இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வைத்தியசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியுள்ளன. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நிலநடுக்கத்தின் போது வைத்தியசாலை ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது.
அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் என பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் விரைந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.