Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இந்தோனேசியாவில் வெடித்தது எரிமலை

இந்தோனேசியாவில் வெடித்தது எரிமலை

1 minutes read
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு சுனாமி தாக்குதல் 43 பேர் பலி – 584 பேர்  காயம் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

இந்தோனேசியாவில் செமெரு என்ற எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற அனர்த்தங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

இங்கு, எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 130 எரிமலைகள் உள்ளன.

இந்நிலையில் அதிக மக்கள் தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீற்றர்  உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து 5.6 கிலோமீற்றர்  உயரத்துக்கு சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது.

எரிமலை வெடிப்பு காரணமாக அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.‌ மேலும் எரிமலையில் இருந்து வரும் சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More