Monday, November 29, 2021

இதையும் படிங்க

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதிக்கு அழைப்பு!

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா-...

இந்தியா -மேற்கு வங்கத்தில் இடம் பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் 35 பேர்...

நாளை உருவாகும் காற்றழுத்தம் | புயல் சின்னமாக மாற வாய்ப்பு

வருகிற 2, 3-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு...

குழந்தையின் நீதியை வலியுறுத்தும் கதை | ரூபாய் 2000

நடிகர்நடிகர் இல்லைநடிகைநாயகி இல்லைஇயக்குனர்ருத்ரன்இசைஇனியவன்ஓளிப்பதிவுபிரிமூஸ் தாஸ் விவசாயி அய்யநாதனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின், அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. அந்த...

இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் நூல் பிரதமரிடம் கையளிப்பு!

“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் கதை” நூல் அதன் ஆசிரியர் குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி அவர்களினால் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

பதிவு -3🌷🌷🌷 சங்க இலக்கியம்🌷🌷🌷🌷🌷🌷🌷 புறநானூறு பாடல் - 9🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஆசிரியர்

இலங்கையில் திருவள்ளுவர் திருநாள் விழா எடுத்தோர் | தமிழரசி

திருவள்ளுவர் திருநாள் விழா எடுத்தோர்

              அநுராதபுரத்தில் நடந்த திருக்குறள் மாநாடு [திருவள்ளுவர் திருநாள்] மலர் 1955              

  ஈழத்தில் வாழ்ந்த அறிஞர்கள் பலர் தமிழை வளர்ப்பதற்காகப பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தமிழக அறிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சி வை தாமோதரம்பிள்ளை, நாவலர் பெருமான் போன்றோரைச் சொல்லலாம். அவர்களைப்போல தமிழக அறிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் மாமனெல்லையில் வாழ்ந்த நமசிவாய முதலியார். அவர் மானிப்பாயில் பிறந்த போதும் கொழும்பு, கண்டி, மாமனெல்லை என வாழ்ந்ததால் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குடத்துள் விளக்காயின போலும்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் படித்து அதன்மேல் காதல் கொண்டோர் பலராவர். அந்தக் காதலால் ஒருசிலர் திருவள்ளுவரைப் புகழ்ந்துபாட சிலர் சிலை வைத்தனர். இன்றும் அது தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஆனால் தமிழரை, உலகை ஒன்று படுத்தவும்  பண்டைத் தமிழரின் பண்பாட்டை, நனிநாகரிகக் கொள்கையை உலகறியச் செய்யவும் திருக்குறளே சிறந்தது என ‘நமசிவாய முதலியார்’ எண்ணினார். 

அதனால் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் திருநாளான வைகாசி மாத அனுட நாளில் ‘திருவள்ளுவர் விழா’ கொண்டாட முடிவெடுத்தார். ஏனெனில் ‘திருமயிலையில் [மயிலாப்பூர்] உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் வைகாசி அனுடத்தை திருவள்ளுவர் நாளாகச் சிறப்பித்துக் கொண்டாடும்’ குறிப்பொன்று அவரது வீட்டிலிருந்த பழைய திருக்குறள் புத்தகத்தில் இருந்தது. அதனை ஆதாரமாகக் கொண்டு ‘வைகாசி அனுட நாளை’ திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டார். 

