Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆஸ்திரேலியாவில் மிகுந்த அடிமைத்தனத்தில் பெண்கள் | ஐ.நா. அறிக்கை

ஆஸ்திரேலியாவில் மிகுந்த அடிமைத்தனத்தில் பெண்கள் | ஐ.நா. அறிக்கை

2 minutes read
11 Reasons Why We Love Australian People

உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என  ‘Stacked Odds’ என்ற ஐ.நா.வின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை ஐ.நா.வின் அங்க அமைப்புகளான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது. 

இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும் கூடுதலானது என்றும் கூறப்படுகின்றது. 

“எதார்த்தம் என்னவென்றால் மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் விட தற்போது அடிமைத்தனத்தில் பெரும் அளவிலான மக்கள் வாழ்கின்றனர்,” எனக் கூறியுள்ளார் அடிமைத்தனத்திற்கு எதிரான Walk Free அமைப்பின் இணை நிறுவனர் கிரேஸ் பார்ரஸ்ட். 

மொத்தம் பாதிக்கப்பட்டுள்ள பெண்களில் 99 சதவீதமான பெண்கள் கட்டாய பாலியல் சுரண்டல், 84 சதவீதமான பெண்கள் கட்டாயத் திருமணம், 58 சதவீதமான கட்டாய உழைப்பில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை. 

“நாம் தினமும் வாங்கி பயன்படுத்தும் உடை, காபி, தொழில்நுட்பம் உள்ளி விநியோக சங்கிலியில் பெண்கள் எதிர்ப்பார்க்காத சுரண்டல் மற்றும் கட்டாய உழைப்புக்கு ஆளாகின்றனர்,” என்கிறார் கிரேஸ் பார்ரஸ்ட். 

நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கக்கோரி Walk Free மற்றும் ஐ.நா.வின் Every Woman Every Child திட்டத்தின் கீழ் உலகளாவிய பிரசாரத்தை தொடங்குவதாக பார்ரஸ்ட் கூறியிருக்கிறார். இதன் மூலம் 136 நாடுகளில் இன்னும் குற்றமாக கருதப்படாத குழந்தை மற்றும் கட்டாய திருமணத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Report by,

Migration Correspondent, 

AMWW

ஆட்கடத்தல்/ இடப்பெயர்வு காரணமாக உலகெங்கும் பல்வேறு சிக்கல்கள் உருவாகி வருகின்ற இச்சூழலில், அது தொடர்பான புரிதலைப் மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்துடன் இச்செய்தி தங்கள் செய்தி நிறுவனத்திற்குப் பகிரப்படுகின்றது. செய்தித் தொடர்பாகச் சந்தேகம் ஏதேனும் இருப்பின் இந்த மின்னஞ்சல் வழியே தொடர்புக் கொள்ளலாம். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More