Monday, March 8, 2021

இதையும் படிங்க

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்!

யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞரொருவர், சிசிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றதாக...

யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து கண்டு பிடிப்பு!

யாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே...

சர்வதேச மகளிர் தினம் – விவசாயிகளின் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்களும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்களை கௌரவப்படுத்தும்...

7 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது !

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்தன. அதன்படி,...

உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம்!

உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1789ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற...

மனதை அடக்க ஒற்றைச் சொல் தியான முறை எளிதான ஒரு தந்திரம்

மருந்துகளும் அதனால் வரும் பக்க விளைவுகளும் மலிந்து போன இந்த காலகட்டத்தில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க ஒற்றைச் சொல் தியான முறையிலிருந்து புது வாழ்க்கையை தொடங்குவோம்.தியானம்ஒற்றைச் சொல் தியானம்...

ஆசிரியர்

ரஷ்யாவின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் நவல்னியின் மனைவி உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிக முக்கிய அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய ரீதியான ஆர்ப்பாட்டங்களின் போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சனிக்கிழமை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த தகவலை ரஷ்யாவின் அரசியல் தடுப்புக் காவல்களைக் கணக்கிடும் ஒரு குழு உறுதிப்படுத்தியுள்ளது.

மொஸ்கோவின் நகர மையத்தில் உள்ள புஷ்கின் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், அங்கு பொலிசாருடன் மோதல்கள் வெடித்தன. இதன் விளைவாக தடியடி தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டனர். 

அது மாத்திரமன்றி பலர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பஸ்கள் மற்றும் தடுப்புக்காவல் லொறிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் நவல்னியின் மனைவி யூலியாவும் உள்ளடங்குவார்.

பொலிசார் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை சதுக்கத்திலிருந்து வெளியேற்றினர். ஆயிரக்கணக்கானோர் பின்னர் ஒரு கிலோமீட்டர் (அரை மைல்) தொலைவில் உள்ள ஒரு இடத்தில் மீண்டும் அணிதிரண்டனர்.

அவர்களில் பலர் கலைக்கப்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் மீது பனிப்பந்துகளை வீசினர்.

பின்னர் சிலர் நவல்னி சிறை வைக்கப்பட்டுள்ள சிறை அருகே போராட்டத்திற்கு சென்றனர். காவல்துறையினர் அங்கு தீர்மானிக்கப்படாத எண்ணிக்கையிலான கைதுகளை மேற்கொண்டனர்.

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ரஷ்யாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மொஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்ததுடன், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜேர்மன் முன்வந்தது. உடனே ரஷ்ய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளானதாக ஜேர்மன் வைத்தியர்கள் தெரிவித்தனர். 

தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.

தொடர் சிகிச்சையால் அலெக்ஸி நவல்னி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

ஆனாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜேர்மனிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தன்மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் புட்டின் மீதே குற்றம் சுமத்தின.

இதற்கிடையே, கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி தான் மீண்டும் ரஷ்யாவுக்கு செல்வதாக அறிவித்தார். அதன்படி, ஜேர்மனில் இருந்து விமானம் மூலம் கடந்த 18 ஆம் திகதி ரஷ்ய  தலைநகர் மொஸ்கோ வந்தடைந்த அவரை, விமான நிலையத்தில் ரஷ்ய ‍பொலிஸார் கைது செய்தனர்.

இந் நிலையிலேயே நவல்னியை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மொஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ஆயிர்க்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க

மகளிர் தினத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்தை கலக்கிய பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திங்களன்று டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்தனர். விவசாய உற்பத்தி...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து புதன்கிழமை விவாதம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த விவாதத்தை 10ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

சீனி இறக்குமதி- 10 பில்லியன் மோசடி!

மத்தியவங்கி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் தற்போதைய அரசாங்கம் விசாரணையைத் தொடங்கத் தவறிவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தற்போது சீனி...

அ.தி.மு.க. வின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்!

அ.தி.மு.க. வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில், இம்மாதம் 5ம் திகதி முதல் கட்டமாக ஆறு தொகுதிகளுக்கு...

மு.க.ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து செய்தி!

தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்...

தொடர்புச் செய்திகள்

மகளிர் தினத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்தை கலக்கிய பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திங்களன்று டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்தனர். விவசாய உற்பத்தி...

ஆப்பிள் வினிகரை பயன்படுத்தும்போது இதை மறக்காதீங்க…

ஆப்பிளில் இருக்கும் சர்க்கரையை நொதிக்க வைத்து ஆப்பிள் வினிகர் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை ஆப்பிளை அசிடிக் அமிலமாக மாற்றுகிறது. ஆப்பிள் வினிகர் உடல் எடையை குறைப்பதற்கும், சருமம் சார்ந்த தொற்று...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து புதன்கிழமை விவாதம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த விவாதத்தை 10ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்

ஒரு காலத்தில் இஸ்லாமிய அரசுக்கு கோட்டையாக இருந்த வடக்கு ஈராக் நகரத்தில் பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை மொசூலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.

2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாக சபை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. 

கரீபியன் நோக்கி புறப்பட்ட மேலும் 5 இலங்கை வீரர்கள்

மேற்கிந்தியத்தீவுகளுடனான கிரிக்கெட் தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணியின் மேலும் ஐந்து வீரர்கள் நேற்றிரிவு கரீபியன் நோக்கி புறப்பட்டுள்ளனர். லஹிரு திரிமான்ன, தனஞ்சய டிசில்வா, ரோஷென் சில்வா,...

மேலும் பதிவுகள்

பட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

ஒரு காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.ஹன்சிகாதமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ்,...

பொருட்டாகுமா போராட்டங்கள் | ஆர்.ராம்

கட்டுரையாளர் - ஆர்.ராம்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பிலான தனது மீளாய்வு அறிக்கையை உத்தியோக பூர்வமாக சமர்ப்பித்து...

யாழில் குழந்தயை அடித்து துன்புறுத்திய தாயாருக்கு 20 ஆண்டு வரை சிறை?

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான தாயர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை முடியும் என...

அமெரிக்க, தாய்வானின் வலுவான உறவும் சீனாவின் போர் எச்சரிக்கையும்

அமெரிக்காவும் தாய்வானும் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு வருவதால், சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு சுதந்திரத்தை விரும்பும் மக்களை எச்சரித்துள்ளது. மேலும் “தாய்வான் சுதந்திரம்” தேடுவது என்பது...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு பதிலடி கொடுத்தது இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்திக்கொண்டது.

சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச...

பிந்திய செய்திகள்

மகளிர் தினத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்தை கலக்கிய பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திங்களன்று டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்தனர். விவசாய உற்பத்தி...

ஆப்பிள் வினிகரை பயன்படுத்தும்போது இதை மறக்காதீங்க…

ஆப்பிளில் இருக்கும் சர்க்கரையை நொதிக்க வைத்து ஆப்பிள் வினிகர் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை ஆப்பிளை அசிடிக் அமிலமாக மாற்றுகிறது. ஆப்பிள் வினிகர் உடல் எடையை குறைப்பதற்கும், சருமம் சார்ந்த தொற்று...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து புதன்கிழமை விவாதம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குறித்த விவாதத்தை 10ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

சீனி இறக்குமதி- 10 பில்லியன் மோசடி!

மத்தியவங்கி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் தற்போதைய அரசாங்கம் விசாரணையைத் தொடங்கத் தவறிவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தற்போது சீனி...

மருத்துவ குணம் நிறைந்த வல்லாரை கீரை பொரியல்!

நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

பரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவருக்கு...

துயர் பகிர்வு