திருவள்ளுவர் கழகம் என்ற பெயரில் ஒரு கழகத்தை உருவாக்கி திருவள்ளுவர் விழாவை’ 1927ம் ஆண்டு வைகாசி மாதம் அனுட நாளில் 17ம் திகதி [17-05-1927] கண்டியில் கொண்டாடினார். அதற்கான விழா மலரும் வெளியிட்டிருந்தார். அவ்விழா ‘கண்டிப் பெரகராவுக்கு’ அடுத்த நாள் நடைபெற்றது. அவ்விழாவுக்கு தமிழகத்திலிருந்து வடிவேலு செட்டியாரும் வந்திருந்தார். வடிவேலு செட்டியார் திருக்குறளின் பரிமேலழகர் உரைக்குத் தெளிவுரை எழுதியவர். அவர்களது முயற்சியால் தமிழ்நாட்டின் சில இடங்களிலும் அதே நாளில் ‘திருவள்ளுவர் விழா’ கொண்டாடினர். நமசிவாய முதலியார் இறந்ததால் அவரது முயற்சி மெல்ல மறக்கப்பட்டது.  ஆனால் தென்காசி திருவள்ளுவர் கழகமும் திருகோணமலை திருவள்ளுவர் கழகமும்   புங்குடுதீவு வல்லன் திருவள்ளுவர் கழகமும் அதனை மறக்காது கொண்டாடியதாம். இக்கழகங்கள் 1927ல் தொடங்கப்பட்டவை. தென்காசி திருவள்ளுவர் கழகம் இன்றும் இயங்குகின்றது என நினைக்கிறேன். 

இலங்கையைச் சேர்ந்த நமசிவாயமுதலியாரே முதன் முதலில்[1927]ல் ‘திருவள்ளுவர் விழா’ எடுத்தவர் ஆவார். அதனால் எமக்கெல்லாம் முன்னோடியாய் வழிகாட்டியாய் திகழ்கிறார். இவரின் தந்தை மானிப்பாய் உலகநாதர் பரம்பரையைச் சேர்ந்தவர். தாயார் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரும் மறைமலை அடிகளும் தாய்வழி உறவு முறையினர். இவர் பஞ்சதந்திரம் போன்ற தமிழ், சமஸ்கிருத நூல்களை சிங்களத்தில் மொழி பெயர்த்தார். அதனால் 1901ல் மதுரைத் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அச்சங்கத்தார் இவரை பலமுறை அழைத்து மதிப்பளித்தனர்.

இவரது காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த கா நமச்சிவாயமுதலியர் 1935ல் திருவள்ளுவர் திருநாள் கழகம்  ஒன்றை அமைத்து வைகாசி மாதம் 18ம் 19ம் திகதிகளில் [18, 19-05-1935] சென்னையில் திருவள்ளுவர் திருநாள் விழாவை நடாத்தினார். அதுவும் வைகாசி அனுடத்திலேயே கொண்டாடப்பட்டது. தமிழகத்து நமச்சிவாய முதலியாரின் முயற்சியால் கொண்டாடப்பட்டு வந்த ‘திருவள்ளுவர் திருநாள் விழாவும்’ கால ஓட்டத்தில் மெல்ல மங்கியது.

மீண்டும் இலங்கையில் திருவள்ளுவரைப் போற்றுதற்காகத் தமிழ் மறைக் கழகம் 1952ல் கொழும்பில் தொடங்கப்பட்டது. ‘தமிழ் மறைக்கழகம்’ வித்துவான் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களின் எண்ணத்தின் உருவம் அது. அவரும் பண்டிதர் மு ஆறுமுகனும் ஆண்டு தோறும் வைகாசி அனுட நாளில் ‘திருக்குறள் மாநாடு’ என்ற பெயரில் திருவள்ளுவருக்கு விழா நடாத்தி வந்தனர். தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ்  போன்ற இடத்தில் வாழ்ந்த தமிழரையும் ஒருங்கிணைத்து வைகாசி அனுட நாளை திருவள்ளுவர் திருநாளாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வெற்றியும் கண்டனர்.

