பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 39ஆயிரத்து 036பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 574பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 21இலட்சத்து 88ஆயிரத்து 587பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 69ஆயிரத்து 625பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 529பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.