Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பைடன் – கமலா ஹாரிஸுக்கு குவியும் உலகத் தலைவர்களின் வாழ்த்துக்கள்!

பைடன் – கமலா ஹாரிஸுக்கு குவியும் உலகத் தலைவர்களின் வாழ்த்துக்கள்!

5 minutes read

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாகவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அந்த கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸ் முன்நிறுத்தப்பட்டார்

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் அந்த கட்சியின் துணை ஜனாதிபதி வேட் பாளராக இந்தியாவை பூர்வீக மாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். 

கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள் முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக் களிப்பது இல்லை. அதற்கு பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர்குழு) உறுப்பினர்களுக்கு வாக் களிப்பார்கள். 

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்கு ளை பெறும் வேட்பாளர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும்.

கடந்த 3 நாட்களாக தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடித்து வந்தது. பெரும்பான்மையான மாகாணங்களில் முடிவுகள் தெரிந்த நிலையில் ஜோ பைடனுக்கு 264 வாக்குகளும், டொனால்ட் ட்ரம்புக்கு 214 வாக்குகளும் கிடைத்திருந்தன.

ஜோர்ஜியா, பென்சில்வேனியா, நவேடா, அரிசோனா, நார்த் கரோ லினா ஆகிய 5 மாநிலங்களில் முடிவுகளில் இழுபறி நீடித்தது. அந்த மாகாணங்களில் வாக்குகள் மிகவும் பொறுமையாக எண்ணப் பட்டன. ஜோர்ஜியா மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடை பெற்று வருகிறது.

இந்த பின்னணியில் பென் சில்வேனியா, நவேடா மாநிலங்களில் நேற்றிரவு ஜோ பைடன் கைப்பற்றினார். பென்சில்வேனியா வின் 20 வாக்குகள், நவேடாவின் 6 வாக்குகளும் பைடனுக்கு கிடைத்தது. 

இதன்மூலம் அவர் 290 வாக்குகளை பெற்றார். அதனால் பெரும்பான்மையை எட்டிய அவர் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதுடன் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

இந் நிலையில் உலகத் தலைவர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே

கனட அரசாங்கத்தின் சார்பாக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் முறையே அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது கனடாவும் அமெரிக்காவும் ஒரு அசாதாரண உறவைக் கொண்டுள்ளன. 

எனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாரிஸ் ஆகியோரின் நிர்வாகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய சவால்களை நாங்கள் ஒன்றாக எதிர்கொள்வோம்.

ஜேர்மேனியத் தலைவர் அங்கெலா மேர்க்கெல்

டிரான்ஸ் அட்லாண்டிக் நட்பை “ஈடுசெய்ய முடியாதது” என்பதுடன் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

அமெரிக்கா ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவுசெய்யப்பட்டமைக்கும், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் வரலாற்று சாதனைக்கும் வாழ்த்துக்கள்.

அமெரிக்கா எங்கள் மிக முக்கியமான நட்பு நாடு, காலநிலை மாற்றம் முதல் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு வரை எங்கள் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து நெருக்கமாக ‍ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு அன்பான வாழ்த்துக்கள். ஜப்பான்-அமெரிக்க கூட்டணியை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பை உறுதிப்படுத்த உங்களுடன் பணியாற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன்

அமெரிக்கர்கள் தங்கள் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆகவே ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இன்றைய சவால்களை சமாளிக்க தங்களின் அநேக ஒத்துழைப்பு அவசியம். ஒன்றாக பணியாற்ற நாங்கம் விரும்புகிறோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

உங்கள் அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களை வெற்றிப்பயணம், திருப்பம் நிறைந்தது. இது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமின்றி எல்லா இந்திய-அமெரிக்கர்களுக்கும் மிகச்சிறந்த பெருமை தரும் விஷயமாகும். துடிப்புமிக்க இந்திய, அமெரிக்க தொடர்புகள் உங்களுடை ஆதரவு மற்றும் தலைமையால் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.

இந்தோ-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் அமெரிக்காவின் பங்களிப்பு முக்கியமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது. இந்தியா-அமெரிக்க உறவுகளை அதி உச்சத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் பைடனுடன் பங்கேற்கும் நாளை எதிர்பார்த்துள்ளேன். 

சட்டவிரோத வரி ஏய்ப்பு மற்றும் தேசத்தின் வளங்களைச் சுரண்டும் ஊழல் தலைவர்களின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும் பைடனுடன் இணைந்து பணியாற்றும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். 

அத்துடன் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் அமைதியை பராமரிக்க அமெரிக்காவுடன் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும்.

ஐரோப்பிய ஒற்றிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கு நான் அன்புடன் வாழ்துகிறேன். விரைவில் அவரைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளேன்.

“ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள், எங்கள் குடிமக்கள் ஆழமான ஒத்துழைப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், புதிய சவால்களும் வாய்ப்புகளும் தோன்றும்போது, எங்கள் புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மை குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

நேட்டோ செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் அன்புடன் வரவேற்கிறேன். பைடனை நேட்டோ மற்றும் அட்லாண்டிக் உறவின் வலுவான ஆதரவாளராக நான் அறிவேன். 

மேலும் வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் மற்றும் புதிய நிர்வாகத்துடன் மிக நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்த்துள்ளேன்.

ஈரான் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளர் ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்கள்

ஈராக்கையும் அமெரிக்காவையும் பிணைக்கும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.

டச்சு பிரதமர் மார்க் ரூட்

டச்சு அமைச்சரவை சார்பாக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் நாடுகளுக்கு இடையிலான வலுவான பிணைப்பைத் தொடர நாங்கள் எதிர்பார்த்துள்ளோம், இது தொடர்பான விடயங்கள் குறித்து விரைவில் பைடனுடன் கலந்துரையாடவுள்ளேன்.

நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்

நோர்வே அரசாங்கத்தின் சார்பாக ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை நான் வாழ்த்துகிறேன். ஐக்கிய அமெரிக்கா நோர்வேயின் முக்கியமான நாட்பு நாடாகும். நாங்கள் பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாக இணைந்து செயற்பட்டுள்ளோம்.

உலகளாவிய முக்கிய சவால்களை தீர்க்க உலகிற்கு அமெரிக்க தலைமை தேவை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பைடன் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளும் இதில் அடங்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More