தமிழ்மறைக் கழகத்தின்  முதலாவது ‘திருக்குறள் மாநாடு’ 28, 29, 30-05-1953ல் திருகோணமலை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இரண்டாவது ‘திருக்குறள் மாநாடு’ 16, 17, 18-05-1954ல் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மூன்றாவது ‘திருக்குறள் மாநாடு 04, 05-06-1955ல் அனுராதபுர விவேகானந்தக் கல்லூரி மண்டபத்தில்  நடைபெற்றது. திருக்குறள் ஏட்டுச்சுவடியை கதிரேசன் கோயில் யானையின் அம்பாரியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த திருக்குறள் மாநாடு நடந்த பொழுது தமிழ்மறைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினராய் இருந்தோரே மேலே படத்தில் இருப்போர். அவர்களில் எத்தனை பேர் தீவுப்பகுதியைச் சேர்ந்தோர் என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

அதில் இருப்பவர்களில் சுதந்திரன் ஆசிரியர் எஸ் டி சிவநாயகம், ஆசிரியர் இ சி சோதிநாதன் (எனக்கு ஏடு தொடக்கிய குரு), பண்டிதர் கா பொ இரத்தினம் (பேரனார்), பண்டிதர் மு ஆறுமுகன் (தந்தை), சி. க நடராசா (பேரனார்), வித்துவான் ச சபாபதி, கு வி செல்லத்துரை (உறவினர்) போன்றோர் நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே என் மேல் அன்பைச் சொரிந்தோராவர். அவர்களது அன்பும் ஆசியும் நான் ‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி’ என்ற நூலை எழுதக் காரணம் எனலாம்.

அநுராதபுரத்தில் நடந்த மாநாட்டைப் பற்றி பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் இறந்த பொழுது, பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் அவர்கள் (நீர்வேலி), “பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றுத் தமது இல்லத்தில் உணவும் தங்குமிடமும் கொடுத்து உதவிய காட்சி இன்றும் மனக்கண் முன் நிழலாடுகின்றது. அவருடைய அருமை மனைவியாரும் அவருடன் சேர்ந்து அனைவரையும் உபசரித்தமை எல்லோருடைய மனத்தையும் கவர்ந்திருந்தது” என எழுதியிருந்தார். அதற்குப் பின்னர் அநுராதபுரத்தில் அத்தகைய ஒரு தமிழ்மாநாடு நடக்கவேயில்லை. இனி நடக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

                                                    1955

1955ம் ஆண்டு தமிழ் மறைக் கழகம் வெளியிட்ட திருவள்ளுவர் திருநாள் மலர் முதற்பக்கத்தில் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் எழுதியதை இப்படம் காட்டுகிறது. அவர் அதை எழுதி 65 ஆண்டுகள் ஆகியும் நம்மில் எத்தனை பேர் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாளாகிய வைகாசி அனுடத்தை ஒவ்வொருவர் வீட்டிலும் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்? இதற்காக பலநாட்டு தமிழறிஞர்களும் 1927ல் இருந்து பாடுபட்டு பாதுகாத்த நாளை குழி தோண்டி புதைத்துத்துள்ளோம். 

வள்ளுவர் திருநாளை கருணாநிதிக்காக தை மாதத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறோம். செல்லரித்துக் கிடந்த சங்க இலக்கியநூல் ஏடுகளை அச்சிட்டு தமிழ் அன்னைக்கு செழுமை சேர்த்தவர் உ வே சுவாமிநாதையர். அவரும் அவர் போன்ற பலரும் திருவள்ளுவர் வைகாசி அனுடத்தில் பிறந்து, மாசி உத்திரத்தில் முத்தியடைந்தார் என்று எடுத்துச் சொல்லியும் எம் காதுகள் கேட்காது இருப்பது ஏனோ! 1927ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் திருவள்ளுவர் விழா வைகாசி அனுடத்தில் [கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக] கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. பழைய மெய்கண்டான் நாட்காட்டியிலும் [Calendar] வைகாசி அனுடமே திருவள்ளுவர் நாளாக குறிக்கப்பட்டிருந்ததை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். எப்படி தை மாதத்திற்கு அந்நாள் மாறியது?


