அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்செஸ்டர் டவுன்ஷிப் நகரில் பற்றி எரியும் காட்டுத் தீ காட்சிகளை காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
லாஸ் ஏஞ்சலீஸின் வடகிழக்குப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் 5 ஏக்கர் அளவிலான காட்டுப் பகுதியில் பற்றி எரிந்த தீயானது, சில மணி நேரத்தில் சுமார் 400 ஏக்கர் அளவிற்கு பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ பரவலால் 170 கட்டிடங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
காட்டுத் தீ பற்றி எரியும் பகுதியை ஒட்டியுள்ள சாலை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் முயற்சியில் இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படி தீ பற்றியது என்பது தெரியாத நிலையில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சி மேலும் தீவிரமடைந்துள்ளது.