ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கோமாவிலிருந்து மீண்டார்!

நச்சு வேதிப்பொருள் தாக்கத்துக்கு ஆளாகிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதனை, அவரது செய்தித்தொடர்பாளர் கிரா யார்மிஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

44 வயதாகும் நவால்னியிடம், வாய்மொழியாக கேட்கப்படும் கேள்வியை அவரால் உணர முடிவதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடலில் கலந்துள்ள நச்சு இரசாயனம் எந்த அளவுக்கு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதைய சூழலில் அனுமானிக்க முடியாது என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னதாக, நவால்னியின் உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவலை அவரது செய்தித்தொடர்பாளர் கிரா யார்மிஷ் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சிக்கும் 44 வயதான அலெக்ஸி நவல்னி, கடந்த 20ஆம் திகதி சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குறிடித்த சூடான திரவத்தில் விஷம் கலந்திருப்பதாக சந்கேதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அலெக்ஸி நவல்னியின் குடும்பத்தினர், ரஷ்யாவில் நவல்னியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அவரை ஜேர்மனிக்கு கொண்டு செல்ல விரும்பினர். தற்போது ஜேர்மனியில் பெர்னிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனிடையே, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவான்லியின் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் பெர்லின் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென அலெக்ஸியின் ஆதரவாளர்களும், உலக நாடுகளும் கோரி வருகின்றன.

ஆசிரியர்