‘திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு’ விழாவும் ‘தமிழ்மறைக் கழகத்தின் பதினாறாவது’ மாநாடும் கிளிநொச்சியில் 1969ல் வைகாசி அனுடத்திலேயே நடாத்தப்பட்டது. அம்மாநாட்டையும் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களும் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களும் ஒன்று சேர்ந்தே மிகச்சிறப்பாக நடாத்தினர். அப்போது பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்கள் கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். திருவள்ளுவர்  ஈராயிர ஆண்டு மலரில் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் “வாழ்வில் துன்பந் தொடும் போதெல்லாம் அறிஞர்கள் வள்ளுவதேவரைச் சரணடைகின்றனர்அவர் திருவாய் மலர்ந்த ஆயிரத்து முன்னூற்று முப்பது அருந்தேன் குறள் மலரிலும் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கின்றதுஎமது குழந்தைகளும் சீரிய வாழ்வு வாழ வேண்டுமானால் வள்ளுவர் தந்த வான்மறையைப் போற்றி அதன்படி ஒழுகி எல்லா உயர்வுகளையும் அடைவார்களாக!” என எழுதியிருந்தார். 

தமிழ் மறைக்கழகம் தொடங்கிய நாளில் இருந்து நாடெங்கும் திருக்குறள் போட்டிகள் நடாத்தி பரிசுகள் வழங்கிய பெருமையும் இக்கழகத்திற்கு உண்டு. அதற்காகத் திருக்குறளைப் படித்தோர் பலராவர் “வான்மறை தந்த வள்ளுவன் வழி வாழ்ந்தால் தமிழர் வாழ்வாங்கு வாழலாம்” என எண்ணியே நம்முன்னோர் 1927ல் இருந்து திருவள்ளுர் விழா கொண்டாடினர். இன்று எத்தனை பேர் திருவள்ளுவரை நினைக்கிறோம்?

சிலப்பதிகாரத்திற்கு மட்டுமல்ல திருவள்ளுவருக்கு விழா எடுத்த பெருமையும் புங்குடுதீவாருக்கு உண்டு. புங்குடுதீவு வல்லனில் 1927ல் தொடங்கிய ‘திருவள்ளுவர் கழகம்’ அங்கு இப்பொழுதும் இருக்கிறதா? அறிந்தவர்கள் எவராவது சொல்லுங்களேன்.

இனிதே,

தமிழரசி.

இதையும் படிங்க

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம்!

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து...

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

தொடர்புச் செய்திகள்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம்!

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து...

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

டேவிஸ் கிண்ண டென்னிஸிலிருந்து வெளியேறியது நடப்புச் சம்பியன் ஸ்பெய்ன்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஆடவருக்கான உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் ஏ குழு போட்டியில் ரஷ்யாவிடம் தோல்வி அடைந்த நடப்பு உலக சம்பியன் ஸ்பெய்ன், போட்டியிலிருந்து...

வீதிகளில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் வசமாக சிக்கினர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இறக்ககாமம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்பவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு | சீரற்ற காலநிலை தொடரும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அத்தோடு 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும்...

மேலும் பதிவுகள்

தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் 32 தொழிற்சங்கங்கள்

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை பதினாறாயிரத்தால்  அதிகரிக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது. 

LPL | இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரினை நேரில் பார்வையிடுவதற்கு வரையறுக்கப்பட்ட ரசிகர்களுக்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில்  ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட  ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர்  மிலேச்சத்தனமான  திட்டமிட்ட   தாக்குதலை    மேற்கொண்டு சித்திரவதையை  புரிந்துள்ளனர்.

மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு...

புதிய களனிப் பாலம் நாளை திறப்பு

இலங்கை முதல் முறையாக அதி சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பி இணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனிப் பாலத்தை ஜனாதிபதி கோத்தபாய...

பிரிட்டன் அமைச்சருடன் நல்லிணக்கம் தொடர்பில் சுமந்திரன் பேச்சுவார்த்தையாம்

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்களின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் தெற்காசியப்பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக்...

பிந்திய செய்திகள்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம்!

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து...

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

துயர் பகிர்வு