கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதில் ரஷ்யா தீவிரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிப்பதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகின்றது.

இது குறித்து ரஷ்யா மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இந்தியாவிலும் இதன் உற்பத்தியைத் தொடங்கலாம் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி  மருந்து தயாரிப்புக்கு நிதிவழங்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிமிட்ரேவ் இந்தியாவிலும் மருந்து உற்பத்தியைத் தொடங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து  தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடி தமது பேச்சில் இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்வதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.  ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் இருப்பதாக தெரிவித்த அவர், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான சாத்தியங்கள் இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கான மருந்து தயாரிக்கும் போட்டியில் பாதுகாப்பு பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாக வந்த விமர்சனங்களையும் புறந்தள்ளிய டிமிட்ரேவ்  ரஷ்யா தயாரிக்கும் தடுப்பு மருந்து பாதுகாப்பானது எனவும் உறுதியளித்துள்ளார்.

ஆசிரியர்