இஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பு!

கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ஒரு புதிய தேசிய முடக்கநிலையை விதிக்க உள்ளது

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு தேசிய முடக்கநிலையை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த முடக்கநிலையினால், முக்கியமான யூத விழா தடைபடும் என்பதால், கட்டுப்பாடுகளை எதிர்க்கும் வகையில் ஒரு அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார்.

செப்டம்பர் 27ஆம் திகதி யூத நாட்காட்டியின் புனிதமான நாளான யோம் கிப்பூர் உள்ளிட்ட யூத மக்கள் தங்கள் மத விழாக்களைக் கொண்டாடுவதைத் தடுக்கும் என்று தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதக் கட்சியை வழிநடத்தும் உட்கட்டமைப்பு அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மேன் தெரிவித்தார்.

ஆளும் கூட்டணியில் இருந்து தனது கட்சியை வெளியேற்றுவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.

இஸ்ரேலில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 156,596பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,119பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியர்