தால் தானே அழித்துக் கொண்ட வினோத் காம்ப்ளி இந்த அரையிறுதி ஆட்டத்தை இந்தியா match fixing ஆல் தான் தோற்றது என்று பேட்டியளிப்பார். இன்று இருபத்தைந்து வருடங்கள் கழித்தும், இந்த ஆட்டம் பற்றிய நினைவுகள் பசுமையாகவே உள்ளன. இலங்கையின் கிரிக்கெட்டை மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டையே புரட்டிப் போட்ட ஆட்டத்தை காலங்கள் கடந்தாலும் மறக்கவே முடியாது.

இதையும் படிங்க

பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300...

இந்தியா நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது!

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட்...

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது!

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள...

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

இரு பெண் பிள்ளைகளை கொலை செய்த இலங்கை தாய் | இத்தாலியில் பயங்கரம்

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு...

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

தொடர்புச் செய்திகள்

பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300...

புதிய அவதாரம் எடுத்த அமலா பால்!

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர்,...

இந்தியா நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது!

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்

விக்ரம் படத்தில் ஏற்கனவே பகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், காளிதாஸ் ஜெயராம் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

இசுலாமியரென்பதாலேயே ஷாருக்கான் மகன் மீது குறி வைப்பதா? | சீமான்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் இசுலாமியர் என்பதாலேயே அரசதிகாரம் அவர் மீது குறிவைக்கிறது என கடும் கண்டனத்தை நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மேலும் பதிவுகள்

சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் | தயாரிப்பாளர் புகார்

சிம்பு நடித்த அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். பட அதிபர் மைக்கேல்...

நெதர்லாந்தை சுருட்டிப்போட்ட இலங்கை !

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் இறுதிப்போட்டியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது!

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம்...

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

டி20 உலகக் கோப்பை | தென் ஆப்பிரிக்க அணியை 118 ஓட்டங்களால் கட்டுப்படுத்திய ஆஸி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 118 ரன்கள் எடுத்தது.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் | வைரலாகும் புகைப்படம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிந்திய செய்திகள்

பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300...

புதிய அவதாரம் எடுத்த அமலா பால்!

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர்,...

இந்தியா நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது!

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட்...

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது!

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள...

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

குழந்தைகளை தனித்து செயல்பட அனுமதியுங்கள்…

குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும்.

துயர் பகிர்வு