அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஸென்கா எனும் மருந்து உற்பத்தி நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இந்த நிலையில், குறித்த தடுப்பூசி, பரிசோதனைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தால், அதனை தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால், கொரோனா தடுப்பூசி ஏற்றுவதை கட்டாயமாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்