சீயோலிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

தென்கொரியா தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளமையினைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

சீயோல் நகரில் கடந்த 2 வாரங்களில் 200 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது

இதனை அடுத்து சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது

எனினும் இணைய வழி மூலமாக கற்கை நெறிகள் எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என தென்கொரிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள அதேவேளை, சில நாடுகளில் பகுதியளவில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்