Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஜப்பானுக்கு வெளிநாட்டினா் செல்ல தடை

ஜப்பானுக்கு வெளிநாட்டினா் செல்ல தடை

1 minutes read
ஜப்பான் பற்றி தெரிந்து கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்! - Lankasri News

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வகை கரோனா ஜப்பானில் பரவுவதைத் தவிா்ப்பதற்காக, அனைத்து நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினா் நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை தொடங்கி வரும் 31 ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதிய வகை கரோனா அச்சம் காரணமாக பிரிட்டன் மற்றும் தென் கொரியாவிலிருந்து மட்டும் வெளிநாட்டினா் வருவதற்கு ஜப்பான் தடை விதித்திருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More