கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அமுலுக்கு வந்த முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரமான அக்லாந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது.
அத்தோடு கொரோனா தொற்று உறுதியான எவரும் கடந்த வாரத்தில் இருந்து இன்றுவரை புதிதாக அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏறக்குறைய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நகரமான அக்லாந்தில், பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதியவகை தொற்று உறுதியானதை அடுத்து ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டது.
இருப்பினும் முடக்க கட்டுப்பாடுகளில் தளர்வுகள் இருந்தாலும் பொதுக்கூட்டத்திற்கும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் முக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
